அமெரிக்க நிறவெறி அட்டூழியங்களை பற்றி சொல்லும் இன்னொரு படம். கொஞ்சம் பழைய படம் தான்... But worth watching....
படத்தின் முக்கிய அம்சம் நடிகர்கள்.. அதிலும் எனக்கு ரொம்பவே பிடித்த Samuel Jackson, Kevin Spacey(Se7en), Matthew McConaughey and Sandra Bullock(Speed) என திறமையான ஒரு பட்டாளம் உள்ளது.
அமெரிக்காவில் உள்ள மிஸிஸிபி மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய ஊரில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார் Carl Lee ( Samuel Jackson) . இவருடைய 10 வயது குழந்தை Tonya - வை இரண்டு வெள்ளையினத்தை சேர்ந்த அமெரிக்கர்கள் கற்பழித்து தூக்கில் மாட்டி விட்டு சென்று விடுகின்றனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து விடுகிறார்.
ஊரில் உள்ள இளம் வக்கீல் Jake Tyler (Matthew McConaughey) . இவர் Carl Lee - ன் நண்பரும் கூட. இவருடைய சக வக்கீல் மற்றும் நண்பர் Harry ( Oliver Platt) . இவர்கள் கம்பெனியில் எப்படியாவது உதவியாளராக சேர்ந்து விட வேண்டும் என துடிக்கும் பணக்கார இளம் பெண் Ellen ( Sandra Bullock) .
குற்றம் செய்த இளைஞர்களை கைது செய்கிறது போலீஸ். அடுத்த நாள் கோர்ட்டுக்கு கொண்டு வரும் போது ஊரே பார்க்கையில் இரண்டு பேரையும் கோர்ட்டில் வைத்தே போட்டுத் தள்ளுகிறார் Carl Lee.
அந்த ஊர் கோர்ட் உடனே கற்பழிப்பு கேஸை தூக்கிப் போட்டு விட்டு கொலை கேஸை விசாரணைக்கு எடுக்கிறது.
கற்பழிப்பு முழுவதுமாக மறக்கடிக்கப்பட்டு கருப்பினத்தவன் வெள்ளையின் இளையர்களை கொன்று விட்டான் என்று உருவகப்படுத்தப்படுகிறது.
இது போக ஜட்ஜ், எதிர்தரப்பு வக்கீல் Rufus ( Kevin Spacey) , Jurys என எல்லாருமே வெள்ளை இனத்தவர்கள்.
Jake Tyler - ஒவ்வொரு முறையும் கற்பழிப்பு பற்றி பேச முயற்சி செய்யும் போதும் நீதிபதியால் அடக்கப்படுகிறார். ஏனென்றால் அது வேற கேஸ் இது வேற கேஸ் என்று. கற்பழிப்பு பற்றி வாதாடவில்லை என்றால் Carl க்கு மரண தண்டனை நிச்சயம் என்ற நிலையில் எவ்வாறு இந்த விசாரணை செல்கிறது என்பது தான் படம்.
நீதிமன்ற காட்சிகள் செம பரபரப்பு. அனைவரும் நன்கு நடித்து உள்ளார்கள். ஒன்றுமே செய்ய முடியாமல் என்ன செய்யப்போகிறார் Jake என நினைக்கும் போது அவர் சொல்லும் கதை சிறப்பு. இந்தக் காட்சியில் Matthew McConaughey நடிப்பு ரொம்பவே அருமை... கண்கலங்க வைத்து விட்டார் ...
கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்..
IMDb Rating: 7.5/10
Available In Amazon Prime Video
Directed by
Joel Schumacher
Cast:
Sandra Bullock
Samuel L. Jackson
Matthew McConaughey
Kevin Spacey
Brenda Fricker
Oliver Platt
Charles S. Dutton
Donald Sutherland
Ashley Judd
Patrick McGoohan
Kiefer Sutherland
Music by
Elliot Goldenthal
கருத்துகள்
கருத்துரையிடுக