இது ஒரு மலையாள திரைப்படம். என்னமோ இந்த Signal சீரியல் பார்ததுல இருந்து இந்த Cold Case என்ற வார்த்தைகள் மேல் ஒரு ஈர்ப்பு... ட்ரெய்லர் நல்லா இருந்தது .. அது போக ப்ரித்விராஜ் போலீஸ் யூனிஃபார்ம்ல கலக்கலா இருந்தார். இது தவிர அருவி பட புகழ் அதிதி பாலன் ரொம்ப நாளைக்கு பிறகு நடிச்சு இருக்காங்க. படம் கொஞ்சம் பேய் படம் மாதிரியும் இருந்தது. ஆத்துல மீன் வலையில் ஒரு கருப்பு பாலிதீன் பேக் மாட்டுது. ஏதோ லம்பா கிடைச்சுருச்சுனு ஓபன் பண்ணி பார்த்த ஒரு மண்டை ஓடு இருக்குது. . இந்த கேஸ்ஸ விசாரிக்க குழ அமைக்கப்படுகிறது அதற்கு தலைவராக வரார் அசிஸ்டன்ட் கமிஷனர் சத்யஜித் ( பிரித்விராஜ்) . இவர் இன்ட்ரோ வித்தியாசமா நல்லாவே இருந்தது . ஃபுல் ஷேவ் மற்றும் ட்ரிம் பாடி என காக்கிச்சட்டைக்கு பக்காவாக பொருந்துகிறார். இன்னொரு பக்கம் டிவில பேய் புரோகிராம் பண்ற மேதா ( அதிதி பாலன் - அவங்க தான் அந்த அருவியே தான் ) . தன் குழந்தையுடன் ஒரு வீட்டிற்கு வாடகைக்கு போறாங்க.. அந்த வீட்ல நம்ம வடிவேல் சொல்ற மாதிரி பேய் பன்ற எல்லாமே நடக்குது. இதுக்கு என்ன காரணம் என்பது கொஞ்சம் தெரிய வருகிறது. சத்யஜித் கொலை சம்பந்தப்பட்ட விசாரணையி
ஹாலிவுட் மற்றும் கொரியன் திரைப்பட விமர்சனங்கள் - Hollywood and Korean Movie Reviews in Tamil