Marvel தயாரித்து வெளியிட்டு உள்ள தொடர்.
சூப்பர் ஹீரோ கதைகளுக்கு பெயர் போன மார்வெல் தயாரித்த தொடர் என்பதால் சூப்பர் ஹீரோ கதையாக இருக்கும் என நினைத்தேன்.
தொடரின் ஆரம்பத்தில் கண் தெரியாத ஹீரோ ஆக்ரோசமாக சண்டையிடும் போதும் சூப்பர் ஹீரோ கதை தான் என்று உறுதி செய்துவிட்டேன். ஆனால் தொடர் நகரும் போது செல்ஃப் மேட் சூப்பர் ஹீரோ என தெரிய வருகிறது.
படத்தின் ஹீரோ Matt Murdock (Charlie Cox ) சிறுவயதில் ஏற்பட்ட விபத்து காரணமாக பார்க்கும் திறனை முற்றிலுமாக இழந்து விடுகிறார். ஆனால் ஸ்டிக் எனும் ஒரு நபரின் உதவியுடன் தற்காப்புக் கலை மற்றும் சண்டைப் பயிற்சியில் தேர்ச்சி பெறுகிறார்.
இது தவிர மிக அசாதாரணமான கேட்கும் மற்றும் நுகரும் தன்மையை பெற்றுள்ளார்.
வக்கீல் படிப்பை முடித்த இவர் தன் நண்பன் Foggy உடன் இணைந்து லா ஏஜென்சி ஆரம்பிக்கிறான்.
பகலில் வக்கீலாகவும் இரவு நேரத்தில் மாஸ்க்கை மாட்டிக்கொண்டு பல நபர்களை ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றுகிறான் .
தற்செயலாக ஒரு பெண்ணை Karan Page ஐ காப்பாற்றுகிறான். இதனால் அந்த பெண்ணை கொலை செய்ய முயற்சி செய்யும் மாஃபியா கூட்டத்துடன் மோத ஆரம்பிக்கிறான்.
மாஃபியா கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க ஆரம்பிக்கிறான் . போதை பொருள் , சிறுவர்கள் கடத்தல், விபச்சாரம் என பல சட்ட விரோத செயல்களை செய்யும் மாஃபியாவின் தலைவர் யார் என்று கண்டுபிடிப்பது முதல் சீசன்.
இரண்டாவது சீசன் அந்த மாஃபியா குழு தலைவனை எவ்வாறு சட்டத்தின் வழியில் சென்று பிடித்து சிறையில் அடைக்கிறார்கள் என்பதை பற்றியது.
மூன்றாவது சீசனில் ஜெயிலில் இருக்கும் மாஃபியா தலைவன் தனது திறமையால் ஜெயிலை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறான். மிக சாதுர்யமாக காய்களை நகர்த்தி ஜெயிலில் இருந்து வெளியே வருகிறான். மறுபடியும் அவனை சிறையில் அடைத்தார்களா இல்லையா என்பதை சொல்லுகிறது மூன்றாவது சீசன். இதற்கு நடுவே ஜப்பானை சேர்ந்த ஒரு லூசு கூட்டம் மொத்த ஊரையே போட்டுத் தள்ள திட்டமிடுகிறது. அதையும் முறியடிக்க போராடுகிறார்.
மூன்று சீசன்களுமே செம ஸ்பீடு. சண்டைக்காட்சிகள் அனைத்தும் சர வெடி. மிக இயல்பான சண்டைக்காட்சிகள்... ஹீரோ என்பதால் சுத்தி சுத்தி அடிப்பது, பஞ்ச் டயலாக் பேசுவது போன்ற காட்சிகள் கிடையாது. ஒவ்வொரு சண்டை முடிவிலும் ஹீரோ ரத்தம் சொட்ட சொட்ட குத்துயிரும் கொலையுதிருமாக தப்பித்து வருகிறார் இல்லை என்றால் யாராவது வந்து காப்பாற்றி கூட்டி வருகிறார்கள்.
Wilson Fisk (Vincent D'Onofrio) செம வெயிட்டான சைக்கோ கலந்த வில்லனாக வருகின்றார். மொட்டை தலையும் , பேசும் தோரணை ,பாடி லாங்வேஜ் என அனைத்திலும் வில்லத்தனம். அதுவும் மூன்றாவது சீசனில் எடுக்கும் விஸ்வரூபம் செம சூப்பர்.
நண்பராக வரும் Foggy (Elden Helson), உதவியாளர் மற்றும் காதலியாக வரும் Karan Page (Debroah Ann Woll) என அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
நேரம் கிடைத்தால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஆக்ஷன் கலந்த க்ரைம் தொடர்
IMDb Rating : 8.6/ 10
Available in Netflix
Cast :
Charlie Cox
Deborah Ann Woll
Elden Henson
Toby Leonard Moore
Vondie Curtis-Hall
Bob Gunton
Ayelet Zurer
Rosario Dawson
Vincent D'Onofrio
Jon Bernthal
Élodie Yung
Stephen Rider
Joanne Whalley
Jay Ali
Wilson Bethel
கருத்துகள்
கருத்துரையிடுக