முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

My Octopus Teacher - மை ஆக்டோபஸ் டீச்சர் - 2020

 2020 ஆம் ஆண்டில் வெளிவந்த 1.5 மணி நேரம் ஓடக்கூடிய டாக்குமெண்டரி படம் தான் மை ஆக்டோபஸ் டீச்சர். 


இந்த வருடம் சிறந்த ஆவணப்பட பிரிவில் ஆஸ்கார் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இது தென் ஆப்ரிக்காவின் கடற்கரை ஓரம் உள்ள கடல் பாசிகள் சூழ்ந்த பகுதியில் வசித்து வரும் ஒரு ஆக்டோபஸ்க்கும் அதே பகுதியில் உள்ள ஊரில் வாழ்ந்து வரும் Craig Foster என்ற மனிதருக்கும் இடையே உண்டான ஒரு நட்பு/பாசம்/கனெக்சன் பற்றிய ஆவணப்படம். 

நீர் மூழ்கி வீரரான Craig Foster கடல் பாசிகள் உள்ள பகுதிக்கு சென்று வருகிறார். ஒரு முறை அங்கு ஒரு ஆக்டோபஸை சந்திக்கிறார் . இவரை கண்ட உடன் ஓடிச்சென்று அதன் மறைவிடத்தில் ஒளிந்து கொள்கிறது. இந்த நடவடிக்கை Craig - ன் ஆர்வத்தை தூண்டுகிறது. தினமும் ஆக்டோபஸை சந்திப்பதற்காக வருகிறார். 

ஆரம்பத்தில் பயப்படும் ஆக்டோபஸ் சிறிது காலத்தில் இவருடன் பழக ஆரம்பிக்கிறது. Craig - ஆக்டோபஸ் உடன் பயணிக்கிறார். அதன் பழக்க வழக்கங்கள், வேட்டையாடும் முறை போன்ற ஆச்சரியமூட்டும் வகையில் உள்ளது. 

கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலாக அந்த ஆக்டோபஸை பின் தொடர்ந்து அதன் தினசரி நடவடிக்கைகளை படம் பிடிக்கிறார். 

ஆக்டோபஸ் அறிவுள்ள பிராணி என்பது தெரியும் ஆனால் மனிதனுடன் பழகும் அளவிற்கு அறிவுள்ளது என்பது மிகுந்த ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது. 

ஆக்டோபஸ் அதன் பரம எதிரியான பைஜாமா சுறாக்களிடம் இருந்து தப்பிக்க அது செய்யும் ஜாலங்கள் அருமை. 

கடைசியில் ஆக்டோபஸ்ஸுக்கு நேரும் முடிவு வருத்தம் அளிக்கிறது. 

Craig Foster ன் அர்ப்பணிப்பு ஆச்சர்யம் அளிக்கிறது.  ஒரு வருடத்திற்கும் மேலாக தினமும் ஆக்டோபஸை தொடர்ந்து சென்று படம்பிடிப்பது என்பது சாதாரண காரியமல்ல.. 

குடும்பத்தோடு பார்க்க வேண்டிய டாக்குமெண்டரி... கண்டிப்பாக பாருங்கள்...

Don't miss this ... Must watch ...

IMDb Rating: 8.1/ 10

Available in Netflix


Directors: Pippa Ehrlich, James Reed

Cast:  Craig Foster

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

My Microsoft Azure - AZ 900 Certification Journey.

இது மாதிரி நெறயா ஆர்ட்டிக்கிள் பார்த்து இருப்பீர்கள். ஆனா என்னோட பயணம் இந்த சர்ட்டிபிகேஷன் முடிச்சே ஆகணும் மற்றும் நேரம் குறைவு என்பதால் பரபரப்பாக  படித்தது. அதுனால ரொம்பவே ப்ராக்டிகலா இருக்கும். எல்லாருக்கும் ஒர்க் ஆகுமானு தெரியாதுங்க. அதனால இத அப்படியே எல்லாம் ஃபாலோ பண்ணாதீங்க.  இது நான் உபயோகித்த வழிமுறைகள் மட்டுமே. Just want to share my experience இந்த செப்டம்பர்க்குள்ள ஏதாவது ஒரு சர்ட்டிபிகேஷன் முடிக்க வேண்டும் என கம்பெனியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.  நான் படிச்சுட்டு இருந்தது GCP Exam க்கு.‌ஆனா திடிரென Azure & GCP எதுனாலும் படிக்கலாம் என்று சொல்லிட்டு நிறைய கட கடவென AZ 900 எழுதி பாஸ் ஆகிவிட்டார்கள்.  நான் எழுதுனா GCP தான் எழுதுவேன் என்று உக்காந்து இருந்தேன். ஆனா எனக்கு தெரிந்த கம்பெனி வட்டத்தில் யாரும் GCP எழுதவில்லை . அதனால் நம்பிக்கை கொஞ்சம் கம்மியாகவே இருந்தது.  இதற்கு நடுவில் ஒரு ஜீனியர் பையன் நான் AZ 900  முடிச்சுட்டேன் என்று கால் பண்ணான். எப்படிடா என்றதும் 2 லிங்கை வாட்ஸ்ஆப்பில் அனுப்பினான். இத மட்டும் படிச்சு தான் நான் பாஸ் ஆனேன் என்றான்.  இதற்கு நடுவில் எங்க

The Old Man - Season 1 (2022)

The Old Man Tamil Review - Season 1 இது ஒரு Action, Thriller, Drama Series.  1 Season, 7 Episodes (1 Episode Yet to release) Available @hulu இதுல ஹீரோ 70+ ல இருக்குற ஒரு வயசான தாத்தா (Jeff Bridges). திடிரென ஒரு நாள் ஒருத்தன் அவர கொல்ல வர்றான். இவரு யாரு ? எதுக்கு கொல்ல வர்றாங்க ? என்பதை சொல்கிறது தொடர்.  Dan Chase மனைவி இறந்த நிலையில் 2 நாய்களுடன் தனிமையில் வசிக்கிறார். திடீரென ஒருத்தன் இவரை கொல்ல வருகிறான் நடக்கும் சண்டையில் நாய்கள் உதவியுடன் அவனை கொன்று விடுகிறார்.  அதன் பிறகு வீட்டை காலி பண்ணிட்டு கிளம்புகிறார். அங்கிட்டு பார்த்தால் FBI ல ஒரு மிகப்பெரிய கூட்டமே இவர் தேடிட்டு இருக்கு.  யார் இந்த தாத்தா ? கிட்டத்தட்ட 30 வருடங்கள் அமைதியாக வாழ்ந்து வந்த இவரின் வாழ்க்கை திடீரென கலவர பூமியாக மாறுவதற்கு காரணம் என்ன என்பதை தற்போது நடக்கும் சம்பவங்கள் மற்றும் ஃப்ளாஷ்பேக் என மாறி மாறி பயணிக்கிறது படம்.  இவருடைய ஃப்ளாஷ் பேக் நடப்பது ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமிப்பு நடந்த சமயத்தில் நடந்த சம்பவங்கள். CIA ஏஜன்ட் ஆன இவர் அங்கு உள்ள ஒரு போராட்டக்குழுவுடன் சேர்ந்து ரஷ்யாவை எதிர்க்கிறான். அங்கு நடந்