Series – Dexter – All Seasons (2006 – 2021)

Series – Dexter – All Seasons (2006 – 2021) post thumbnail image

டெக்ஸ்ட்டர் ஒரு தடயவியல் துறையைச் சேர்ந்த நிபுணர். இவர் மியாமி போலீஸ் துறையில் ரத்தம் சிதறுவதை வைத்து கொலை நடந்த விதம் மற்றும் கொலையாளிகள் விட்டுப்போன துப்பு களை கண்டறிந்து அதிகாரிகளுக்கு குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவுகிறார்.

Dexter all seasons review in tamil, Dexter serial killer, Dexter 2021, Dexter returns, new Dexter season, Michael C hall, jeniffer carpenter, Angel Ba

பகல் நேரத்தில் போலீஸ் துறையில் வேலை பார்க்கும் இரவு நேரத்தில் கொடூரமான சீரியல் கில்லர் ஆக உலாவருகிறார். ஆனால் இவர் கண்ணில் பட்டவர்களை எல்லாம் கொல்வது கிடையாது. அவருக்கென்று சில கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகள் வைத்துள்ளார். பெரும்பாலும் கொடூரமான கொலையும் செய்துவிட்டு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்தவர்கள் தான் இவரின் இலக்கு. 

இவருடைய சகோதரி (டெப்ரா) இவர் பார்க்கும் அதே போலீஸ் ஸ்டேஷனில் துப்பறியும் அதிகாரியாக உள்ளார். 

திடீரென மியாமி நகரில் தொடர் கொலைகள் நடக்கிறது. இந்த கொலையாளி கொன்றவர்கள் உடலில் இருந்து ரத்தத்தை சுத்தமாக வடிகட்டி எடுத்து விட்டு , துண்டு துண்டாக உடலை நறுக்கி ஏதேனும் பொது இடத்தில் அலங்காரம் செய்து வைக்கிறார். சீரியல் கில்லரான டெக்ஸ்டர்க்கு இந்த அப்ரோச் மற்றும் அவன் கொலை செய்யும் விதம் அந்த கொலைகாரனை பற்றிய ஆர்வத்தை தூண்டுகிறது. டெக்ஸ்டர் தனியாக விசாரணையில் இறங்குகிறார். 

விசாரணையில் கொலைகாரன் விட்டுப் போகும் தடயங்கள் அனைத்தும் டெக்ஸ்டர் குடும்பத்தை சுற்றியே வருகிறது. 

இதற்கு நடுவே டெக்ஸ்டர் சில பல கெட்டவர்களை போட்டுத் தள்ளுகிறான். டெக்ஸ்ட்டர் சகோதரி ஒரு பக்கம் சைக்கோ கொலைகாரனை தேடுகிறார். 

யார் இந்த கொலைகாரன் அவனுக்கும் டெக்ஸ்டர்கும் என்ன தொடர்பு என்பதை சுற்றி நகர்கிறது முதல் சீசன். 

டெக்ஸ்டர் கொலை செய்யும் நபர்களை துண்டு துண்டாக வெட்டி , பாலிதீன் பாக்கெட்டில் போட்டு கடலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வீசுகிறான். கடலடியில் ஆராய்ச்சி செய்யும் ஒரு குழு தற்செயலாக இந்த பொட்டலங்களை கண்டுபிடிக்க பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. மொத்தம் 50 க்கும் மேற்பட்ட உடல்கள் கிடைத்ததால் FBI ல் சீரியல் கில்லர்களை கண்டுபிடிக்கும் ஸ்பெஷலிஸ்ட் வருகிறார். இவருடன் இணைந்து பணிபுரியும் டெக்ஸ்டர் எவ்வாறு தப்பிக்கிறார் என்பது இரண்டாவது சீசன். 

மூன்றாவது சீசனில் ஒரு அட்டர்னியுடன் பழக்கம் ஏற்படுகிறது. இருவரும் கூட்டணி வைத்து கெட்டவர்களை வேட்டையாடுகின்றனர். ஆனால் அட்டர்னி தடம் மாறி தன் சொந்த லாபத்திற்காக கொல்கிறான். இந்த பிரச்சினையை எப்படி சமாளிக்கிறான் என்பதை சுற்றி நகர்கிறது மூன்றாவது சீசன். 

 நான்காவது சீசன் இன்னொரு சீரியல் கொலைகாரனை பிடிப்பது பற்றியது. இவன் பத்து வருடங்களுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக கொலைகளை செய்து விட்டு பதுங்கி விடுகிறான். இந்த கொலைகாரனை கண்டுபிடித்து அவனை டெக்ஸ்டர் எப்படி போட்டு தள்ளுகிறான் என்பதை சுற்றி நகர்கிறது. 

5 வது சீசனில் ஒரு கொலைகார சைக்கோ கூட்டத்தில் இருந்து தப்பி வந்த பெண்ணை காப்பாற்றுகிறான். பின்னர் அந்த கும்பலை கொல்வதற்கு அந்த பெண்ணிற்கு உதவுகிறான். 

6 வது சீசனில் மத நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு கொடுரமாக கொலைகள் செய்யும் இருவரை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகளை சுற்றி நகர்கிறது. கடைசியில் கொலையாளிகளை பற்றிய ட்விஸ்ட் அருமை. இந்த சீசனில் ஒரு வழியாக சகோதரி டெடப்ரா தன்னுடைய சகோதரன் ஒரு கொலைகாரன் என்பதை கையும் களவுமாக பிடிக்கிறார். 

7 வது சீசனில் ஒரு கொலைகாரியை கொல்வதற்கு முயற்சி செய்து அவள் மீது காதல் வயப்படுகிறான் டெக்ஸ்டர். டெப்ரா தன்னுடைய சகோதரன் கொலைகாரன் என்பதை ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறார். 

8 – வது சீசனில் தன்னுடைய மனநோயை சரியான முறையில் எதிர் கொள்ள உதவிய மனநல மருத்துவருக்கு உதவுகிறான். அவருடைய நோயாளிகளில் ஒருவர் அவருக்கு எதிராக திரும்புகிறான். 

தனது காதலியுடன் வெளிநாட்டில் செட்டில ஆக முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்குகிறான். மருத்துவரை காப்பாற்றினான வெளிநாட்டிற்கு சென்றான என்பதை சுற்றி நகர்கிறது. 

மொத்தத்தில் அருமையான தொடர்…. ஒவ்வொரு சீசனும் ஒவ்வொரு ரகம். ஆரம்பத்தில் கொஞ்சம் போர் அடித்தாலும் போக போக செம சூப்பராக செல்கிறது. 

ஒரு சீரியல் கில்லரை கதாநாயகனாக வைத்து தொடர் எடுக்க தனி திறமை வேண்டும். அதற்காக அவனுக்கு பில்டப் கொடுக்காமல்) / நல்லவனாக சித்தரிக்காமல் இயல்பாகவே இருக்க வைத்த விதம் சூப்பர். கடைசியில் டெக்ஸ்டர் கேரக்டரை நமக்கே பிடிக்க வைத்து விடுகின்றனர். 

சென்டிமென்ட் தேவையான அளவு , காமெடிக்கு மசூகா கதாபாத்திரம்..துணை நடிகர்களாக வரும் அந்த லேடி சீஃப் ஆபிசர் , ஏஞ்சல் , க்வின் போன்ற கதாபாத்திரங்கள் சிறப்பான முறையில் நடித்துள்ளார்கள். 

க்ரைம், சைக்கலாஜிகல் சம்பந்தப்பட்ட தொடர்கள் பிடிக்கும் என்பவர்கள் மிஸ் பண்ணக்கூடாத சீரிஸ் இது. 

கண்டிப்பாக பாருங்கள்…

ஸ்ட்ரிக்லி 18 + மட்டுமே… 

மொத்த சீசன்கள் – 8

எபிசோட்கள் -106

ரொம்பவே நீளமான தொடர் இது ஆனால் நல்ல டைம் பாஸ்…

IMDb Rating : 8.6/10

Available in Amazon Prime

Watch Trailer: 

Director:  

Keith Gordon

Michael Cuesta

Steve Shill

Tony Goldwyn

Robert Lieberma

Staring:

Michael C. Hall

Julie Benz

 Jennifer Carpenter

Lauren Vélez

David Zayas

James Remar

C.S. Lee

Christina Robinson

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Koorman – 2022 [Tamil]Koorman – 2022 [Tamil]

ஒரு சைக்காலஜிகல் திரில்லர் படம்.  கூர்மன் என்றால் அடுத்தவரின் மனதில் நினைப்பதை  கண்டுபிடிக்கும் திறன் கொண்டவர் என்று அர்த்தமாம். நம்ம Mentalist Patrick Jane  மாதிரி.  படத்தின் ஹீரோ தான் கூர்மன்.  ஹீரோ ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி. சில பிரச்சினைகளால்

The Coffin In The Mountain – 2014The Coffin In The Mountain – 2014

ஒரு சின்ன கிராமத்துல எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஒரு சடலம் கிடைக்கிறது. அதைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை Non – linear முறையில் சொல்லும் படம். என்ன ஒரு ரைட்டிங் 🔥 Brilliant 👌 ⭐⭐⭐⭐.25/5Crime, MysteryChineseTamil ❌ Must