எனக்கு மான்ஸ்டர் திரைப்படங்கள் மிகவும் பிடித்த ஒன்று. திரைப்படம் பற்றிய குறிப்பில் சர்வைவல் வகையான மான்ஸ்டர் திரைப்படம் என்பதால் மேலும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. உலகம் அழிந்து 7 வருடங்கள் கழித்து நடப்பது போன்ற கதை. பூமியின் மீது மோத வரும் விண்கற்களை அழிக்க மனிதர்கள் அனுப்பிய ஏவுகணைகள் மீண்டும் பூமியில் விழுந்து அதில் ஏற்பட்ட பிரளயம் காரணமாக விலங்குகள் அனைத்தும் மெகா சைஸில் வளர்ந்து மனிதர்களை சாப்பிட்டு காலி பண்ணுகிறது. தப்பிப் பிழைத்த மக்கள் கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே பூமிக்கடியில் இருக்கும் மறைவிடத்தில் வாழ்ந்து வருகின்றனர். ஒரு காலனியில் இருக்கிறான் ஹீரோ ஜோயல். காலனியில் அனைவரும் குடும்பம் , லவ்வர் என இருக்க இவன் மட்டும் தனிமையில் இருக்கிறான். சமையல் வேலை செய்கிறான்... இவனுக்கு மிருகங்கள் என்றால் பயம்... எதாவது மிருகத்தை பார்த்தால் சிலை மாதிரி உறைந்து விடுகிறான். வாழ்க்கையில் பிடிப்பு ஏதுமின்றி வசித்து வருகிறான். இந்நிலையில் தன்னுடைய பழைய காதலி(7 வருடங்கள் முன்பு ) இன்னொரு காலனியில் இருப்பதை ஏதாச்சயாக கண்டுபிடித்து அவளுடன் பேச ஆரம்பிக்கிறான். ஒரு கட்டத்தில் தனியாக இருந்து சாவத
ஹாலிவுட் மற்றும் கொரியன் திரைப்பட விமர்சனங்கள் - Hollywood and Korean Movie Reviews in Tamil