The Invisible Guest 2016 ஆம் ஆண்டு வெளிவந்த Spanish Psychological Thriller Movie. ஒரு ஹோட்டல் அறையின் கதவை உடைத்துக்கொண்டு போலீஸ் உள்ளே நுழைகிறது. இளம் தொழிலதிபர் ஆட்ரியன் தன் நெற்றியில் ரத்தக்கறையுடன், பிணமாக கிடக்கும் தன் காதலி லாராவை கையில் ஏந்தியவாறு திகைப்பில் காணப்படுகிறான். அறை முழுக்க பணம் கொட்டிக்கிடக்கிறது. ஜன்னல் கதவு என அனைத்து வழிகளும் உள் பக்கமாக பூட்டிக்கிடக்கும் அந்த அறையில், யாரோ ஒருவர் தன்னையும் தாக்கி விட்டு தன் காதலியையும் கொன்றுவிட்டு சென்றதாக ஆட்ரியன் சொல்லும் கதையை போலீஸ் நம்ப மறுக்கிறது. அவன் மேல் கொலை கேஸ் பதிவாகி விசாரணை நடக்கிறது. அவனை வழக்கில் இருந்து எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்பில் ஒரு வயதான பெண் வக்கீல் உதவிக்கு வருகிறார். வக்கீலிடம் அதுவரை நடந்த அனைத்து உண்மைகளையும் ஒளிவுமறைவில்லாமல் கூற ஆரம்பிக்கிறான். அவனின் கதைப்படி... ஆட்ரியனும் லாராவும் ஒரு மலைப்பாதையில் சென்று கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக நடக்கும் விபத்தில், எதிரே காரில் தனியாக வந்த ஒரு இளைஞன் மரணமடைகிறான். போலீஸுக்கு சென்றால் இவர்களின் கள்ளஉறவு குடும்பத்திற்கு தெரிந்து
ஹாலிவுட் மற்றும் கொரியன் திரைப்பட விமர்சனங்கள் - Hollywood and Korean Movie Reviews in Tamil