முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

The Night Manager - தி நைட் மேனேஜர் (2016) - Limited Series

 இது UK - வில் இருந்து வந்துள்ள 6 எபிசோட்கள் கொண்ட மினி திரில்லர் தொடர். 

கதை என்னவோ பலமுறை சொல்லப்பட்ட நல்லவர்கள் Vs கெட்டவர்கள் கான்செப்ட் தான். 

Jonathan Pine ( Tom Hiddleston) - Avengers படங்களில் Loki கதாபாத்திரத்தில் வருபவர். எகிப்து நாட்டில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் Night Manager ஆக வேலை பார்த்து வருகிறார். 

Richard Roper(Hugh Laurie) - ஒரு புத்திசாலித்தனமான மற்றும் கொடூரமான சர்வதேச அளவில் பல நாடுகளுக்கு சட்ட விரோதமாக ஆயுதங்களை கடத்தும் ஒரு ஆயுத வியாபாரி .

Angela Burr ( Olivia Colman ) - Broadchurch - பிரிட்டிஷ் இன்டெலிஜென்ஸ் பிரிவில் வேலை பார்க்கும் அதிகாரி. Roper - செய்யும் ஆயுதங்கள் கடத்தலால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து அவனை பிடிக்க 10 வருடங்களாக முயற்சி செய்பவர். ஆனால் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதால் Roper-ஐ எதுவும் பண்ண முடியாமல் தவித்து வருகிறார். 

Pine விரும்பும் மற்றும் காப்பாற்ற நினைக்கும் ஒரு பெண் Roper ஆட்களால் கொல்லப்படுகிறார். இதனால் மனமுடைந்து தலைமறைவாகிறார். 

சில வருடங்கள் கழித்து சுவிட்சர்லாந்து நாட்டில் ஒரு ரிச்சார்ட்டில் வேலை செய்கிறார். அங்கு தற்செயலாக Roper தங்க வருகிறார். இம்முறை அவரை ஒழித்துக்கட்ட முடிவு செய்கிறார். 

Pine ஒரு ஹோட்டலில் Angela - வை சந்திக்கிறார். Pine Roper குழுவில் இணைந்து அதன் மூலமாக ஆதாரங்களை திரட்ட திட்டம் இடுகின்றனர். 

புத்திசாலித்தனமாக Roper மகனை கடத்துவது மற்றும் காப்பாற்றுவதாக நாடகம் செட்டப் செய்து கூட்டத்திற்கு ஊடுருவுகிறார் Pine. ‌

சிறிது சிறிதாக Roper -ன் நம்பிக்கையை பெற்று அவரது கோட்டையை எவ்வாறு உள்ளிருந்து தகர்க்கிறார் என்பது தான் மீதி தொடர். 

திரைக்கதை செம சூப்பராக உள்ளது. மெதுவாக நகர்ந்தாலும் போரடிக்கவில்லை‌. படம் பிடித்த லொக்கேஷன்கள் அடிக்கடி ஜேம்ஸ் பாண்ட் படங்களை ஞாபகப் படுத்துகிறது. ‌

படம் லண்டன், Roper வசிக்கும் தீவு, எகிப்து என பல நாடுகளில் கதை பயணிப்பதால் கொஞ்சம் பார்க்காமல் விட்டாலும் புரியாமல் போய்விடும். 

Tom Hiddleston, Olivia Colman மற்றும் Hugh Laurie சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஹீரோயிசம் இல்லாத இயல்பாக எடுக்கப்பட்ட அருமையான ஸ்பை திரில்லர். 

கண்டிப்பாக பாருங்கள்..  

Available in Amazon Prime Video 

IMDb Rating : 8.1

Director: Susanne Bier

Producer: Rob Bullock

Screenplay: David Farr (based on the novel by John Le Carré)

Music: Víctor Reyes

Cast:

Jonathan Pine: Tom Hiddleston

Richard Onslow Roper: Hugh Laurie

Jed Marshall: Elizabeth Debicki

Angela Burr: Olivia Colman

Sophie Alekan: Aure Atika

Lance Corcoran: Tom Hollander

Rob Singhal: Adeel Akhtar

Simon Ogilvey: Russell Tovey

Permanent Secretary: Katherine Kelly

Rex Mayhew: Douglas Hodge

Mercedes: Marta Torné

Sandy Langbourne: Alistair Petrie

Caroline Langbourne: Natasha Little

Juan Apostol: Antonio de la Torre

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

X - 2022

Horror, Porn  கலந்து இது போதாது என Slasher வகையும் சேர்த்து வந்துள்ள படம் இது.   IMDb 7.3 Tamil Dub ❌ OTT ❌ , 18+  Porn Film எடுக்க ஒரு பண்ணை வீட்டுக்கு போகும் குழுவிற்கு நேரம் கொடூரங்கள் தான் படம்.  Slasher படத்துக்கே எழுதி வைச்ச டெம்ப்ளேட்.  படம் நடப்பது 1979 ஆம் வருடத்தில்.. 3 ஜோடிகள் (Producer, Director, Actors)  அப்ப பிரபலமாகி வரும் வீடியோ கேசட் மார்க்கெட்டை மையமாக வைத்து மேட்டர் படம் எடுதது கேசட்டா‌ ரிலீஸ் பண்ணா நல்ல காசு பாக்கலாம் என ப்ளான் பண்ணுகிறார்கள்.  படத்தின் டைரக்டர Farmers Daughter's என ஒரு அருமையான மேட்டர் பட ஸ்கிரிப்டை ரெடி பண்ணுகிறார் 😜 .இதை ஒரு பண்ணை வீட்டில் வைத்து எடுத்தால் ரசிகர்கள் படத்துடன் ஒன்றி. விடுவார்கள் என ஐடியா பண்ணி இந்த குரூப் ஊருக்கு ஒதுக்கு புறமான ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கு சூட்டிங் போகிறார்கள்.  அந்த வீட்டின் ஓனர்ஸ் ஒரு வயதான தம்பதியர். ஓனர் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பதால் பிட்டு படம் எடுக்க வந்தோம் என சொல்லாமல் கமுக்கமாக படத்தே எடுக்கிறார்கள்.  ஆனா ஓனரம்மா இவர்கள் பிட்டு படம் எடுப்பதை பார்த்து விடுகிறது. அன்னிக்கு நைட் ஒவ்வொருத்தவங்களா கொடூர

The Old Man - Season 1 (2022)

The Old Man Tamil Review - Season 1 இது ஒரு Action, Thriller, Drama Series.  1 Season, 7 Episodes (1 Episode Yet to release) Available @hulu இதுல ஹீரோ 70+ ல இருக்குற ஒரு வயசான தாத்தா (Jeff Bridges). திடிரென ஒரு நாள் ஒருத்தன் அவர கொல்ல வர்றான். இவரு யாரு ? எதுக்கு கொல்ல வர்றாங்க ? என்பதை சொல்கிறது தொடர்.  Dan Chase மனைவி இறந்த நிலையில் 2 நாய்களுடன் தனிமையில் வசிக்கிறார். திடீரென ஒருத்தன் இவரை கொல்ல வருகிறான் நடக்கும் சண்டையில் நாய்கள் உதவியுடன் அவனை கொன்று விடுகிறார்.  அதன் பிறகு வீட்டை காலி பண்ணிட்டு கிளம்புகிறார். அங்கிட்டு பார்த்தால் FBI ல ஒரு மிகப்பெரிய கூட்டமே இவர் தேடிட்டு இருக்கு.  யார் இந்த தாத்தா ? கிட்டத்தட்ட 30 வருடங்கள் அமைதியாக வாழ்ந்து வந்த இவரின் வாழ்க்கை திடீரென கலவர பூமியாக மாறுவதற்கு காரணம் என்ன என்பதை தற்போது நடக்கும் சம்பவங்கள் மற்றும் ஃப்ளாஷ்பேக் என மாறி மாறி பயணிக்கிறது படம்.  இவருடைய ஃப்ளாஷ் பேக் நடப்பது ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமிப்பு நடந்த சமயத்தில் நடந்த சம்பவங்கள். CIA ஏஜன்ட் ஆன இவர் அங்கு உள்ள ஒரு போராட்டக்குழுவுடன் சேர்ந்து ரஷ்யாவை எதிர்க்கிறான். அங்கு நடந்