இந்த படம் ஒரு சைக்காலஜிகல் திரில்லர்..
புதிதாக திருமணமான தம்பதியர் (Simon - Jason Bateman - Ozark ,Robyn - Rebecca Hall - The Town) தாங்கள் வசிக்கும் இடத்தில் நேர்ந்த துயரமான சம்பவங்களை மறக்க கணவனின் சொந்த ஊருக்கு வருகின்றனர்.
புதிதாக வீடு , வேலை என சிறப்பாக போகிறது வாழ்க்கை. இந்நிலையில் கணவனின் பள்ளியில் ஒன்றாக படித்தவன் என்று சொல்லி அறிமுகம் ஆகிறான் (Gordo - Joel Edgerton) .
அடுத்த நாள்களில் சில பரிசு பொருட்களை அனுப்பி வைக்கிறான். Robyn இதை விரும்பினாலும் Simon க்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை . ஒரு கட்டத்தில் Gordo வின் முகத்திற்கு நேரே எங்களை பார்க்க வரவேண்டாம் என்று கூறி விடுகிறான்.
இந்நிலையில் Robyn கர்ப்பமாகிறார் ... Gordo அவர்களை தொந்தரவு செய்ததற்கு மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதி விட்டு அவர்களின் கண்ணில் படாமல் இருக்கிறான். ஆனால் கடந்த காலம் கடந்து போனதாகவே இருக்கட்டும் என்று கடிதத்தில் எழுதி விட்டு செல்கிறான்.
Robyn தன் கணவனிடம் இதை பற்றி கேட்கையில் மழுப்புகிறான். இதனால் Robyn தானகவே விசாரிக்க ஆரம்பிக்கிறாள்.
இதில் 20 வருடங்களுக்கு முன்பு Simon வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் மற்றும் அதன் பின்விளைவுகள் தெரிய வருகிறது.
Gordo ஏன் இவர்களை ஏன் சுற்றி சுற்றி வந்தான் என்பது கடைசியில் யாரும் எதிர்பாராத ஒரு கிளைமாக்ஸ்ஸில் தெரிய வருகிறது.
படம் மெதுவாக ஆரம்பிக்கிறது... படம் சிறிது நேரம் பேய் பட எஃபெக்ட்டில் நகர்கிறது.
கடைசியில் அருமையான ட்விஸ்ட் உடன் முடிகிறது.
முக்கியமான கேரக்டர்களான Simon, Robyn and Gordo கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் அருமையாக நடித்திருக்கிறார்கள். நல்ல திரைக்கதை மற்றும் இயக்கம்.
மெதுவாக நகர்ந்தாலும் படம் நன்றாகவே உள்ளது.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.
Director: Joel Edgerton
Cast: Jason Bateman, Rebecca Hall, Joel Edgerton
Screenplay: Joel Edgerton
Cinematography: Eduard Grau
Music: Danny Bensi, Saunder Jurriaans
IMDb Rating : 7.0/ 10
Available in Amazon Prime Video
கருத்துகள்
கருத்துரையிடுக