Sweet Home - ஸ்வீட் ஹோம் (2020) - Korean Series

இது ஒரு கொரியன் சீரிஸ்.. 

1 சீசன் அதில் 10 எபிசோட்கள்... 

பேரை பார்த்த உடன் ஏதோ குடும்ப உறவுகள் சம்மந்தப்பட்ட தொடர் என்று நினைத்து விடாதீர்கள்... இது உலகம் அழிவது மற்றும் மனிதர்கள் கொடூரமாக மாறி பக்கத்தில் உள்ளவர்களை கொல்வது என சீரியசாக செல்லும் தொடர். Train to Bhusan, Kingdom , #Alive வரிசையில் கொரியாவில் இருந்து வந்துள்ளது. Resident Evil படங்கள் பிடிக்கும் என்பவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம். 

டீன் ஏஜ் பையனான Hyun-Su சமீபத்தில் நடந்த விபத்தில் பெற்றோர்களை இழந்து விடுகிறான். மனநிலை சிறிது பாதிக்கப்பட்ட அவன் தன்னை தானே காயப்படித்திக் கொள்ளும் மனநிலையில் உள்ளவன். இந்நிலையில் Green Home என்ற ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட்டில் குடியேறுகிறான். 

ஒரு நாள் அப்பார்ட்மெண்ட் டில் கொடூரமாக ரத்தகளரியாக உள்ளது. 

ஏதோ ஒருவிதமான நோய் பரவுகிறது. இந்த நோய் பாதித்தவர்கள் கண்கள் கருப்பாக மாறி மூக்கில் இருந்து லிட்டர் லிட்டராக ரத்தம் கொட்டுகிறது. கொஞ்சம் நேரத்தில் கொடுரமான மிருகமாக மாறி விடுகின்றனர். 


அபார்ட்மெண்ட்டில் தப்பி பிழைத்தவர்கள் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் தஞ்சமடைகிறார்கள். தெளிவான ஒருவன் லீடராக பொறுப்பை ஏற்றுக் கொள்கிறான் ஆனால் அவன் நடவடிக்கைகள் மர்மமாகவே உள்ளது. அந்த அபார்ட்மெண்டில் உள்ள ஒருவனை கொல்ல வந்தவன், தீயணைப்பு துறையை சேர்ந்த பெண், ராணுவ வீரர் , சுயநலமான சூப்பர் மார்க்கெட் ஓனர், கணவனுக்கு பயந்த அவன் மனைவி, குழந்தை இறந்த பின்னும் இருப்பதாக நினைத்து வாழும் பெண் என பல தரப்பட்ட மக்கள் உள்ளனர். 


மாடியில் உள்ள ஒரு அறையில் சக்கர நாற்காலியில் ஒரு நபர் உள்ளார். இவர் தன்னுடைய திறமை மூலம் மிருகங்களை வேட்டையாட இருக்கும் பொருட்களை வைத்து ஆயுதங்கள் உருவாக்கி உள்ளார். 


Hyun Su நோயினால் பாதிக்கப்படுகிறான். ஆனால் மர்மமான முறையில் அந்த நோயின் பிடியில் இருந்து தானாகவே வெளியே வருகிறான். எவ்வளவு அடி , வெட்டு பட்டாலும் குணமாகி விடுகிறது. 

ஒரு கட்டத்தில் இரு குழந்தைகளை காப்பாற்ற அந்த நடக்க முடியாதவருக்கு உதவுகிறான் . கடைசியில் அனைவரும் சூப்பர் மார்க்கெட்டில் உள்ளவர்களுடன் ஐக்கியம் ஆகிறார்கள். 

ஏன் மனிதர்கள் இவ்வாறு மாறுகிறார்கள் ? Hyun Su எவ்வாறு தப்பி பிழைத்தான்... அவனுக்கு மட்டும் எப்படி இந்த ஸ்பெஷல் பவர் வந்தது... ? 

Resident Evil படம் போல செய்த ஆராய்ச்சியின் விளைவா ... போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது 10 எபிசோட்கள் கொண்ட இந்த சீசன். 

பெரிதாக கதை ஒன்றும் இல்லை ஆனால் போரடிக்காமல் நகர்கிறது. மனிதர்கள் வித்தியாச வித்தியாசமான ஜந்துக்களாக மாறுகிறார்கள். எவன் எப்படி மாற போகிறான் என்பதை பார்க்க ஆர்வமாக தான் உள்ளது.

ஒரு அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸ் உள்ளேயே கதையை நகர்த்திய விதம் சிறப்பு.. 

கோரமான ரத்தம் கொட்டும் காட்சிகள் நிறையவே உள்ளன. பல கேள்விகளுக்கு பதில் சொல்லாமலேயே முடிந்து விட்டது முதல் சீசன். 

மான்ஸ்டர் படங்களில் , உலகம் அழிவது, ஜாம்பி படங்கள் பிடிக்கும் என்பவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம். 

Director: Lee Eung-Bok

Writers: Kim Kan-Bi (webcomic), Hwang Young-Chan (webcomic), Heung So-Ri, Kim Hyung-Min, Park So-Ri

Stars: Song Kang, Lee Jin-wook, Lee Si-young, Lee Do-Hyun, Kim Nam-Hee, Go Min-Si, Park Gyu-Young, Ko

Yoon-Jung, Kim Kap-Soo, Kim Sang-Ho, Woo Jung-Kook

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்