முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Split - ஸ்பிலிட்(2016)

Sixth Sense , The Village, Signs போன்ற வித்தியாசமான படங்களை கொடுத்த இயக்குநர் M. Night Shyamalan இயக்கத்தில் வந்த ஒரு அருமையான psychological thriller படம் தான் Split. 


படத்தின் ஆரம்பத்தில் மூன்று இளம்பெண்களை Casey(Anya Taylor -Joy - The Queen's Gamebit) , Claire (Haley Ku Richardson ), Marcia (Jessica Sula) கடத்துகிறான் Dennis (James McAvoy ) . மூவரையும் ஒரு இடத்தில் அடைத்து வைக்கிறான். 


மூவரும் தப்பிக்க எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. இந்நிலையில் Beast கூடிய விரைவில் வரப்போகிறது என்று சொல்கிறான். 


சரி ஏதோ சைகோ என நினைக்கும் வேளையில் திடீரென என் பெயர் Patricia என்று சொல்லி பெண்மை கலந்த குரலில் பேசுவதுடன் பெண் போல உடை அணிந்து வருகிறான். அடுத்து கொஞ்ச நேரத்தில் Hedwig எனும் பெயரில் சிறுவன் போல பேசுகிறான்.  

பெண்கள் மூவரும் மரண பீதியில் குழப்பத்தின் உச்சிக்கு போகின்றனர். 


Casey - க்கு சிறிது சிறிதாக இவன் DID (dissociative identity disorder) அதாங்க Multiple Personality Disorder... சந்திரமுகி படத்தில் ஜோதிகா சந்திரமுகியாக மாறுவது, அந்நியன் படத்தில் விக்ரம் ரெமோ மற்றும் அந்நியநாக மாறி மாறி வருவது .. அதே போன்ற நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறான் என தெரிய வருகிறது. 


ஆனால் இப்ப வந்து வந்து போகும் Dennis, Patricia மற்றும் Hedwig போன்றவர்கள் கொஞ்சம் நல்லவர்கள் என்றும் Beast வந்தால் உயிர் போவது உறுதி என்று தெரிந்து கொள்கிறாள். 


இந்நிலையில் எவ்வாறு இந்த பெண்கள் தப்பித்தார்கள் என்பதை படத்தில் பாருங்கள். 


இந்த படத்தை ஹாரர் , திரில்லர் என எதிலும் சேர்க்க முடியாது ஆனால் படம் மெதுவாக சென்றாலும் போரடிக்காமல் போகிறது.


அதுவும் கடைசி 30 நிமிடங்கள் செம பரபரப்புடன் நகர்கிறது. 


நடிப்பில் James McAvoy பின்னி பெடல் எடுத்து இருக்கிறார். ஒவ்வொரு Split Personality மாறி வரும் போது அவருடைய பாடி லாங்க்வேஜ் மற்றும் வசன உச்சரிப்பு அருமை. 


அவன் உடம்பில் குடியிருக்கும் மொத்த personalities மற்றும் கடைசியில் வரும் Beast கதாபாத்திரம் என ஆச்சர்யம் கொடுக்கும் ட்விஸ்ட் நிறைய‌ உள்ளது.


கண்டிப்பாக பார்க்க வேண்டிய அருமையான படம். 

Director: M. Night Shyamalan

Cast: James McAvoy, Anya Taylor-Joy, Haley Lu Richardson, Jessica Sula, Betty Buckley

Screenplay: M. Night Shyamalan

Cinematography: Michael Gioulakis

Music: West Dylan Thordson

IMDb Rating: 7.3/ 10

Available in Netflix 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

எட்ஜ் ஆஃப் டுமாரோ - Edge Of Tomorrow (2014)

எட்ஜ் ஆஃப் டுமாரோ - Edge Of Tomorrow (2014) Tamil Review  இது பிரபல நாயகன் டாம் ஃகுரூஸ் (Tom Cruise) மற்றும் எமிலி (Emily Blunt) இணைந்து நடித்த டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வித்தியாசமான படம். ஏலியன்கள் பூமியை கைப்பற்ற போர் தொடுக்கின்றன. மிகவும் புத்திசாலித்தனமான இருப்பதால் மனித இனத்தால் தாக்கு பிடிக்க முடியாமல் பெருத்த அளவில் உயிர் சேதங்கள் ஏற்படுகின்றது. இந்நிலையில் உள்குத்து அரசியல் காரணங்களால் இது வரை போர்களமே கண்டிராத டாம் க்ரூஸ் நேராக போருக்கு அனுப்பப்படுகிறார். ஐந்து நிமிடங்களில் ஏலியனால் கொல்லப்பட்டு இறந்து விடுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக டைம் லூப்பில் மாட்டிக் கொள்கிறார். எழும் போது போர்களத்தில் எழுகிறார் சண்டை போடுகிறார் மறுபடியும் இறந்து போகிறார். ஒவ்வொரு சுழற்சியின் போதும் புதிதாக சண்டை நுணுக்கங்களை கற்று படத்தில் ராணுவ வீரராக வரும் நாயகியுடன் இணைந்து ஏலியன் தலைவன் ஆன ஆல்ஃபா வை வீழ்த்தி மனித இனத்தை காப்பாற்றினார்களா என்பதே முடிவு. மிகவும் புதிதான கதையம்சம் மற்றும் இயக்கம். போர் காட்சிகள் சிறப்பான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக ‌பார்க்க வேண்டி

My Microsoft Azure - AZ 900 Certification Journey.

இது மாதிரி நெறயா ஆர்ட்டிக்கிள் பார்த்து இருப்பீர்கள். ஆனா என்னோட பயணம் இந்த சர்ட்டிபிகேஷன் முடிச்சே ஆகணும் மற்றும் நேரம் குறைவு என்பதால் பரபரப்பாக  படித்தது. அதுனால ரொம்பவே ப்ராக்டிகலா இருக்கும். எல்லாருக்கும் ஒர்க் ஆகுமானு தெரியாதுங்க. அதனால இத அப்படியே எல்லாம் ஃபாலோ பண்ணாதீங்க.  இது நான் உபயோகித்த வழிமுறைகள் மட்டுமே. Just want to share my experience இந்த செப்டம்பர்க்குள்ள ஏதாவது ஒரு சர்ட்டிபிகேஷன் முடிக்க வேண்டும் என கம்பெனியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.  நான் படிச்சுட்டு இருந்தது GCP Exam க்கு.‌ஆனா திடிரென Azure & GCP எதுனாலும் படிக்கலாம் என்று சொல்லிட்டு நிறைய கட கடவென AZ 900 எழுதி பாஸ் ஆகிவிட்டார்கள்.  நான் எழுதுனா GCP தான் எழுதுவேன் என்று உக்காந்து இருந்தேன். ஆனா எனக்கு தெரிந்த கம்பெனி வட்டத்தில் யாரும் GCP எழுதவில்லை . அதனால் நம்பிக்கை கொஞ்சம் கம்மியாகவே இருந்தது.  இதற்கு நடுவில் ஒரு ஜீனியர் பையன் நான் AZ 900  முடிச்சுட்டேன் என்று கால் பண்ணான். எப்படிடா என்றதும் 2 லிங்கை வாட்ஸ்ஆப்பில் அனுப்பினான். இத மட்டும் படிச்சு தான் நான் பாஸ் ஆனேன் என்றான்.  இதற்கு நடுவில் எங்க