Inside Man – இன்சைடு மேன்(2006)

படத்தில் நடித்த நடிகர்கள் லிஸ்ட்டை பார்த்த உடன் படத்தை பார்க்கணும் என்று முடிவு செய்து விட்டேன். 

இது ஒரு திறமையான பேங்க் கொள்ளையை பற்றிய திரைப்படம். 

புத்திசாலியான பேங்க் கொள்ளை கூட்டத்தின் தலைவனாக Dalton கதாபாத்திரத்தில் Clive Owen ( Children of Men ) . 

போலீஸ் அதிகாரி மற்றும் பேங்க் கொள்ளை காரனுடன் பேரம் பேசும் அதிகாரியாக Detective Keith கதாபாத்திரத்தில் Denzel Washington (Unstoppable, Flight ) .

இவரின் சக அதிகாரியாக Detective Bill கதாபாத்திரத்தில் Chiwetel Ejiofor (The boy who harnessed the wind, 12 years a slave

 Madeleine எனும் சக்தி வாய்ந்த ப்ரோக்கர் மற்றும் சட்டவிரோதமாக பேரத்தில் ஈடுபடும் கதாபாத்திரத்தில் Jodie Foster . 

படத்தை பற்றி பார்ப்போம். ஒரு பிஸியான நாளில் நியுயார்க் நகரத்தின் வர்த்தக ஏரியாவில் உள்ள பேங்கிற்குள் Dalton தலைமையில் ஒரு கொள்ளை கூட்டம் பெயிண்ட்டர்கள் போல மாறுவேடம் அணிந்து உள்ளே நுழைகிறார்கள். 

உள்ளே உள்ள எல்லாரையும் பிணைக்கைதிகளாக பிடித்துக்கொண்டு அனைவருக்கும் கொள்ளைக்காரர்கள் உடையை அணிவித்து மாஸ்க் அணிய வைக்கின்றனர். இதனால் யார் கொள்ளைக்காரர்கள் , யார் பிணைக்கைதிகள் என்று தெரியாமல் போகிறது. 

Frazier மற்றும் Dalton இடையே பேச்சுவார்த்தை தொடங்குகிறது.‌ 2 பஸ் மற்றும் ஃப்ளைட் வேண்டும் என கோரிக்கை வைக்கப்படுகிறது. உடல்நிலை மற்றும் வயது காரணமாக கொஞ்சம் பிணைக்கைதிகளை விடுவிக்கின்றனர். 

இதிலிருந்து படத்தொகுப்பு முன்னும் பின்னும் நகர்கிறது.ஒரு பக்கம் பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவித்த பின்பு நடக்கும் விசாரணை. மற்றொரு பக்கம் பேங்க் கொள்ளையில் நடக்கும் நிகழ்வுகள். .

இன்னொரு திருப்புமுனையாக அந்த பேங்க் ஓனரின் மிக மிகப்பெரிய ரகசியம் ஒன்று கொள்ளை நடக்கும் பேங்க் கில் உள்ள லாக்கரில் உள்ளது. அதை யாருக்கும் தெரியாமல் மீட்க Mandelen White ஐ நியமிக்கிறார். 

ஆனால் கொள்ளைக்காரன் Dalton செம கூலாக உள்ளான். ஒரு கட்டத்தில் போலீஸ் உள்ளே நுழைகிறது. கொள்ளைக்காரர்கள் அனைவரும் பிணைக்கைதிகளுடன் கலந்து வெளியே வந்து விடுகின்றனர். ஆனால் Dalton மாயமாக மறைந்து விடுகிறான். 

Dalton எப்படி தப்பித்தான்? பேங்க் ஓனர் மறைக்க நினைக்கும் ரகசியம் என்ன? Frazier கொள்ளையனை பிடித்தனா ? பணம் எதுவுமே திருடு போகாத நிலையில் கொள்ளைக்காரர்கள் நோக்கம் என்ன? பேங்க் ஓனரின் ரகசியம் பாதுகாக்கப்பட்டதா ? என பல கேள்விகளுக்கு சிக்கலான மற்றும் நேர்த்தியான திரைக்கதை மூலம் பதில் சொல்கிறார் இயக்குனர் Spike Lee . 

Frazier மற்றும் Dalton இடையே நடக்கும் உரையாடல்கள், பிணைக்கைதிகளை விசாரிக்கும் காட்சிகள் அனைத்தும் அருமை. 

White கதாபாத்திரத்தில் Jodie Foster கெத்தாக நடித்திருக்கிறார். நல்ல தேர்வு.. 

க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் மற்றும் முடிவு அருமை 👌

கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் . 

Director: Spike Lee

Cast: Denzel Washington, Clive Owen, Jodie Foster, Christopher Plummer, Willem Dafoe, Chiwetel Ejiofor

Screenplay: Russell Gewirtz

Cinematography: Matthew Libatique

Music: Terence Blanchard

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Cold Case – கோல்ட் கேஸ் – 2021Cold Case – கோல்ட் கேஸ் – 2021

இது ஒரு மலையாள திரைப்படம்.  என்னமோ இந்த Signal சீரியல் பார்ததுல இருந்து இந்த Cold Case என்ற வார்த்தைகள் மேல் ஒரு ஈர்ப்பு… ட்ரெய்லர் நல்லா இருந்தது .. அது போக ப்ரித்விராஜ் போலீஸ் யூனிஃபார்ம்ல கலக்கலா இருந்தார். இது

Color Out Of Space – கலர் அவுட் ஆஃப் ஸ்பேஸ் (2019)Color Out Of Space – கலர் அவுட் ஆஃப் ஸ்பேஸ் (2019)

 இந்த படம் Prime Video recommendation section -ல் வந்தது அதுவும் தமிழ் ஆடியோவோட இருந்தது. ஹாரர், படம் summary+போஸ்டர்ஸ் பார்த்தா ஏலியன் படம் மாதிரி இருந்தது… ஹீரோ வேற  Nicholas Cage .இதுக்கு மேல என்ன வேண்டும் இந்த படத்தை