முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Split - ஸ்பிலிட்(2016)

Sixth Sense , The Village, Signs போன்ற வித்தியாசமான படங்களை கொடுத்த இயக்குநர் M. Night Shyamalan இயக்கத்தில் வந்த ஒரு அருமையான psychological thriller படம் தான் Split.  படத்தின் ஆரம்பத்தில் மூன்று இளம்பெண்களை Casey(Anya Taylor -Joy - The Queen's Gamebit ) , Claire (Haley Ku Richardson ), Marcia (Jessica Sula) கடத்துகிறான் Dennis (James McAvoy ) . மூவரையும் ஒரு இடத்தில் அடைத்து வைக்கிறான்.  மூவரும் தப்பிக்க எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. இந்நிலையில் Beast கூடிய விரைவில் வரப்போகிறது என்று சொல்கிறான்.  சரி ஏதோ சைகோ என நினைக்கும் வேளையில் திடீரென என் பெயர் Patricia என்று சொல்லி பெண்மை கலந்த குரலில் பேசுவதுடன் பெண் போல உடை அணிந்து வருகிறான். அடுத்து கொஞ்ச நேரத்தில் Hedwig எனும் பெயரில் சிறுவன் போல பேசுகிறான்.   பெண்கள் மூவரும் மரண பீதியில் குழப்பத்தின் உச்சிக்கு போகின்றனர்.  Casey - க்கு சிறிது சிறிதாக இவன் DID (dissociative identity disorder) அதாங்க Multiple Personality Disorder... சந்திரமுகி படத்தில் ஜோதிகா சந்திரமுகியாக மாறுவது, அந்நியன் படத்தில் விக்ரம் ரெமோ மற்றும் அ

The Night Manager - தி நைட் மேனேஜர் (2016) - Limited Series

 இது UK - வில் இருந்து வந்துள்ள 6 எபிசோட்கள் கொண்ட மினி திரில்லர் தொடர்.  கதை என்னவோ பலமுறை சொல்லப்பட்ட நல்லவர்கள் Vs கெட்டவர்கள் கான்செப்ட் தான்.  Jonathan Pine ( Tom Hiddleston) - Avengers படங்களில் Loki கதாபாத்திரத்தில் வருபவர். எகிப்து நாட்டில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் Night Manager ஆக வேலை பார்த்து வருகிறார்.  Richard Roper(Hugh Laurie) - ஒரு புத்திசாலித்தனமான மற்றும் கொடூரமான சர்வதேச அளவில் பல நாடுகளுக்கு சட்ட விரோதமாக ஆயுதங்களை கடத்தும் ஒரு ஆயுத வியாபாரி . Angela Burr ( Olivia Colman ) - Broadchurch - பிரிட்டிஷ் இன்டெலிஜென்ஸ் பிரிவில் வேலை பார்க்கும் அதிகாரி. Roper - செய்யும் ஆயுதங்கள் கடத்தலால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து அவனை பிடிக்க 10 வருடங்களாக முயற்சி செய்பவர். ஆனால் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதால் Roper-ஐ எதுவும் பண்ண முடியாமல் தவித்து வருகிறார்.  Pine விரும்பும் மற்றும் காப்பாற்ற நினைக்கும் ஒரு பெண் Roper ஆட்களால் கொல்லப்படுகிறார். இதனால் மனமுடைந்து தலைமறைவாகிறார்.  சில வருடங்கள் கழித்து சுவிட்சர்லாந்து நாட்டில் ஒரு ரிச்சார்ட்டில் வேலை செய்கிறார். அங்கு தற்செயலாக Rope

Inside Man - இன்சைடு மேன்(2006)

படத்தில் நடித்த நடிகர்கள் லிஸ்ட்டை பார்த்த உடன் படத்தை பார்க்கணும் என்று முடிவு செய்து விட்டேன்.  இது ஒரு திறமையான பேங்க் கொள்ளையை பற்றிய திரைப்படம்.  புத்திசாலியான பேங்க் கொள்ளை கூட்டத்தின் தலைவனாக Dalton கதாபாத்திரத்தில் Clive Owen ( Children of Men ) .  போலீஸ் அதிகாரி மற்றும் பேங்க் கொள்ளை காரனுடன் பேரம் பேசும் அதிகாரியாக Detective Keith கதாபாத்திரத்தில் Denzel Washington ( Unstoppable , Flight ) . இவரின் சக அதிகாரியாக Detective Bill கதாபாத்திரத்தில் Chiwetel Ejiofor ( The boy who harnessed the wind, 12 years a slave )   Madeleine எனும் சக்தி வாய்ந்த ப்ரோக்கர் மற்றும் சட்டவிரோதமாக பேரத்தில் ஈடுபடும் கதாபாத்திரத்தில் Jodie Foster .  படத்தை பற்றி பார்ப்போம். ஒரு பிஸியான நாளில் நியுயார்க் நகரத்தின் வர்த்தக ஏரியாவில் உள்ள பேங்கிற்குள் Dalton தலைமையில் ஒரு கொள்ளை கூட்டம் பெயிண்ட்டர்கள் போல மாறுவேடம் அணிந்து உள்ளே நுழைகிறார்கள்.  உள்ளே உள்ள எல்லாரையும் பிணைக்கைதிகளாக பிடித்துக்கொண்டு அனைவருக்கும் கொள்ளைக்காரர்கள் உடையை அணிவித்து மாஸ்க் அணிய வைக்கின்றனர். இதனால் யார் கொள்ளைக்காரர்கள்

The Gift - தி கிஃப்ட் (2015)

இந்த படம் ஒரு சைக்காலஜிகல் திரில்லர்..  புதிதாக திருமணமான தம்பதியர் (Simon - Jason Bateman - Ozark ,Robyn - Rebecca Hall - The Town ) தாங்கள் வசிக்கும் இடத்தில் நேர்ந்த துயரமான சம்பவங்களை மறக்க கணவனின் சொந்த ஊருக்கு வருகின்றனர்.  புதிதாக வீடு , வேலை என சிறப்பாக போகிறது வாழ்க்கை. ‌ இந்நிலையில் கணவனின் பள்ளியில் ஒன்றாக படித்தவன் என்று சொல்லி அறிமுகம் ஆகிறான் (Gordo - Joel Edgerton) .  அடுத்த நாள்களில் சில பரிசு பொருட்களை அனுப்பி வைக்கிறான். Robyn இதை விரும்பினாலும் Simon க்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை . ஒரு கட்டத்தில் Gordo வின் முகத்திற்கு நேரே எங்களை பார்க்க வரவேண்டாம் என்று கூறி விடுகிறான்.   இந்நிலையில் Robyn கர்ப்பமாகிறார் ... Gordo அவர்களை தொந்தரவு செய்ததற்கு மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதி விட்டு அவர்களின் கண்ணில் படாமல் இருக்கிறான். ஆனால் கடந்த காலம் கடந்து போனதாகவே இருக்கட்டும் என்று கடிதத்தில் எழுதி விட்டு செல்கிறான்.   Robyn தன் கணவனிடம் இதை பற்றி கேட்கையில் மழுப்புகிறான். இதனால் Robyn தானகவே விசாரிக்க ஆரம்பிக்கிறாள்.  இதில் 20 வருடங்களுக்கு முன்பு Simon வாழ்க்கையில் நடந்த

Sweet Home - ஸ்வீட் ஹோம் (2020) - Korean Series

Sweet Home - ஸ்வீட் ஹோம் (2020) - Korean Series Review In Tamil  இது ஒரு கொரியன் சீரிஸ்..  1 சீசன் அதில் 10 எபிசோட்கள்...  பேரை பார்த்த உடன் ஏதோ குடும்ப உறவுகள் சம்மந்தப்பட்ட தொடர் என்று நினைத்து விடாதீர்கள்... இது உலகம் அழிவது மற்றும் மனிதர்கள் கொடூரமாக மாறி பக்கத்தில் உள்ளவர்களை கொல்வது என சீரியசாக செல்லும் தொடர். Train to Bhusan, Kingdom , #Alive வரிசையில் கொரியாவில் இருந்து வந்துள்ளது. Resident Evil படங்கள் பிடிக்கும் என்பவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.  டீன் ஏஜ் பையனான Hyun-Su சமீபத்தில் நடந்த விபத்தில் பெற்றோர்களை இழந்து விடுகிறான். மனநிலை சிறிது பாதிக்கப்பட்ட அவன் தன்னை தானே காயப்படித்திக் கொள்ளும் மனநிலையில் உள்ளவன். இந்நிலையில் Green Home என்ற ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட்டில் குடியேறுகிறான்.  ஒரு நாள் அப்பார்ட்மெண்ட் டில் கொடூரமாக ரத்தகளரியாக உள்ளது.  ஏதோ ஒருவிதமான நோய் பரவுகிறது. இந்த நோய் பாதித்தவர்கள் கண்கள் கருப்பாக மாறி மூக்கில் இருந்து லிட்டர் லிட்டராக ரத்தம் கொட்டுகிறது. கொஞ்சம் நேரத்தில் கொடுரமான மிருகமாக மாறி விடுகின்றனர்.  அபார்ட்மெண்ட்டில் தப்பி பிழைத்தவர்கள் ஒர