Ben Affleck - இயக்கி நடித்துள்ள திரைப்படம் இது. பொதுவாக இவரது படங்கள் சிறப்பாக இருக்கும்...
இது Charlestown எனும் ஊரில் வங்கிகள் கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள் பற்றிய திரைப்படம். இந்த ஊரில் வங்கிகளை கொள்ளை அடிப்பதயே குலத்தொழிலாக வைத்து உள்ளனர். அப்பாவிற்கு பிறகு மகன்கள் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.
5 பேர் கொண்ட குழுவாக கொள்ளை அடிக்கின்றனர். இதற்கு எல்லாம் மூளையாக செயல்படுவது Doug (Ben Affleck - Argo ) , இன்னொருவன் மூர்க்கத்தனமான குணம் உடைய James ( Jeremy Renner - Wind River ) மற்றும் செக்யூரிட்டி சிஸ்டம்களில் கைதேர்ந்த இன்னொருவன் என பட்டியல் நீள்கிறது.
இந்நிலையில் ஒரு பேங்கை கொள்ளை அடிக்கும் போது பிணைக்கைதியாக அந்த பேங்கின் பெண் மேனேஜரை(Claire- Rebecca Hall) பிடித்துக் கொண்டு வருகின்றனர். பின்னர் பத்திரமாக அனுப்பி வைக்கின்றனர்.
அந்த பெண் FBI - ஐ தொடர் கொள்கிறாரா என்பதை கண்காணிக்க அவரை பின் தொடர்ந்து செல்லும் Doug அவளை காதலிக்க ஆரம்பிக்கிறான்.
இந்நிலையில் மேலும் ஒரு கொள்ளையில் ஈடுபடுகிறது இந்த கும்பல்.. FBI இவர்களை பிடிக்க தீவிரமாக தேடுகிறது.
Doug இந்த கொள்ளை தொழிலில் இருந்து வெளியே வர முயற்சிக்கிறான் . ஆனால் முதலாளி Claire - ஐ கொன்று விடுவதாக மிரட்டுகிறான்.
சிக்கலான சூழ்நிலையில் மிகவும் கடினமான ஒரு கொள்ளையை திட்டமிடுகிறார்கள். FBI - இதை மோப்பம் பிடித்து விடுகிறது. கொள்ளை அடித்தார்களா.... Doug - கொள்ளை கும்பலில் இருந்து வெளியேறினான என்பது க்ளைமாக்ஸ்...
படம் ஆரம்பத்தில் இருந்து பரபரப்பாக செல்கிறது..சில நேரங்களில் அதிகமாக பேசுவது போல் இருந்தாலும் போர் அடிக்கவில்லை. அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.
Director: Ben Affleck
Cast: Ben Affleck, Jeremy Renner, Slaine, Owen Burke, Jon Hamm, Rebecca Hall, Blake Lively, Pete Postlethwaite, Chris Cooper
Screenplay: Peter Craig and Ben Affleck & Aaron Stockard, based on the novel Prince of Thieves by Chuck Hogan
Cinematography: Robert Elswit
Music: David Buckley, Harry Gregson-Williams
Available in Netflix and Amazon Prime Video
கருத்துகள்
கருத்துரையிடுக