இது UK - வில் இருந்து வந்த ஒரு பேய் படம். பேய் படம் என்பதை விட ஒரு சைக்காலஜிக்கல் ஹாரர் படம் என்றால் சரியாக இருக்கும். சூடானில் நடக்கும் உள்நாட்டு போரில் சிக்கிய ஒரு கருப்பின தம்பதியினர் (Bol - Sope Drisu மற்றும் Rial - Wummi Mosaku) குழந்தையுடன் கள்ளப் படகில் தப்பி இங்கிலாந்து வருகின்றனர். ஆனால் வரும் வழியில் கடலில் நடந்த விபத்தில் குழந்தையை பறிகொடுத்து விடுகின்றனர். இங்கிலாந்து வந்து சேர்ந்த பின்பு காவலில் வைக்கப்படுகின்றனர். சிறிது காலம் கழித்து பல நிபந்தனைகளுடன் ஒரு வீடு கொடுக்கிறது அரசு. Bol புதிய வாழ்க்கை தொடங்கலாம் என சந்தோஷமாக உள்ளான். ஆனால் Rial குழந்தை இறந்த நிகழ்வில் இருந்து வெளியே வர முடியாமல் தவிர்க்கிறார். இந்நிலையில் இரவு நேரங்களில் வீட்டின் சுவருக்குள் இருந்து பல விதமான சத்தங்கள் கேட்கிறது. திடீர் திடீரென்று கோரமான உருவங்கள் சுவரில் இருந்து வந்து Bol - ஐ பயமுறுத்துகிறது. குறிப்பாக அவர்களுடைய இறந்து போன மகளின் உருவத்துடன் கொடூரமான ஒரு பேய் அடிக்கடி வருகிறது. ஆனால் Rial - ன் கணிப்புப்படி அவர்கள் கடலில் பயணம் செய்து வந்தபோது கூடவே வந்த ஒரு சூனியக்காரன் இங்கு உள்ள
ஹாலிவுட் மற்றும் கொரியன் திரைப்பட விமர்சனங்கள் - Hollywood and Korean Movie Reviews in Tamil