முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

The Queen's Gambit - தி குயின்ஸ் கேம்ஃபிட்(2020)

The Queen's Gambit - தி குயின்ஸ் கேம்ஃபிட்(2020) 


செஸ் விளையாட்டை மையமாக நெட்ப்ளிக்ஸ்ஸில் வெளிவந்துள்ள லிமிடெட் சீரிஸ். 

இந்த தொடர் Elizabeth Harmon (Anya Taylor - Joy) எனும் ஒரு பெண் செஸ் வீராங்கனையை சுற்றி நகர்கிறது. 

the Queen's Gambit review in tamil, Queens Gambit cast, Anya Taylor joy, IMDb Queen's Gambit, netflix queen's gambit,chess Olympiad Chennai 2022



9 வயதில் கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பும் எலிசபெத் அதே விபத்தில் தாயை இழந்து அநாதை ஆகிறார். 

அரசாங்கம் இவரை ஆதரவற்றோர் விடுதியில் சேர்க்கிறது. அங்கு பணிபுரியும் Mr.Shaibel (Bill Camp) பேஸ்மென்ட்டில் தனியாக செஸ் விளையாடுவதை பார்க்கிறார். தினமும் கவனித்து வருகிறார். 

ஒருமுறை எவ்வாறு விளையாட வேண்டும் என்று கேட்கிறார். அவர் உனக்கு இந்த விளையாட்டை பற்றி என்ன தெரியும் என கேட்கிறார். எனக்கு இந்த விளையாட்டின் பெயர் கூட தெரியாது ஆனால் King , Rook, Queen, knight என ஒவ்வொன்றும் எவ்வாறு நகரும் என்பதை சரியாக சொல்கிறார். 

இதனால் வியப்படையும் Shaibel செஸ் விளையாட்டை சொல்லித்தர ஆரம்பிக்கிறார். இயற்கையாகவே விளையாட வருகிறது எலிசபெத்க்கு. விரைவிலேயே Shaibel-ஐ வீழ்த்துகிறார். 

இதன் பின்னர் Shaibel தகவல் கொடுத்ததன் பெயரில் பக்கத்தில் உள்ள பெரிய பள்ளியில் இருக்கும் செஸ் கிளப்பில் இருந்து ஒருவர் வந்து செஸ் விளையாட அங்கு வருமாறு அழைக்கிறார். 

செஸ் கிளப்பில் ஒரே நேரத்தில் 12 நபர்களுடன் விளையாடி அனைவரையும் வீழ்த்துகிறார். 

இந்நிலையில் ஒரு தம்பதி எலிசபெத்தை தத்து எடுக்கின்றனர். சிறிது காலத்தில் அவரின் வளர்ப்பு தந்தை விட்டு விட்டு போய் விடுகிறான். தன் வளர்ப்பு தாய் Alma - உடன் இருவரும் பணமில்லாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் Shaibel உதவியுடன் 5 டாலர்கள் நுழைவு கட்டணம் செலுத்தி 100 டாலர்களை ஒரு செஸ் டோர்னமென்ட்டில் வெல்கிறார். 

இதிலிருந்து செஸ் விளையாட்டை தன் வாழ்க்கையாக்கி கொள்கிறார். அவரது வளர்ப்புத் தாயும் பணம் கிடைக்கிறது என்பதால் இதற்கு சம்மதிக்கிறார். 

இதிலிருந்து பல ஊர்களுக்கு சென்று போட்டியில் பங்கேற்று எளிதாக வெற்றி பெற்று பெரும் பணம் சம்பாதிக்கிறார். 

செஸ் விளையாட்டு தான் பிரதானம் என்றாலும் பல கதாபாத்திரங்கள் வருகிறது. பல வீரர்களை தோற்கடித்தாலும் அனைவரும் ஒரு ஸ்போர்ட்டிவ் அப்ரோச் உடன் எடுத்துக் கொள்கிறார்கள். 

வெற்றி முகத்துடன் தொடரும் எலிசபெத்திற்கு ஒரு தோல்வியை கொடுக்கிறார் Borgov எனும் ரஷ்ய உலக சேம்பியன் . 

அதன் பிறகு மீண்டும் சிறிய இடைவெளியில் Borgov - உடன் ஒரு போட்டி வருகிறது இதில் வெற்றி பெற்றாரா என்பதை தொடரில் பாருங்கள். 

1960 - களில் நடக்கும் கதை அதற்கு ஏற்றவாறு லொக்கேஷன்கள் மற்றும் செட்டிங்குகள் அருமை. 

நிறைய கதாபாத்திரங்கள் வருகின்றனர் ஆனால் அனைவரும் மனதில் நிற்கின்றனர். குறிப்பாக சிறப்பான கடைசி எபிசோட். இந்த எபிசோடில் அனைத்து கதாபாத்திரத்திங்களையும் எமோஷனலாக கனெக்ட் செய்த விதம் அருமை. 

ரொம்ப பரபரப்பாக செல்லும் தொடர் கிடையாது. ஆனால் அடுத்த அடுத்த எபிசோட்களை பார்க்க தூண்டுகிறது. 

அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக Anya Taylor - Joy கலக்கி இருக்கிறார். என்ன ஒரு அருமையான நடிப்பு. 

இசை, படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவு என அனைத்தும் சிறப்பாக உள்ளது. 

கண்டிப்பாக பார்க்க வேண்டிய தொடர்... 

IMDb Rating : 8.8/ 10

Available in Netflix: https://www.netflix.com/title/80234304?s=a&trkid=13747225&t=cp


Creators: Scott Frank, Scott Allan, Allan Scott

Starring: Anya Taylor-Joy, Chloe Pirrie, Bill Camp

Number of Seasons: 1

Number of Episodes: 7


Watch Trailer: 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

எட்ஜ் ஆஃப் டுமாரோ - Edge Of Tomorrow (2014)

எட்ஜ் ஆஃப் டுமாரோ - Edge Of Tomorrow (2014) Tamil Review  இது பிரபல நாயகன் டாம் ஃகுரூஸ் (Tom Cruise) மற்றும் எமிலி (Emily Blunt) இணைந்து நடித்த டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வித்தியாசமான படம். ஏலியன்கள் பூமியை கைப்பற்ற போர் தொடுக்கின்றன. மிகவும் புத்திசாலித்தனமான இருப்பதால் மனித இனத்தால் தாக்கு பிடிக்க முடியாமல் பெருத்த அளவில் உயிர் சேதங்கள் ஏற்படுகின்றது. இந்நிலையில் உள்குத்து அரசியல் காரணங்களால் இது வரை போர்களமே கண்டிராத டாம் க்ரூஸ் நேராக போருக்கு அனுப்பப்படுகிறார். ஐந்து நிமிடங்களில் ஏலியனால் கொல்லப்பட்டு இறந்து விடுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக டைம் லூப்பில் மாட்டிக் கொள்கிறார். எழும் போது போர்களத்தில் எழுகிறார் சண்டை போடுகிறார் மறுபடியும் இறந்து போகிறார். ஒவ்வொரு சுழற்சியின் போதும் புதிதாக சண்டை நுணுக்கங்களை கற்று படத்தில் ராணுவ வீரராக வரும் நாயகியுடன் இணைந்து ஏலியன் தலைவன் ஆன ஆல்ஃபா வை வீழ்த்தி மனித இனத்தை காப்பாற்றினார்களா என்பதே முடிவு. மிகவும் புதிதான கதையம்சம் மற்றும் இயக்கம். போர் காட்சிகள் சிறப்பான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக ‌பார்க்க வேண்டி

My Microsoft Azure - AZ 900 Certification Journey.

இது மாதிரி நெறயா ஆர்ட்டிக்கிள் பார்த்து இருப்பீர்கள். ஆனா என்னோட பயணம் இந்த சர்ட்டிபிகேஷன் முடிச்சே ஆகணும் மற்றும் நேரம் குறைவு என்பதால் பரபரப்பாக  படித்தது. அதுனால ரொம்பவே ப்ராக்டிகலா இருக்கும். எல்லாருக்கும் ஒர்க் ஆகுமானு தெரியாதுங்க. அதனால இத அப்படியே எல்லாம் ஃபாலோ பண்ணாதீங்க.  இது நான் உபயோகித்த வழிமுறைகள் மட்டுமே. Just want to share my experience இந்த செப்டம்பர்க்குள்ள ஏதாவது ஒரு சர்ட்டிபிகேஷன் முடிக்க வேண்டும் என கம்பெனியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.  நான் படிச்சுட்டு இருந்தது GCP Exam க்கு.‌ஆனா திடிரென Azure & GCP எதுனாலும் படிக்கலாம் என்று சொல்லிட்டு நிறைய கட கடவென AZ 900 எழுதி பாஸ் ஆகிவிட்டார்கள்.  நான் எழுதுனா GCP தான் எழுதுவேன் என்று உக்காந்து இருந்தேன். ஆனா எனக்கு தெரிந்த கம்பெனி வட்டத்தில் யாரும் GCP எழுதவில்லை . அதனால் நம்பிக்கை கொஞ்சம் கம்மியாகவே இருந்தது.  இதற்கு நடுவில் ஒரு ஜீனியர் பையன் நான் AZ 900  முடிச்சுட்டேன் என்று கால் பண்ணான். எப்படிடா என்றதும் 2 லிங்கை வாட்ஸ்ஆப்பில் அனுப்பினான். இத மட்டும் படிச்சு தான் நான் பாஸ் ஆனேன் என்றான்.  இதற்கு நடுவில் எங்க