Ozark Tamil Review
இது ஒரு க்ரைம் த்ரில்லர் சீரிஸ். நெட்ப்ளிக்ஸ் தயாரிப்பில் இதுவரை 3 Season - கள் வெளியிடப்பட்டுள்ளது. முதல் சீசன் விமர்சனத்தை இப்பொழுது பார்க்கலாம்.
இது ரொம்பவே டார்க்கான சீரிஸ் எனவே குடும்பத்துடன் பார்ப்பதற்கு ஏற்றது அல்ல.
Marty ( Jason Bateman) - ஒரு Financial Planner . தனது மனைவி Wendy (Laura Linney) , மகன் Jonah மற்றும் மகள் Charlotte - உடன் வசித்து வருகிறான்.
தனது நண்பனுடன் சேர்ந்து ஒரு நிதி நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
ஒரு நாள் இரவு நண்பனிடம் இருந்து ஃபோன் வருகிறது ஆஃபீஸ்க்கு வருமாறு. அங்கே Del என்பவன் உள்ளான் . இவன் மெக்சிகன் போதை பொருள்கள் கடத்தும் குழுவில் பெரிய பதவியில் இருப்பவன். அவனது குழுவினர் கொடுக்கும் கருப்பு பணத்தை தகிட தந்தங்கள் செய்து வெள்ளையாக மாற்றுதில் இவர்களின் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
அவனை ஏமாற்றி பணத்தை இவனது நிறுவனம் திருடிவிட்டது என கூறி அனைவரையும் கொன்று விடுகிறான் Marty ஐ தவிர. நண்பன் இறக்கும் தருவாயில் Marty க்கு இந்த திருட்டை பற்றி தெரியாது என்று சொல்லி விட்டு சாவதால் Marty- ஐ கொல்லாமல் விடுகிறான்.
Marty அவன் உயிரை காப்பாற்றி கொள்ள ...அவன் நண்பன் கொடுத்த ப்ரௌச்சரில் உள்ள Ozark ஊரில் சென்று Del - வேலை பார்க்கும் கார்ட்டலின் பணத்தை மாற்றிக் கொடுக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கதை விடுகிறான்.
இதை நம்பாத Del 8 மில்லியன் டாலர்களை 6 மாதத்திற்குள் மாற்ற வேண்டும் என்றும் இல்லையெனில் குடும்பத்தோடு கொன்று விடுவேன் என்கிறான்.
8 மில்லியன் டாலர்களை காரில் ஏற்றிக் கொண்டு குடும்பத்துடன் ஒஷார்க் ஊருக்குள் வரும் Marty எவ்வாறு இவ்வளவு பணத்தை மாற்றினான் என்பது மீதி கதை.
ஒஷார்க் செம அழகாக இருக்கிறது... படம் பிடித்த லொக்கேஷன்கள் அருமை..
ஒஷார்க் நகரில் இரண்டு குடும்பங்கள் (Langmore and Snell) செல்வாக்குடன் ரவுடி தனம் பண்ணிக்கொண்டு உள்ளனர்.
இதில் Snell குடும்பம் தமக்கு சொந்தமான ஏக்கர் கணக்கான நிலத்தில் போதை தரும் செடியை வளர்த்து வருகின்றனர்.
Marty - செய்யும் சில செயல்கள் இரண்டு குடும்பங்களையும் பாதிக்கிறது. இரண்டு குடும்பங்களும் Marty - ஐ போட்டுத் தள்ள காத்திருக்கின்றனர்.
இதற்கு நடுவில் போலீஸ் மோப்பம் பிடித்து Marty ஏதோ தப்பு செய்கிறான் என்பதை கண்டுபிடித்து ஆதாரங்களுடன் பிடிக்க முயற்சி செய்கின்றனர்.
இவர்கள் அனைவரையும் சமாளித்து குடும்பத்தையும் அரவணைத்து பணத்தை மாற்றுவதற்கு செய்யும் வேலைகள் நேர்த்தியாகவும் ஆர்வத்தை தூண்டும் வகையில் சொல்லப்படுகிறது.
முதல் சீசன் க்ளைமாக்ஸ் செம சூப்பர்.
சில எபிசோட்கள் கொஞ்சம் மெதுவாக செல்கிறது. மற்றபடி கண்டிப்பாக பார்க்க வேண்டிய தொடர்.
IMDb Rating : 8.4/ 10
Available in Netflix
Series Directors: Jason Bateman, Andrew Bernstein, Ellen Kuras, Daniel Sackheim
Series Producer: Patrick Markey
Writers/Creators: Bill Dubuque and Mark Williams
Music: Danny Bensi and Saunder Jurriaans
Cast:
Marty Byrde: Jason Bateman
Wendy Byrde: Laura Linney
Charlotte Byrde: Sofia Hublitz
Jonah Byrde: Skylar Gaertner
Ruth Langmore: Julia Garner
Boyd Langmore: Christopher James Baker
Russ Langmore: Marc Menchaca
Del Rio: Esai Morales
Cade Langmore: Trevor Long
Buddy: Harris Yulin
Roy Petty: Jason Butler Harner
Three: Carson Holmes
Agent Trevor Evans: McKinley Belcher III
Jacob Snell: Peter Mullan
Darlene Snell: Lisa Emery
Sam Dermody: Kevin Johnson
Eugenia Dermody: Sharon Blackwood
Tuck: Evan George Vourazeris
கருத்துகள்
கருத்துரையிடுக