முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Broadchurch - ப்ராட்சர்ச் - Season 1(2013)

இது ஒரு பிரிட்டிஷ் தொடர். ப்ராட்சர்ச் ஒரு அழகான கடற்கரையில் அமைந்துள்ள சிறிய ஊர். ஊரை சுற்றி மலை சூழ்ந்து ரம்மியமாக உள்ளது. 

ஒரு நாள் 11 வயது சிறுவன் Danny கடற்கரையில் பிணமாக கிடக்கிறான். போலீஸ் விசாரணையில் கொலை எனத் தெரிகிறது. 


broadchurch Netflix Series Review In Tamil, creator of broadchurch, Broadchurch cast, broadchurch IMDb, broadchurch Netflix, broadchurch series


Ellie Miller ( Olivia Colman ) பதவி உயர்வுக்காக காத்திருக்கும் போலீஸ் அதிகாரி. ஆனால் சீனியரான Alec Hardy ( David Tennant) சிறுவன் கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். அவருடன் பணிபுரிய விருப்பம் இல்லை என்றாலும் வேறு வழியின்றி Miller அவருடன் இணைந்து விசாரணையில் இறங்குகிறார்.  

முதலில் சந்தேக வலையில் சிக்குவது இறந்த சிறுவனின் 15 வயது அக்கா( Cloe - Charlotte Beaumont) மற்றும் அவளின் 17 வயது காதலன் ( Dean - Jacob Anderson - Game Of Thrones - ல் Grey Worm கதாபாத்திரத்தில் வருபவன். ) 

அடுத்து இறந்த சிறுவனின் அப்பா மீது சந்தேகம் கொள்கின்றனர். சிறிய ஊர் மற்றும் அனைவரும் ஒன்றாக நட்பாக இருப்பதால் சந்தேக பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. 

விசாரணையில் பல நபர்களின் பின்புலம் தோண்டப்படுகிறது. சிறுவனின் அப்பாவின் நண்பன், போலீஸ் அதிகாரி Miller - ன் 11 வயது மகன் , சர்ச் பாதிரியார், நியூஸ் பேப்பர் கடை வைத்திருக்கும் முதியவர், கடலின் அருகில் நாயுடன் வசிக்கும் வயதான ஒரு பெண் என அனைவரும் சந்தேக வலையில் சிக்குகிறார்கள். ஒவ்வொருவரையும் சந்தேகப்பட போதிய காரணங்கள் இருப்பதால் போலீஸ் குழம்புகிறது. 

இதில் சிறப்பானது என்னவென்றால் அனைவரும் ஏதோ ஒரு வகையில் சில விஷயங்களை மறைக்கிறார்கள். அதனால் போலீஸ் போலவே சீரிஸ் பார்க்கும் நமக்கும் யார் கொலை செய்து இருப்பார்கள் என்பதை யூகிக்க முடியாமல் நகர்கிறது. 

ஆனால் கடைசியில் நாம் யூகிக்க முடியாத ஒருவன் தான் கொலைகாரன் என்று கண்டுபிடிப்பது சிறப்பு... 

இன்னொரு ட்ராக்கில் பத்திரிக்கையாளர்கள் TRP - க்காக செய்யும் காரியங்கள் ‌கேவலமாக உள்ளது. 

எனக்கு தெரிந்து நடிப்பு மற்றும் எமோஷனல் காட்சிகள் இந்த தொடரை மற்ற துப்பறியும் தொடர்களில் இருந்து வித்தியாச படுத்துகிறது. 

நடிப்பில் போலீஸ் அதிகாரிகளாக வரும் David Tennant மற்றும் Olivia Colman சிறப்பாக பொருந்தி உள்ளனர். இறந்த சிறுவனின் அம்மாவாக நடித்த Jodie Whittaker சிறப்பாக நடித்திருக்கிறார். 

மொத்தத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய க்ரைம் இன்வெஸ்ட்டிகேஷன் திரில்லர்... 

Cast: David Tennant, Olivia Colman, Jodie Whittaker, Andrew Buchan, Marianne Jean-Baptiste, Charlotte Rampling, Matthew Gravelle, James D'Arcy, Eve Myles, Arthur Darville, Lucy Cohu

IMDb Rating : 8.4/ 10

Available in Netflix 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

X - 2022

Horror, Porn  கலந்து இது போதாது என Slasher வகையும் சேர்த்து வந்துள்ள படம் இது.   IMDb 7.3 Tamil Dub ❌ OTT ❌ , 18+  Porn Film எடுக்க ஒரு பண்ணை வீட்டுக்கு போகும் குழுவிற்கு நேரம் கொடூரங்கள் தான் படம்.  Slasher படத்துக்கே எழுதி வைச்ச டெம்ப்ளேட்.  படம் நடப்பது 1979 ஆம் வருடத்தில்.. 3 ஜோடிகள் (Producer, Director, Actors)  அப்ப பிரபலமாகி வரும் வீடியோ கேசட் மார்க்கெட்டை மையமாக வைத்து மேட்டர் படம் எடுதது கேசட்டா‌ ரிலீஸ் பண்ணா நல்ல காசு பாக்கலாம் என ப்ளான் பண்ணுகிறார்கள்.  படத்தின் டைரக்டர Farmers Daughter's என ஒரு அருமையான மேட்டர் பட ஸ்கிரிப்டை ரெடி பண்ணுகிறார் 😜 .இதை ஒரு பண்ணை வீட்டில் வைத்து எடுத்தால் ரசிகர்கள் படத்துடன் ஒன்றி. விடுவார்கள் என ஐடியா பண்ணி இந்த குரூப் ஊருக்கு ஒதுக்கு புறமான ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கு சூட்டிங் போகிறார்கள்.  அந்த வீட்டின் ஓனர்ஸ் ஒரு வயதான தம்பதியர். ஓனர் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பதால் பிட்டு படம் எடுக்க வந்தோம் என சொல்லாமல் கமுக்கமாக படத்தே எடுக்கிறார்கள்.  ஆனா ஓனரம்மா இவர்கள் பிட்டு படம் எடுப்பதை பார்த்து விடுகிறது. அன்னிக்கு நைட் ஒவ்வொருத்தவங்களா கொடூர

The Old Man - Season 1 (2022)

The Old Man Tamil Review - Season 1 இது ஒரு Action, Thriller, Drama Series.  1 Season, 7 Episodes (1 Episode Yet to release) Available @hulu இதுல ஹீரோ 70+ ல இருக்குற ஒரு வயசான தாத்தா (Jeff Bridges). திடிரென ஒரு நாள் ஒருத்தன் அவர கொல்ல வர்றான். இவரு யாரு ? எதுக்கு கொல்ல வர்றாங்க ? என்பதை சொல்கிறது தொடர்.  Dan Chase மனைவி இறந்த நிலையில் 2 நாய்களுடன் தனிமையில் வசிக்கிறார். திடீரென ஒருத்தன் இவரை கொல்ல வருகிறான் நடக்கும் சண்டையில் நாய்கள் உதவியுடன் அவனை கொன்று விடுகிறார்.  அதன் பிறகு வீட்டை காலி பண்ணிட்டு கிளம்புகிறார். அங்கிட்டு பார்த்தால் FBI ல ஒரு மிகப்பெரிய கூட்டமே இவர் தேடிட்டு இருக்கு.  யார் இந்த தாத்தா ? கிட்டத்தட்ட 30 வருடங்கள் அமைதியாக வாழ்ந்து வந்த இவரின் வாழ்க்கை திடீரென கலவர பூமியாக மாறுவதற்கு காரணம் என்ன என்பதை தற்போது நடக்கும் சம்பவங்கள் மற்றும் ஃப்ளாஷ்பேக் என மாறி மாறி பயணிக்கிறது படம்.  இவருடைய ஃப்ளாஷ் பேக் நடப்பது ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமிப்பு நடந்த சமயத்தில் நடந்த சம்பவங்கள். CIA ஏஜன்ட் ஆன இவர் அங்கு உள்ள ஒரு போராட்டக்குழுவுடன் சேர்ந்து ரஷ்யாவை எதிர்க்கிறான். அங்கு நடந்