இது 1890 - களில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடப்பது போன்ற தொடர்.
சைக்காலஜிஸ்ட் என்று ஒரு மருத்துவ பிரிவு வருவதற்கு முன்பு மனநோய்க்கு ஆளான மக்களுக்கு வைத்தியம் பார்ப்பவர்கள் தான் ஏலியனிஸ்ட்.
தொடரின் கதைக்கு வருவோம். படத்தின் ஆரம்பத்தில் ஒரு சிறுவன் கொடுரமாக கொல்லப்பட்டு ஒரு பாலத்தின் மேல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளான். கொடூரம் என்றால் மிகவும் கொடுரம்... இளகிய மனம் உள்ளவர்கள் இந்த தொடரை பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.
ஊரில் பெயர் பெற்ற ஏலியனிஸ்ட் Lazlo (Daniel Bruhl) -க்கு தகவல் தெரிய வருகிறது. இது இதற்கு முன்னாள் நடந்த இரட்டை குழந்தைகள் கொலை போல இருப்பதாக சந்தேகப்படுகிறார். தன் நண்பன் மற்றும் நியுயார்க் டைம்ஸ் பத்திரிகையில் Illustrator (ஓவியம் வரைபவர்) வேலை செய்யும் John Moore (Luke Evans) -ஐ சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை படம் வரைந்து வர சொல்கிறார்.
முன்னாள் நடந்த கொலைகளுக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இருப்பது உறுதியாகிறது. போலீஸ் துறை மிகவும் மோசமான நிலையில் ஊழல் நிறைந்து சீரழிந்து கிடக்கிறது. புதிதாக போலீஸ் கமிஷனராக பதிவியேற்றுள்ளார் Theodore Roosevelt (Brian Geraghty) ஊருக்கு ஏதாவது நல்லது செய்யலாம் என நினைக்கிறார். வழக்கம் போல் போலீசார்க்குள் அரசியல் புகுந்து விளையாடுவதால் அவரால் ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கிறார்.
இந்நிலையில் Lazlo மற்றும் Theodore இருவரும் ஒன்றாக படித்தவர்கள் மற்றும் சைக்கோ தொடர் கொலைகாரன் என்பதால் மறைமுகமாக விசாரிப்பதற்கு Lazlo மற்றும் John Moore -ஐ அனுமதிக்கிறார் கமிஷனர்.
இவர்களுடன் சேர்ந்து 2 டிடெக்டிவ்கள் மற்றும் தன்னுடைய அசிஸ்டென்ட் மற்றும் நியூயார்க் போலீஸ் துறையில் முதல் பெண்ணாக பணியில் சேர்ந்து இருக்கும் Sara (Dakota Fanning ) ம் இந்த கொலை கேஸில் பணியாற்ற அனுமதிக்கிறார்.
விசாரணை பல கோணங்களில் நடக்கிறது. அதே நேரத்தில் சிறுவர்கள் கொடூரமான முறையில் கொல்லப்படுவது தொடர்கிறது.
ஒரு கட்டத்தில் பெரிய பணக்காரர் ஒருவரின் மகன் தான் கொலைகாரன் என்று முடிவுக்கு வருகையில் கடைசியில் ஒரு ட்விஸ்ட்.
மறுபடியும் வேறு கோணத்தில் விசாரணை தொடங்குகிறார்கள்.
தொடர் ஆரம்பத்தில் இருந்து யார் கொலைகாரன் என்ற சஸ்பென்ஸ் உடன் நகர்த்தியவிதம் மிக அருமை. அவன் எவ்வாறு வருகிறான் , எப்படி கடத்தி செல்கிறான் என்பதையும் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். இந்த சஸ்பென்ஸ் நமக்கு அடுக்த அடுத்த எபிசோடை பார்க்க தூண்டுகிறது.
அந்த காலத்து நியூயார்க் நகரம் தத்ரூபமான முறையில் வடிவமைக்கப்பட்டு சிறப்பாக படம் பிடிக்கப்பட்டு உள்ளது. அந்த கால செட்டிங் மற்றும் ஒரு இருள் சூழ்ந்த படப்பிடிப்பு கதைக்கு சிறப்பாக பொருந்தி உள்ளது.
சில எபிசோட்கள் கொஞ்சம் மெதுவாக நகர்கிறது. நல்ல துப்பறியும் கதை... ஆனால் எனக்கு என்னமோ ஏலியனிஸ்ட் என்று தொடர் பெயரை வைத்து விட்டு அந்த கதாபாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவம் கொடுத்த மாதிரி தெரியவில்லை. எல்லாரும் கொலையாளியை கண்டுபிடிக்க கூட்டாக முயற்சி செய்கின்றனர்.
முதல் சீசனில் மொத்தம் 10 எபிசோட்கள் உள்ளது. முன்னாடியே சொன்னது போல் இளகிய மனம் கொண்டவர் இந்த தொடரை தவிர்ப்பது நல்லது.
மொத்தத்தில் சீரியல் கில்லர் , துப்பறியும் படங்கள்/தொடர்கள் பிடிக்கும் என்பவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.
IMDb Rating :7.7/ 10
Available in Netflix .
Cast: Daniel Brühl, Luke Evans, Dakota Fanning, Brian Geraghty, Douglas Smith, Matthew Shear
கருத்துகள்
கருத்துரையிடுக