இது ஒரு பிரிட்டிஷ் தொடர். ப்ராட்சர்ச் ஒரு அழகான கடற்கரையில் அமைந்துள்ள சிறிய ஊர். ஊரை சுற்றி மலை சூழ்ந்து ரம்மியமாக உள்ளது. ஒரு நாள் 11 வயது சிறுவன் Danny கடற்கரையில் பிணமாக கிடக்கிறான். போலீஸ் விசாரணையில் கொலை எனத் தெரிகிறது. Ellie Miller ( Olivia Colman ) பதவி உயர்வுக்காக காத்திருக்கும் போலீஸ் அதிகாரி. ஆனால் சீனியரான Alec Hardy ( David Tennant) சிறுவன் கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். அவருடன் பணிபுரிய விருப்பம் இல்லை என்றாலும் வேறு வழியின்றி Miller அவருடன் இணைந்து விசாரணையில் இறங்குகிறார். முதலில் சந்தேக வலையில் சிக்குவது இறந்த சிறுவனின் 15 வயது அக்கா( Cloe - Charlotte Beaumont) மற்றும் அவளின் 17 வயது காதலன் ( Dean - Jacob Anderson - Game Of Thrones - ல் Grey Worm கதாபாத்திரத்தில் வருபவன். ) அடுத்து இறந்த சிறுவனின் அப்பா மீது சந்தேகம் கொள்கின்றனர். சிறிய ஊர் மற்றும் அனைவரும் ஒன்றாக நட்பாக இருப்பதால் சந்தேக பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. விசாரணையில் பல நபர்களின் பின்புலம் தோண்டப்படுகிறது. சிறுவனின் அப்பாவின் நண்பன், போலீஸ் அதிகாரி Miller - ன் 11 வயத
ஹாலிவுட் மற்றும் கொரியன் திரைப்பட விமர்சனங்கள் - Hollywood and Korean Movie Reviews in Tamil