இது ஒரு நெட்பிளிக்ஸ் சீரிஸ். ரஷ்யாவில் இருந்து வந்துள்ள தொடர்...
தொடரின் போஸ்டர்களை பார்த்தால் ஜாம்பிகள் பற்றிய தொடர் மாதிரி இருந்தது. அது போக உலகம் அழியும் போது தப்பிப்பதை பற்றிய தொடர் போல இருந்தது.
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் ஒருவிதமான நோய் பரவுகிறது. நோய் பாதிப்புக்கு உள்ளாகும் நபர்கள் கண்கள் வெள்ளை நிறமாக மாறி இறந்து விடுகின்றனர். எப்படி இந்த நோய் வந்தது ? எவ்வாறு பரவுகிறது என்பது மர்மமாக உள்ளது.
இந்நிலையில் நாயகன் தன்னுடைய மனைவி மற்றும் மகனுடன் மாஸ்கோவிற்கு வெளியே வசித்து வருகிறான். அப்போது அங்கு வரும் நாயகனின் அப்பா மிகப்பெரிய அழிவு இந்த நோயால் ஏற்படும் என்கிறார்.
தனக்கு சொந்தமான போட் ஒன்றை ஏரி ஒன்றில் புதுப்பித்து வைத்து உள்ளதாகவும் அது மாஸ்கோவில் இருந்து வெகுதொலைவில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருப்பதாக சொல்கிறார். இந்த கலவரம் முடியும் வரை அங்கு சென்று தங்கி விடலாம் என்கிறார்.
நாயகனின் முன்னாள் மனைவி மற்றும் அவன் குழந்தை மாஸ்கோவில் வசிக்கின்றனர். அவர்களையும் சேர்த்து கொண்டு ஏரிக்கு செல்ல திட்டம் இடுகின்றான் நாயகன்.
நாயகன், அவன் மனைவி, முன்னாள் மனைவி, அவனுடைய 2 மகன்கள்(ஒரு சிறுவன் மற்றும் கொஞ்சம் வித்தியாசமான குணாதிசயங்கள் கொண்ட டீன் ஏஜ் பையன்) , நாயகனின் பணக்கார நண்பன், அவனுடைய கர்ப்பிணி மனைவி மற்றும் குடிக்கு அடிமையான மகள் மற்றும் நாயகனின் அப்பா என 3 கார்களில் கிளம்புகிறார்கள்.
போகும் வழியில் இந்த குடும்பம் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் குடும்ப உறவில் வரும் சிக்கல்களை மையமாக வைத்து நகர்கிறது இந்த தொடர்.
ஒவ்வொரு எபிசோடும் பரபரப்பாகவே செல்கிறது.
இசை மற்றும் ஒளிப்பதிவு அருமை... அதுவும் பனி படர்ந்து இருக்கும் ரஷ்யாவின் அமைப்பு அழிவு சம்பந்தப்பட்ட சம்பவங்களுக்கு நன்கு பொருந்துகிறது.
பெரிதாக தெரிந்த நடிகர்கள் எவரும் இல்லை .. அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள்.
மனிதாபிமானம் , குடும்ப உறவில் வரும் சிக்கல்களை கலந்து எடுக்கப்பட்ட ஒரு சர்வைவல் தொடர் தான் இது.
நல்ல டைம் பாஸ் கண்டிப்பாக பார்க்கலாம்.
IMDb Rating: 7.2/ 10
Available in Netflix
Director: Pavel Kostomarov
Stars: Kirill Käro, Maryana Spivak, Viktoriya Agalakova, Viktoriya Isakova
கருத்துகள்
கருத்துரையிடுக