முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Spectral - ஸ்பெக்ட்ரல் (2016)

படத்தின் ஆரம்பத்தில் ஒரு மிலிட்டரி வீரன் அதிநவீன ஆயுதங்களுடன் சண்டை போடுகிறார். அந்த நேரத்தில் அவனுடைய அதி நவீன கண் கண்ணாடி வழியாக ஆவி போன்ற ஒரு உருவம் தென்படுகிறது. என்ன என யோசிப்பதற்குள் அவனை கொன்று விடுகிறது அந்த உருவம். 

க்ளைன் (James Badge Dale) - இராணுத்திற்கு ஆயுதங்கள் தயாரித்து கொடுக்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.‌இராணுவ வீரர்கள் உபயோகிக்கும் அதிநவீன கண்ணாடிகள் உட்பட பல கருவிகள் இவருடைய உழைப்பில் உருவானவை. 

முதல் காட்சியில் இறந்த வீரனின் மரணத்திற்கான காரணம் தெரியாமல் தவிக்கும் இராணுவ தலைமை அதிகாரி க்ளைனின் உதவியை நாடுகிறார். 

இராணுவ முகாமிற்கு செல்கிறார் க்ளைன். அவருக்கும் எதுவும் புரியவில்லை... இந்நிலையில் அங்கு உள்ள CIA அதிகாரி ஃப்ரான் (Emily Mortimer) இது எதிரிகளினால் கண்டுபிடிக்கப் பட்ட உருவத்தை மறைக்கும் புதிய டெக்னாலஜி என்கிறார். ஆதாரங்கள் இல்லாமல் மேலிடத்திற்கு தெரிவிக்க முடியாது என்பதால் அதை படம் பிடிக்க புது வித கேமராவுடன் இராணுவ வீரர்களுடன் ஆப்ரேஷனுக்கு கிளம்புகிறார் க்ளைன் மற்றும் ஃப்ரான். 

போன இடத்தில் பல உருவங்கள் சேர்ந்து தாக்குகின்றன. கண்ணுக்கு புலப்படாத நிலையில் இருப்பதால் என்னவேன்று யோசிப்பதற்குள் பெரும்பாலான வீரர்கள் இறந்து விடுகின்றனர். இவர்கள் வந்த வாகனமும் சேதமடய அங்கு உள்ள ஒரு கட்டிடத்தில் தஞ்சம் அடைகிறார்கள். உருவங்கள் சில காரணங்களால் கட்டிடத்தை நெருங்க முடியாமல் போகிறது. கட்டிடத்தின் உள்ளே இரு குழந்தைகளை மீட்கின்றனர். அவர்களின் மூலம் இந்த உருவங்களை பற்றி தெரிந்து கொள்கிறான் க்ளைன். 

அந்த உருவங்கள் பெருகி ராணுவ முகாமை அழித்து விடுகிறது. இந்த தாக்குதலில் தப்பித்த அனைவரும் ஒரு அகதிகள் முகாமில் தஞ்சம் அடைகிறார்கள். 

அங்கு இருந்து கொண்டு எவ்வாறு இந்த கண்ணுக்கு தெரியாத உருவங்களுடன் போரிட்டு வெற்றி பெற்றனர் என்பதை படத்தில் பாருங்கள். 

படம் பரபரப்பாக செல்கிறது ஆரம்பத்தில் இருந்து. அந்த உருவம் ஆவி , ஏலியன், ப்ரிடேட்டர் படத்தில் வரும் ஏலியன் என அனைத்தும் கலந்த கலவையாக உள்ளது. 

அந்த உருவம் அமானுஷ்ய சக்தியா, ஏலியனா இல்லை அறிவியல் கண்டுபிடிப்பா என்று தெரியும் முன்பே பாதி படத்திற்கு மேல் பரபரவென்று சென்று விடுகிறது. 

அதன் பின்பு கண்ணுக்கு தெரியாத உருவங்களை பிளான் பண்ணி தூக்குகிறார் நாயகன் மற்றும் மிலிட்டரி வீரர்கள். 

நல்ல ஒரு சயின்ஸ் பிக்சன் மற்றும் ஆக்ஷ்ன் திரைப்படம். நல்ல டைம் பாஸ் திரைப்படம். 

கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம் 👍

IMDb Rating: 6.3/10


Cast : James Badge Dale, Emily Mortimer, Bruce Greenwood, Max Martini, Cory Hardrict, Clayne Crawford, Gonzalo Menendez, Ursula Parker, Aaron Serban, Stephen Root, Royce Pierreson, Jimmy Akingbola, Philip Bulcock, Ryan Robbins, Dylan Smith, Louis Ozawa Changchien, James D. Dever, Mark O’Neal, Michael Bodie, Declan Hannigan  

Director:  Nic Mathieu



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

எட்ஜ் ஆஃப் டுமாரோ - Edge Of Tomorrow (2014)

எட்ஜ் ஆஃப் டுமாரோ - Edge Of Tomorrow (2014) Tamil Review  இது பிரபல நாயகன் டாம் ஃகுரூஸ் (Tom Cruise) மற்றும் எமிலி (Emily Blunt) இணைந்து நடித்த டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வித்தியாசமான படம். ஏலியன்கள் பூமியை கைப்பற்ற போர் தொடுக்கின்றன. மிகவும் புத்திசாலித்தனமான இருப்பதால் மனித இனத்தால் தாக்கு பிடிக்க முடியாமல் பெருத்த அளவில் உயிர் சேதங்கள் ஏற்படுகின்றது. இந்நிலையில் உள்குத்து அரசியல் காரணங்களால் இது வரை போர்களமே கண்டிராத டாம் க்ரூஸ் நேராக போருக்கு அனுப்பப்படுகிறார். ஐந்து நிமிடங்களில் ஏலியனால் கொல்லப்பட்டு இறந்து விடுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக டைம் லூப்பில் மாட்டிக் கொள்கிறார். எழும் போது போர்களத்தில் எழுகிறார் சண்டை போடுகிறார் மறுபடியும் இறந்து போகிறார். ஒவ்வொரு சுழற்சியின் போதும் புதிதாக சண்டை நுணுக்கங்களை கற்று படத்தில் ராணுவ வீரராக வரும் நாயகியுடன் இணைந்து ஏலியன் தலைவன் ஆன ஆல்ஃபா வை வீழ்த்தி மனித இனத்தை காப்பாற்றினார்களா என்பதே முடிவு. மிகவும் புதிதான கதையம்சம் மற்றும் இயக்கம். போர் காட்சிகள் சிறப்பான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக ‌பார்க்க வேண்டி

My Microsoft Azure - AZ 900 Certification Journey.

இது மாதிரி நெறயா ஆர்ட்டிக்கிள் பார்த்து இருப்பீர்கள். ஆனா என்னோட பயணம் இந்த சர்ட்டிபிகேஷன் முடிச்சே ஆகணும் மற்றும் நேரம் குறைவு என்பதால் பரபரப்பாக  படித்தது. அதுனால ரொம்பவே ப்ராக்டிகலா இருக்கும். எல்லாருக்கும் ஒர்க் ஆகுமானு தெரியாதுங்க. அதனால இத அப்படியே எல்லாம் ஃபாலோ பண்ணாதீங்க.  இது நான் உபயோகித்த வழிமுறைகள் மட்டுமே. Just want to share my experience இந்த செப்டம்பர்க்குள்ள ஏதாவது ஒரு சர்ட்டிபிகேஷன் முடிக்க வேண்டும் என கம்பெனியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.  நான் படிச்சுட்டு இருந்தது GCP Exam க்கு.‌ஆனா திடிரென Azure & GCP எதுனாலும் படிக்கலாம் என்று சொல்லிட்டு நிறைய கட கடவென AZ 900 எழுதி பாஸ் ஆகிவிட்டார்கள்.  நான் எழுதுனா GCP தான் எழுதுவேன் என்று உக்காந்து இருந்தேன். ஆனா எனக்கு தெரிந்த கம்பெனி வட்டத்தில் யாரும் GCP எழுதவில்லை . அதனால் நம்பிக்கை கொஞ்சம் கம்மியாகவே இருந்தது.  இதற்கு நடுவில் ஒரு ஜீனியர் பையன் நான் AZ 900  முடிச்சுட்டேன் என்று கால் பண்ணான். எப்படிடா என்றதும் 2 லிங்கை வாட்ஸ்ஆப்பில் அனுப்பினான். இத மட்டும் படிச்சு தான் நான் பாஸ் ஆனேன் என்றான்.  இதற்கு நடுவில் எங்க