முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Operation Odessa - ஆப்ரேஷன் ஒடெசா (2018)

Operation Odessa - ஆப்ரேஷன் ஒடெசா (2018) Documentary  Tamil Review


இது ஒரு நெட்ப்ளிக்ஸ் டாக்குமெண்டரி... 

டாக்குமெண்டரி ஆரம்பத்தில் ஒருவர் பேசுகிறார்.. 

நான் ஒருத்தனுக்கு ஃபோன் பண்ணி ஒரு நீர்மூழ்கிக் கப்பல் வாங்கனும் கிடைக்குமா என்று கேட்டேன்... 

Operation Odessa Netflix, operation Odessa IMDb, operation Odessa Review in tamil, Pablo Escobar, drug cartel, submarine, real story, cali cartel,


அவன் நான் கேட்டு சொல்றேன்னு சொல்லிட்டு போன வச்சுட்டான். 

இரண்டு நாள் கழித்து ஃபோன் பண்ணி With nuclear missiles or without nuclear missiles? வேண்டுமா என்று கேட்டான் என்று சொல்லி சிரிக்கிறான். 

ஆம் அமெரிக்காவில் வசிக்கும் 3 நண்பர்கள் இணைந்து ரஷ்யாவின் நீர்மூழ்கி கப்பலை விலை பேசி கொலம்பியாவை சேர்ந்த போதை பொருள் கடத்தும் குழுவுக்கு விற்பனை செய்வதற்கு செய்த கூத்துகளை பற்றி சொல்வது தான் இந்த ஆவணப்படம். 

படத்தில் முக்கியமான 3 பேர் நடந்த உண்மைச் சம்பவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். 

முதலில் Tarzan - ரஷ்யாவை சேர்ந்த இவன் பிழைப்புக்காக அமெரிக்கா வந்து சட்டவிரோத சம்பவங்களில் சம்பாதித்த பணத்தை வைத்து மியாமி நகரில் இரவு விடுதி‌ நடத்தி வருகிறான். 

Juan - இவன் ஒரு ப்ளே பாய் ..‌ படகுகள் விற்பது , மோட்டார் சைக்கிள், கார்கள் விற்பனை செய்வது இவன் தொழில்.. 

Tony - கியூபாவை சேர்ந்த உளவாளி 

இவர்கள் மூவரும் எவ்வாறு சந்தித்தார்கள் நண்பர்களான பின்பு செய்த அட்டகாசங்களை அவர்களே சொல்கின்றனர். 

உதாரணமாக ரஷ்யா சென்று வாடகைக்கு ஹெலிகாப்டர் எடுத்து செல்லும் இடத்திற்கு வழி தெரியாமல் ஊருக்கு நடுவே இறக்கி முகவரி கேட்டது பற்றி சொல்கிறார்கள். 

இதற்கு நடுவே இந்த வழக்கை விசாரனை செய்த அமெரிக்கா போலீசார் எவ்வாறு இந்த கூட்டத்தின் மீது சந்தேகம் வந்தது இவர்களை பிடிக்க செய்த சாகசங்களை பற்றி பேசுகிறார்கள். 

ஆவணப்படங்கள் பொதுவாக கொஞ்சம் மெதுவாக செல்லும் ஆனால் இந்த படம் வேற லெவல்... 

திரைப்படமாக எடுக்க கூடிய கன்டென்ட் உள்ளது இப்படத்தில்...

நம்பவே முடியாத சம்பவங்கள்... ஆனால் ஆவணப்பட குழுவின் கூற்றுப்படி இது 100% உண்மை... பல ஆதாரங்களும் காட்டப்படுகிறது... 

நீங்களே பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள்...

IMDb Rating : 7.8/10

Available in Netflix 

Director: Tiller Russell

Producer: Eli Holzman, Aaron Saidman, Sheldon Yellen

Cinematographer: Kenny Stoff

Editor: Greg Tillman

Music: Shrapnel

Cast: Ludwig Fainberg, aka "Tarzan", Juan Almeida, Nelson Tony Yester, Kristy Galeota, Tony Galeota, Brent Eaton, Mike McShane, Dick Gregorie


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

X - 2022

Horror, Porn  கலந்து இது போதாது என Slasher வகையும் சேர்த்து வந்துள்ள படம் இது.   IMDb 7.3 Tamil Dub ❌ OTT ❌ , 18+  Porn Film எடுக்க ஒரு பண்ணை வீட்டுக்கு போகும் குழுவிற்கு நேரம் கொடூரங்கள் தான் படம்.  Slasher படத்துக்கே எழுதி வைச்ச டெம்ப்ளேட்.  படம் நடப்பது 1979 ஆம் வருடத்தில்.. 3 ஜோடிகள் (Producer, Director, Actors)  அப்ப பிரபலமாகி வரும் வீடியோ கேசட் மார்க்கெட்டை மையமாக வைத்து மேட்டர் படம் எடுதது கேசட்டா‌ ரிலீஸ் பண்ணா நல்ல காசு பாக்கலாம் என ப்ளான் பண்ணுகிறார்கள்.  படத்தின் டைரக்டர Farmers Daughter's என ஒரு அருமையான மேட்டர் பட ஸ்கிரிப்டை ரெடி பண்ணுகிறார் 😜 .இதை ஒரு பண்ணை வீட்டில் வைத்து எடுத்தால் ரசிகர்கள் படத்துடன் ஒன்றி. விடுவார்கள் என ஐடியா பண்ணி இந்த குரூப் ஊருக்கு ஒதுக்கு புறமான ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கு சூட்டிங் போகிறார்கள்.  அந்த வீட்டின் ஓனர்ஸ் ஒரு வயதான தம்பதியர். ஓனர் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பதால் பிட்டு படம் எடுக்க வந்தோம் என சொல்லாமல் கமுக்கமாக படத்தே எடுக்கிறார்கள்.  ஆனா ஓனரம்மா இவர்கள் பிட்டு படம் எடுப்பதை பார்த்து விடுகிறது. அன்னிக்கு நைட் ஒவ்வொருத்தவங்களா கொடூர

The Old Man - Season 1 (2022)

The Old Man Tamil Review - Season 1 இது ஒரு Action, Thriller, Drama Series.  1 Season, 7 Episodes (1 Episode Yet to release) Available @hulu இதுல ஹீரோ 70+ ல இருக்குற ஒரு வயசான தாத்தா (Jeff Bridges). திடிரென ஒரு நாள் ஒருத்தன் அவர கொல்ல வர்றான். இவரு யாரு ? எதுக்கு கொல்ல வர்றாங்க ? என்பதை சொல்கிறது தொடர்.  Dan Chase மனைவி இறந்த நிலையில் 2 நாய்களுடன் தனிமையில் வசிக்கிறார். திடீரென ஒருத்தன் இவரை கொல்ல வருகிறான் நடக்கும் சண்டையில் நாய்கள் உதவியுடன் அவனை கொன்று விடுகிறார்.  அதன் பிறகு வீட்டை காலி பண்ணிட்டு கிளம்புகிறார். அங்கிட்டு பார்த்தால் FBI ல ஒரு மிகப்பெரிய கூட்டமே இவர் தேடிட்டு இருக்கு.  யார் இந்த தாத்தா ? கிட்டத்தட்ட 30 வருடங்கள் அமைதியாக வாழ்ந்து வந்த இவரின் வாழ்க்கை திடீரென கலவர பூமியாக மாறுவதற்கு காரணம் என்ன என்பதை தற்போது நடக்கும் சம்பவங்கள் மற்றும் ஃப்ளாஷ்பேக் என மாறி மாறி பயணிக்கிறது படம்.  இவருடைய ஃப்ளாஷ் பேக் நடப்பது ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமிப்பு நடந்த சமயத்தில் நடந்த சம்பவங்கள். CIA ஏஜன்ட் ஆன இவர் அங்கு உள்ள ஒரு போராட்டக்குழுவுடன் சேர்ந்து ரஷ்யாவை எதிர்க்கிறான். அங்கு நடந்