முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

DAVID ATTENBOROUGH: A LIFE ON OUR PLANET (2020)

டேவிட் அட்டன்பரோ - குறிப்பிட்டு சொல்லக் கூடிய ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் விலங்குகள் பற்றிய பல ஆவணப்படங்களில் பணி புரிந்து உள்ளார். 

தனிப்பட்ட முறையில் அவருடைய விசிறி நான். அவருடைய டாக்குமெண்டரிகள் அனைத்தும் வாவ் சொல்ல வைக்கும் ரகங்கள். Planet Earth, Blue Planet, Life on Earth போன்ற அவரின் டாக்குமெண்டரிகளை பார்த்து பிரமிப்பு அடைந்திருக்கிறேன். 

இவருடைய வயது 94. இந்த வயதில் ஒரு டாக்குமெண்டரி வெளியிட்டு உள்ளார் என்றதும் உடனே ஆர்வம் தொற்றிக் கொண்டது. 

படத்தின் ஆரம்பத்தில் ஒரு பாழடைந்த நகரம் காட்டப்படுகிறது. கைவிடப்பட்ட கட்டிடத்தில் இருந்து டேவிட் அட்டன்பரோ கேமரா மற்றும் நமக்காக பேச ஆரம்பிக்கிறார். 

ஒரு சிறிய மனித தவறு தற்போது தான் நிற்கும் செர்னோபில் மற்றும் சுற்றுப்புறத்தை எவ்வாறு மனிதர்கள் வாழ முடியாமல் மாற்றிவிட்டது என்பதை விளக்குகிறார்.

தான் தன்னுடைய Career - ஐ தொடங்கும் போது இருந்த அளவிலான காடுகள் மற்றும் Bio-diversity தற்போது இல்லை என்கிறார். தான் உலகில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் போய் வந்து ஆவணப்படுத்தியது பற்றியும் பேசுகிறார். 
பூமி இந்த 50+ ஆண்டுகளில் மனிதர்களால் எவ்வாறு சூறையாடப்பட்டு உள்ளது என்பதையும் புள்ளிவிபரங்களுடன் புட்டு புட்டு வைக்கிறார். 

எடுத்துக்காட்டாக ஆரம்பத்தில் 66% காடுகள் இருந்த பூமியில் தற்போது உள்ள காடுகள் 33% மட்டுமே... 

இதுவரை உலகம் 5 பேரழிவுகளை சந்தித்து உள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் மீண்டெழுந்து வந்து உள்ளது. 6 வது முறை இது போன்ற அழிவு வந்தால் கண்டிப்பாக இயற்கை மீண்டு விடும் ஆனால் மனித இனம் அதில் இருப்பது சந்தேகமே என்கிறார்... 

அதோடு மட்டுமல்லாமல் எவ்வாறு உலகை அழிவிலிருந்து எவ்வாறு காப்பாற்ற முடியும் என்பதை பற்றியும் ஆதாரங்களுடன் பட்டியல் இடுகிறார். உதாரணமாக நெதர்லாந்து மற்றும் கோஸ்ட்டா ரிக்கா போன்ற நாடுகள் எவ்வாறு இயற்கையை பாதுகாக்கின்றன என்பதை கூறுகிறார். 

கடைசியில் மனிதர்களால் கைவிடப்பட்ட செர்னோபில்லில் எவ்வாறு காடுகள் மறுபடியும் உருவாகி உள்ளது மற்றும் விலங்குகளின் புகலிடமாக இருக்கிறது என்பதை காட்டுவது அருமை. 

ஏன் இந்த டாக்குமெண்டரியை பார்க்க வேண்டும் என்பதற்கு 1000 காரணங்கள் என்னால் சொல்ல முடியும். 

இதை பார்க்காமல் இருப்பதற்கு என்னால் ஒரு காரணம் கூட சொல்ல முடியாது. 

கண்டிப்பாக பாருங்கள்... முடிந்தால் குழந்தைகளையும் பார்க்க வைத்து அவர்களுக்கு புரியவில்லை என்றால் விளக்கம் கூறுங்கள். 

David Attenborough - Respect Sir....

IMDb Rating : 9.2/ 10

Released in Netflix 

Directors: Alastair Fothergill, Jonnie Hughes and Keith Scholey
Cast: David Attenborough

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

எட்ஜ் ஆஃப் டுமாரோ - Edge Of Tomorrow (2014)

எட்ஜ் ஆஃப் டுமாரோ - Edge Of Tomorrow (2014) Tamil Review  இது பிரபல நாயகன் டாம் ஃகுரூஸ் (Tom Cruise) மற்றும் எமிலி (Emily Blunt) இணைந்து நடித்த டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வித்தியாசமான படம். ஏலியன்கள் பூமியை கைப்பற்ற போர் தொடுக்கின்றன. மிகவும் புத்திசாலித்தனமான இருப்பதால் மனித இனத்தால் தாக்கு பிடிக்க முடியாமல் பெருத்த அளவில் உயிர் சேதங்கள் ஏற்படுகின்றது. இந்நிலையில் உள்குத்து அரசியல் காரணங்களால் இது வரை போர்களமே கண்டிராத டாம் க்ரூஸ் நேராக போருக்கு அனுப்பப்படுகிறார். ஐந்து நிமிடங்களில் ஏலியனால் கொல்லப்பட்டு இறந்து விடுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக டைம் லூப்பில் மாட்டிக் கொள்கிறார். எழும் போது போர்களத்தில் எழுகிறார் சண்டை போடுகிறார் மறுபடியும் இறந்து போகிறார். ஒவ்வொரு சுழற்சியின் போதும் புதிதாக சண்டை நுணுக்கங்களை கற்று படத்தில் ராணுவ வீரராக வரும் நாயகியுடன் இணைந்து ஏலியன் தலைவன் ஆன ஆல்ஃபா வை வீழ்த்தி மனித இனத்தை காப்பாற்றினார்களா என்பதே முடிவு. மிகவும் புதிதான கதையம்சம் மற்றும் இயக்கம். போர் காட்சிகள் சிறப்பான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக ‌பார்க்க வேண்டி

My Microsoft Azure - AZ 900 Certification Journey.

இது மாதிரி நெறயா ஆர்ட்டிக்கிள் பார்த்து இருப்பீர்கள். ஆனா என்னோட பயணம் இந்த சர்ட்டிபிகேஷன் முடிச்சே ஆகணும் மற்றும் நேரம் குறைவு என்பதால் பரபரப்பாக  படித்தது. அதுனால ரொம்பவே ப்ராக்டிகலா இருக்கும். எல்லாருக்கும் ஒர்க் ஆகுமானு தெரியாதுங்க. அதனால இத அப்படியே எல்லாம் ஃபாலோ பண்ணாதீங்க.  இது நான் உபயோகித்த வழிமுறைகள் மட்டுமே. Just want to share my experience இந்த செப்டம்பர்க்குள்ள ஏதாவது ஒரு சர்ட்டிபிகேஷன் முடிக்க வேண்டும் என கம்பெனியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.  நான் படிச்சுட்டு இருந்தது GCP Exam க்கு.‌ஆனா திடிரென Azure & GCP எதுனாலும் படிக்கலாம் என்று சொல்லிட்டு நிறைய கட கடவென AZ 900 எழுதி பாஸ் ஆகிவிட்டார்கள்.  நான் எழுதுனா GCP தான் எழுதுவேன் என்று உக்காந்து இருந்தேன். ஆனா எனக்கு தெரிந்த கம்பெனி வட்டத்தில் யாரும் GCP எழுதவில்லை . அதனால் நம்பிக்கை கொஞ்சம் கம்மியாகவே இருந்தது.  இதற்கு நடுவில் ஒரு ஜீனியர் பையன் நான் AZ 900  முடிச்சுட்டேன் என்று கால் பண்ணான். எப்படிடா என்றதும் 2 லிங்கை வாட்ஸ்ஆப்பில் அனுப்பினான். இத மட்டும் படிச்சு தான் நான் பாஸ் ஆனேன் என்றான்.  இதற்கு நடுவில் எங்க