Blue Jay Tamil Review
இது 2016 - ல் வந்த ரொமாண்டிக் திரைப்படம்.
படத்தின் நாயகன் Jim (Mark Duplass) தன் அம்மா இறந்துபோன காரணத்தினால் சொந்த ஊருக்கு வருகிறார்.
நாயகி Amanda (Sarah Paulson) தன் சகோதரி கற்பமாக இருப்பதால் அவருக்கு உதவி செய்வதற்கு அதே ஊருக்கு வருகிறார்.
இருவரும் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சந்திக்கிறார்கள். முதலில் அடையாளம் சரியாக தெரியாமல் பின்பு இருவருக்கும் ஞாபகம் வருகிறது.
அவர்கள் பேசிக் கொள்வதில் இருந்து இருவரும் பள்ளி காலத்து காதலர்கள் என்றும் சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்த பின்னர் 20 வருடங்களுக்கு பின் இப்போது தான் சந்திக்கிறார்கள் என்றும் தெரியவருகிறது.
இருவரும் தங்களது கல்லூரி காலத்தில் வழக்கமாக செல்லும் Blue Jay காபி ஷாப்பிற்கு ஒரு முறை போகலாம் என முடிவெடுத்து செல்கின்றனர்.
பழைய நினைவுகளை அசை போடுகின்றனர்... அன்று ஒரு நாளை ஒன்றாக கழிக்கலாம் என முடிவு செய்கின்றனர்.
Jim - ன் வீட்டிற்கு செல்கின்றனர். அவருடைய அம்மா அனைத்து பழைய பொருட்களை சேமிக்கும் பழக்கம் உள்ளவராக இருப்பதால் Jim - ன் பழைய பொருட்கள் அனைத்தையும் பத்திரமாக வைத்து உள்ளார்.
எழுதிக்கொண்ட கடிதங்கள், உடைகள், கேசட்டுகள் என பொருட்கள் இருக்க மெதுவாக பழைய நினைவுகளை அசை போடுகின்றனர். ஏன் பிரித்தார்கள் என்பதற்கான காரணங்கள் கடைசியில் சொல்லப்படுகிறது.
96 படம் நினைவில் வந்து போகிறதா ?
இரண்டு படத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் .
கான்செப்ட் இரண்டு படத்திற்கும் ஒன்று தான். ஆனால் Blue Jay படம் 80 நிமிடங்கள் மட்டுமே ஓடுகிறது. அதனால் எக்ஸ்ட்ரா கதாபாத்திரங்கள் எதுவும் கிடையாது . நண்பர்கள் , பாடல்கள் போன்ற அம்சங்கள் இதில் இல்லை.
நாயகன் மற்றும் நாயகி இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள்.
Blue Jay படம் வித்தியாசமாக கருப்பு வெள்ளைப் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல Nostalgic feeling கொடுக்கிறது.
ஆங்கில படத்தில் பிரிவிற்கான காரணத்தை தமிழ் படத்தில் வைத்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் நமக்கு ஏற்ற மாதிரி மாற்றி உள்ளனர்.
96 இந்த படத்தின் காப்பியா இல்லை தற்செயலாக அமைந்ததா என்று தெரியவில்லை...
96 படம் பிடிக்கும் என்பவர்கள் கண்டிப்பாக பாருங்கள்...
IMDb Rating : 7.3 / 10
Available in Netflix .
Director: Alexandre Lehmann
Writer: Mark Duplass
Stars: Mark Duplass, Sarah Paulson, Clu Gulager
கருத்துகள்
கருத்துரையிடுக