இது அமேசான் தயாரித்து வெளிவந்துள்ள திரைப்படம்.அமேசான் ப்ரைமில் வெளியாகி உள்ளது.
இது ஹாரர் , திரில்லர் மற்றும் கொஞ்சம் அமானுஷ்யம் கலந்த திரைப்படம்.
படத்தின் நாயகன் நோலன் (Mamoudou Athie) பயங்கர கார் விபத்தில் சிக்கி மனைவியை இழந்தது மட்டும் அல்லாமல் பழைய நினைவுகள் அனைத்தும் மறந்து விடுகிறது. தன்னுடைய நண்பன் கேரி (Tosin) உதவியுடன் தன் மகளான ஏவா (Amanda Christine) உடன் வசித்து வருகிறார்.
தன் இழந்த ஞாபகங்களை மீட்கவும் மற்றும் ஞாபக மறதியை போக்கவும் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டு இருக்கிறார்.
மருத்துவங்கள் எதுவும் பயன் அளிக்காமல் போக இறுதியில் மனோதத்துவ டாக்டரான லில்லியனை (Phylicia Rashad ) சந்திக்கிறார்.
அவர் தன்னுடைய புதிய கண்டுபிடிப்பான Black Box பற்றி கூறுகிறார். அந்த இயந்திரம் ஒருவருடைய ஆழ்மனதில் நுழைந்து அவரின் பழைய நினைவுகளுக்கு செல்லும் ஆற்றல் படைத்தது என்கிறார். மேலும் நினைவுகளில் முன் பின் பயணம் செய்ய மற்றும் வெளியே வர வாட்ச் போன்ற கருவியையும் கொடுக்கிறார். இதன் மூலம் இழந்த நினைவுகளை மீட்கலாம் என்கிறார்.
தன்னுடைய ஆழ் மனதின் ஆழத்திற்கு செல்கிறார் நோலன். அங்கு அவர் மனைவி மற்றும் மகள் போன்றவர்களை பார்க்கிறார் ஆனால் முகம் தெளிவாக இல்லை. இந்நிலையில் திடீரென ஒரு பேய் மற்றும் ஜாம்பி போன்ற ஒரு உருவம் இவனை தாக்குகிறது அதனால் நிஜ உலகிற்கு வந்து விடுகிறான்.
மிகுந்த குழப்பம் அடைகிறான்... ஆனால் டாக்டர் லில்லியன் அறிவுரைப்படி மீண்டும் நினைவுகளுக்கு செல்கிறான்.
இம்முறை உருவம் தெரிந்ததா? அந்த பேய் போன்ற உருவம் யார் ? இவனுக்கு பழைய நினைவுகள் திரும்பியதா? என்பதை படத்தில் பாருங்கள்...
படத்தின் கதை புதியது... நல்ல சஸ்பென்ஸ் உடன் நகர்கிறது... அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.. அதிலும் குறிப்பாக ஏவா பாத்திரத்தில் வரும் சிறுமி சூப்பராக நடித்திருக்கிறார்.
அந்த ப்ளாக் பாக்ஸ் கான்செப்ட் நம்ம தமிழ் படமான மாயவன் படத்தில் வருவது போன்றது.
கொஞ்சம் வித்தியாசமான படம் .. ஒரு முறை பார்க்கலாம்..
IMDb Rating : 6.0/10
Amazon Prime -ல் தமிழ் சப்டைட்டிலுடன் வெளியாகி உள்ளது.
Director: Emmanuel Osei-Kuffour Jr.
Story : Stephen Herman
Cast: Mamoudou Athie, Phylicia Rashad, Amanda Christine, Tosin Morohunfola, Charmaine Bingwa, and Troy James
கருத்துகள்
கருத்துரையிடுக