நெட்ப்ளிக்ஸ் வெளியிட்டுள்ள திகில் திரைப்படம். ஷபனா ஆஸ்மி இருந்ததால் வித்தியாசமான ஹாரர் படமாக இருக்கும் என்று நினைத்து பார்த்தேன். படத்தின் ஆரம்பத்தில் இருளில் ஒரு கிராமம் காட்டப்படுகிறது. ஒருவன் சுத்தியலோடு சென்று மூடி சீல் வைக்கப்பட்ட கிணறை உடைக்கிறான். அதிலிருந்து ஒரு கை வெளியே வந்து அவனை பிடிக்கிறது. அப்பவே நமக்கு தெரிஞ்சு போச்சு பேய் கிளம்பிருச்சு என்று. அடுத்த காட்சியிலேயே ஒரு சைக்கிள்காரன்ட லிஃப்ட் கேட்டு ஊருக்குள்ள வந்து ஒரு வீட்டு கதவ தட்டுது. ஒரு வயசான அம்மா(Leela Samson) அத பாத்துட்டு மயக்கம் போட்டு கீழ விழுது. அந்த பேய் அந்த வீட்டுல உள்ள மாடி ரூம்க்கு பொறுமையாக போகுது. இன்னொரு ஊர்ல 10 வயது பெண் சிவாங்கி கிணத்துக்குள்ள எட்டி பார்த்துட்டே குச்சி ஐஸ் சாப்டுட்டு இருக்குரப்ப தண்ணீல ஒரு சின்ன பெண் உருவம் தெரியுது. சொந்த கிராமத்தில் இருக்கும் பாட்டி மூச்சு பேச்சு இல்லாமல் இருக்காங்க என்று சொல்லி அப்பா, அம்மா மற்றும் சிவாங்கி மூன்று பேரும் கிராமத்துக்கு கிளம்புகிறார்கள். வீட்டில் சிவாங்கிக்கு ஒரு பெண் உருவம் தெரிந்து கொண்டே இருக்கிறது. பாட்டிக்கு திடீரென உடம்பு சரியாகி விட
ஹாலிவுட் மற்றும் கொரியன் திரைப்பட விமர்சனங்கள் - Hollywood and Korean Movie Reviews in Tamil