இது Netflix -ல் வெளிவந்துள்ள ஸ்பானிஷ் மொழி சைக்கோ திரில்லர் திரைப்படம்.
படம் சுமாராகத்தான் உள்ளது. திரில்லர் படங்களுக்கே உரிய பரபரப்பு மற்றும் அடுத்து என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு இல்லை.
Angel - ஆம்புலன்ஸ் சர்வீஸ்ல் வேலை பார்த்து வருகிறான். தன் காதலி Vane உடன் வசித்து வருகிறான். .
மனைவி வேறு ஒருவனுடன் தொடர்பில் இருக்கிறாள் என சந்தேகப்பட்டு வேவு பார்க்கிறான். மனைவியுடன் பழகும் யாரை கண்டாலும் பொறாமைப்படுகிறான்(பக்கத்து வீட்டு நாய் உட்பட) .
இந்நிலையில் இவன் பயணிக்கும் ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்குகிறது. இதனால் ஏற்பட்ட காயத்தால் கால்கள் செயலிலந்து சக்கர நாற்காலியில் விழுகிறான்.
ஒரு தருணத்தில் Vane இவன் வேவு பார்ப்பதை கண்டுபிடித்து கோபத்தில் சொல்லாமல் கொல்லாமல் இடத்தை காலி செய்கிறார்.
ஒரு நாள் Vane யை அவளின் புதிய காதலனுடன் பார்க்கிறான்.
ஏற்கனவே கடுப்பில் இருக்கும் Angel தன் காதலி மற்றும் அவளுடைய புதிய காதலனை பழிவாங்க கிளம்புகிறான்.
சக்கர நாற்காலியில் இருந்து கொண்டு அவன் எவ்வாறு பழிவாங்கினான் என்பது மீதி படம். .
ஆரம்பத்தில் இருந்தே Angel கதாபாத்திரம் கெட்டவனாகவே காட்டப்படுவதால் பெரிதான திருப்பங்கள் எதுவும் இல்லை.
பல இடங்களில் லாஜிக் மீறல்கள்... உதாரணமாக பக்கத்து வீட்டு பெரியவர் பெண் அலறும் சத்தம் கேட்டது என இவனிடமே வந்து கேட்பது.
இவன் தெரபி சிகிச்சை செய்யும் இடத்தில் ஒரு பெண் வருகிறார் அவருடைய கதாபாத்திரத்துக்கு சிரத்தையுடன் நேரம் ஒதுக்கி உள்ளனர் ஆனால் எதற்கு என்று தெரியவில்லை...
ரொம்பவே சுமாரான படம்.
IMDb Rating : 6.0
Available in Netflix.
Director: Carles Torras
Writers: David Desola, Hèctor Hernández Vicens, Carles Torras
Stars: Mario Casas, Déborah François, Guillermo Pfening, Celso Bugallo, Raúl Jiménez, Maria Rodríguez Soto
கருத்துகள்
கருத்துரையிடுக