முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

The Last Ship - தி லாஸ்ட் ஷிப் (Season 1 & 2)

The Last Ship Tamil Review 

கதைச் சுருக்கம்: 

ஒரு மர்மமான வைரஸ் உலகின் 80% மக்களை கொன்று விடுகிறது. நாதன் ஜேம்ஸ் என்னும் போர் கப்பல் கேப்டன் டாம் தலைமையில் 2  விஞ்ஞானிகள் துணையுடன் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க கிளம்புகிறது.  அவர்கள் தடுப்பு மருந்து கண்டுபிடித்தார்களா ?  

மொத்தம் 5 சீசன்கள் ஒவ்வொரு சீசனுக்கும் சராசரியாக 10 எபிசோட்கள் உள்ளது.‌

Uss nathan James, The last ship Amazon prime series season 1 and 2  review in tamil , தி லாஸ்ட் ஷிப் அமேசான் சீரிஸ் விமர்சனம்,Eric Dane, Rhona Mitra


Season 1 & 2 

நாதன் ஜேம்ஸ் கப்பல் கேப்டன் தலைமையில் விஞ்ஞானிகள், ராணுவ வீரர்கள், கப்பல் பணியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் குழுவுடன் ஆர்க்டிக் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்கின்றனர். 

ஆர்க்டிக் பிரதேசத்தில் இருந்து தான் முதன் முதலில் வைரஸ் வந்ததால் அங்கு சென்று Samples சேகரித்து தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முயல்கிறார்கள். 

இந்த பயணத்தில் இவர்களுக்கு எதிர்கொள்ளும் சவால்கள் நிறைந்த சாகச பயணத்தை பற்றியது தான் முதல் இரண்டு சீசன்கள். 

உதாரணமாக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி கேப்டன் மற்றும் விஞ்ஞானிகளுக்கு மட்டுமே தெரியும் என்பதால் மற்றவர்களுக்கு சந்தேகம் வருகிறது மற்றும் இதனால் ஏற்படும் பிரச்சினைகள், கப்பலில் உணவு பற்றாக்குறை காரணமாக உணவு சேகரிக்க செல்லும் இடத்தில் நேரும் பிரச்சினைகள், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஏற்படும் போட்டி காரணமாக இன்னொரு ரஷ்யா கப்பலுடன் மோதல் என பரபரப்பாகவே நகர்கிறது தொடர். 

ஒரு கட்டத்தில்  அமெரிக்காவில் ஆட்சி மாறுகிறது , புதிய அதிபர் மற்றும் அவரது ஆட்கள் பொறுப்பை ஏற்கின்றனர். இந்த புது ஆட்சி வைரஸில் இருந்து தப்பிய திறமை வாய்ந்த நபர்களை சேர்த்து கொண்டு அப்பாவி மக்களை கொன்று குவிக்க தயாராகிறது. 

இன்னொரு புறம் இந்த வைரஸ் தாக்குதலை  இயற்கையாக தாங்கும் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் ஒரு குழுவாக சேர்கின்றனர்.  இவர்கள் நோக்கம் வைரஸை முடிந்த அளவு பரப்பி விட்டு எல்லாரையும் கொன்று விட்டு புதிய உலகத்தை உருவாக்குவது.

இந்த அனைத்து பிரச்சனைகளையும் கேப்டன் மற்றும் அவரது குழுவினர் நாதன் ஜேம்ஸ் கப்பல் உதவியுடன் எவ்வாறு சமாளித்து அமெரிக்கா மற்றும் உலகத்தை எவ்வாறு காப்பாற்றினார்கள் என்பதை முதல் இரண்டு சீசனில் பாருங்கள். 

கேப்டன் டாம் கதாபாத்திரத்தில் Eric Dane கலக்கி இருக்கிறார். நம்ம கேப்டன் விஜயகாந்த் ஏற்கும் கதாபாத்திரம் போன்றது . 

தன்னுடைய புத்திக்கூர்மையால் பலம் வாய்ந்த எதிரி கப்பல்களை வீழ்த்துகிறார்.  கப்பலே விட்டு வெளியே சிறு படகில் செல்ல தேவைப்படும் நேரத்தில் தானே தலைமை ஏற்று வழி நடத்தி செல்கிறார். 

அவரது குழுவினராக வருபவர்களும் நன்றாக நடித்துள்ளார்கள். ஆக்ஷ்ன் மற்றும் கப்பல் சேசிங் , ஏவுகணை தாக்குதல்களை பரபரப்பாக செல்கிறது. 

மொத்தத்தில் ஒரு நல்ல டைம் பாஸ் சீரிஸ். கண்டிப்பாக பார்க்கலாம். 

Amazon Prime - ல் உள்ளது. 

IMDb Rating: 7.5/10


Directors: Jack Bender, Paul Holahan, Michael Katleman, Peter Weller, Sergio Mimica-Gezzan

Writers: Steven Kane, Hank Steinberg

Starring: Eric Dane, Rhona Mitra, Adam Baldwin, Charles Parnell, Travis Van Winkle
கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

X - 2022

Horror, Porn  கலந்து இது போதாது என Slasher வகையும் சேர்த்து வந்துள்ள படம் இது.   IMDb 7.3 Tamil Dub ❌ OTT ❌ , 18+  Porn Film எடுக்க ஒரு பண்ணை வீட்டுக்கு போகும் குழுவிற்கு நேரம் கொடூரங்கள் தான் படம்.  Slasher படத்துக்கே எழுதி வைச்ச டெம்ப்ளேட்.  படம் நடப்பது 1979 ஆம் வருடத்தில்.. 3 ஜோடிகள் (Producer, Director, Actors)  அப்ப பிரபலமாகி வரும் வீடியோ கேசட் மார்க்கெட்டை மையமாக வைத்து மேட்டர் படம் எடுதது கேசட்டா‌ ரிலீஸ் பண்ணா நல்ல காசு பாக்கலாம் என ப்ளான் பண்ணுகிறார்கள்.  படத்தின் டைரக்டர Farmers Daughter's என ஒரு அருமையான மேட்டர் பட ஸ்கிரிப்டை ரெடி பண்ணுகிறார் 😜 .இதை ஒரு பண்ணை வீட்டில் வைத்து எடுத்தால் ரசிகர்கள் படத்துடன் ஒன்றி. விடுவார்கள் என ஐடியா பண்ணி இந்த குரூப் ஊருக்கு ஒதுக்கு புறமான ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கு சூட்டிங் போகிறார்கள்.  அந்த வீட்டின் ஓனர்ஸ் ஒரு வயதான தம்பதியர். ஓனர் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பதால் பிட்டு படம் எடுக்க வந்தோம் என சொல்லாமல் கமுக்கமாக படத்தே எடுக்கிறார்கள்.  ஆனா ஓனரம்மா இவர்கள் பிட்டு படம் எடுப்பதை பார்த்து விடுகிறது. அன்னிக்கு நைட் ஒவ்வொருத்தவங்களா கொடூர

The Old Man - Season 1 (2022)

The Old Man Tamil Review - Season 1 இது ஒரு Action, Thriller, Drama Series.  1 Season, 7 Episodes (1 Episode Yet to release) Available @hulu இதுல ஹீரோ 70+ ல இருக்குற ஒரு வயசான தாத்தா (Jeff Bridges). திடிரென ஒரு நாள் ஒருத்தன் அவர கொல்ல வர்றான். இவரு யாரு ? எதுக்கு கொல்ல வர்றாங்க ? என்பதை சொல்கிறது தொடர்.  Dan Chase மனைவி இறந்த நிலையில் 2 நாய்களுடன் தனிமையில் வசிக்கிறார். திடீரென ஒருத்தன் இவரை கொல்ல வருகிறான் நடக்கும் சண்டையில் நாய்கள் உதவியுடன் அவனை கொன்று விடுகிறார்.  அதன் பிறகு வீட்டை காலி பண்ணிட்டு கிளம்புகிறார். அங்கிட்டு பார்த்தால் FBI ல ஒரு மிகப்பெரிய கூட்டமே இவர் தேடிட்டு இருக்கு.  யார் இந்த தாத்தா ? கிட்டத்தட்ட 30 வருடங்கள் அமைதியாக வாழ்ந்து வந்த இவரின் வாழ்க்கை திடீரென கலவர பூமியாக மாறுவதற்கு காரணம் என்ன என்பதை தற்போது நடக்கும் சம்பவங்கள் மற்றும் ஃப்ளாஷ்பேக் என மாறி மாறி பயணிக்கிறது படம்.  இவருடைய ஃப்ளாஷ் பேக் நடப்பது ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமிப்பு நடந்த சமயத்தில் நடந்த சம்பவங்கள். CIA ஏஜன்ட் ஆன இவர் அங்கு உள்ள ஒரு போராட்டக்குழுவுடன் சேர்ந்து ரஷ்யாவை எதிர்க்கிறான். அங்கு நடந்