முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Enola Holmes - எனோலா ஹோம்ஸ் (2020)

Enola Holmes - எனோலா ஹோம்ஸ் (2020) - Review In Tamil 


பிரபல OTT நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில் இன்று வெளியான திரைப்படம். 

இது 1800-களில் பிரிட்டனில் நடப்பது போன்ற கதை ஆக்ஷ்ன் கலந்த அட்வென்சர் திரைப்படம்.


Enola Holmes review in tamil, எனோலா ஹோம்ஸ் விமர்சனம், netflix Sherlock Holmes, louis patridge, Milli Bobby Brown, Sherlock, enola Holmes cast, Sherloc


 

பிரபல தொடரான Stranger Things-ல் Eleven என்ற கதாபாத்திரத்தில் ஒரு சிறு பெண் வருவார் . ஒருவித வெட்கத்துடன் Physiological பவர் கொண்ட வெகுளியான கதாபாத்திரத்தில் கலக்கி இருப்பார். இப்போது வளர்ந்து நாயகியாக இப்படத்தில் நடித்துள்ளார். 

Elona Holmes (திருப்பி போட்டால் Alone) பிரபல துப்பறியும் நிபுணரான Sherlock Holmes - ன் தங்கை. இவரது இன்னொரு அண்ணண் Mycroft Holmes பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பெரிய ஆள். இரண்டு அண்ணண்களும் சிறுவயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி விடுகின்றனர். துணிச்சலான பெண்ணியம் பேசும் அம்மா Elona - வை தனிமையில் வளர்க்கிறார். படிப்பு, தற்காப்புக் கலைகள் , புதிர்களை விளையாட்டு என அனைத்திலும் திறமையானவராக தனிமையில் வளர்க்கிறார். 

திடீரென ஒருநாள் Elona - வின் அம்மா காணமல் போய் விடுகின்றார். திரும்ப வரும் அண்ணன்கள் கட்டுப்பாடு பிடிக்காமல் தன் அம்மாவை தேடி கிளம்புகிறார். 

இந்த பயணத்தில் இவர் செய்யும் ஆக்ஷ்ன் மற்றும் அட்வென்சர் தான் படம். 

அம்மாவை தேடி லண்டன் செல்லும் வழியில் இரயிலில் பயணம் மேற்கொள்ளும் போது ஒரு இளைஞனை சந்திக்கிறார். அந்த இளைஞனை கொலை செய்ய வரும் ஒருவனிடம் இருந்து அவனை காப்பாற்றுகிறார். 

லண்டன் வந்து சேரும் Elona தன் அம்மா ஒரு புரட்சி அமைப்பை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடிக்கிறார். அதே சமயம் ரயிலில் காப்பாற்றிய இளைஞனை சுற்றி நடக்கும் சதிகளை கண்டுபிடித்து அவனை காப்பாற்ற முடிவு எடுக்கிறார். கூடவே அவளுடைய அம்மாவையும் தேடுகிறார்.

இதே சமயம் இரண்டு அண்ணண்களும் இவரை கண்டுபிடிக்க முயல்கிறார்கள். ஷெர்லாக் ஹோம்ஸ்யை முந்தி சென்று Elona எவ்வாறு இந்த சிக்கலான முடிச்சுகளை விடுவிக்கிறார் என்பதை படத்தில் பாருங்கள். 

Elona கதாபாத்திரத்தில் Millie Bobby Brown சிறப்பான அறிமுகம். சிறு பெண்ணாக Stranger Things - ல் பார்த்தது இதில் நாயகி. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை அவர்தான் . படம் முழுவதும் அவரை சுற்றியே தான் நகர்கிறது. சென்டிமென்ட், ஆக்ஷ்ன், ரொமான்ஸ் என கலக்கி இருக்கிறார். நாயகியாக மிகவும் சிறப்பான அறிமுகம் ...ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம். 

Sherlock Holmes கதாபாத்திரத்தில் Henry Cavill நேர்த்தியான அளவான நடிப்பு. 

படம் சில இடங்களில் மெதுவாக நகர்கிறது. படத்தின் நீளமும் அதிகம். 

பிண்ணனி இசை மற்றும் பழைய ‌கால பிரிட்டிஷ் காலத்தை படம் பிடித்த விதம் அருமை. 

குடும்பத்துடன் பார்ப்பதற்கு ஏற்ற திரைப்படம். 

Cast: Millie Bobby Brown, Henry Cavil, Sam Claflin, Helena Bonham, Louis Partridge.

Director: Harry Bradbeer

Streaming: Netflix

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

X - 2022

Horror, Porn  கலந்து இது போதாது என Slasher வகையும் சேர்த்து வந்துள்ள படம் இது.   IMDb 7.3 Tamil Dub ❌ OTT ❌ , 18+  Porn Film எடுக்க ஒரு பண்ணை வீட்டுக்கு போகும் குழுவிற்கு நேரம் கொடூரங்கள் தான் படம்.  Slasher படத்துக்கே எழுதி வைச்ச டெம்ப்ளேட்.  படம் நடப்பது 1979 ஆம் வருடத்தில்.. 3 ஜோடிகள் (Producer, Director, Actors)  அப்ப பிரபலமாகி வரும் வீடியோ கேசட் மார்க்கெட்டை மையமாக வைத்து மேட்டர் படம் எடுதது கேசட்டா‌ ரிலீஸ் பண்ணா நல்ல காசு பாக்கலாம் என ப்ளான் பண்ணுகிறார்கள்.  படத்தின் டைரக்டர Farmers Daughter's என ஒரு அருமையான மேட்டர் பட ஸ்கிரிப்டை ரெடி பண்ணுகிறார் 😜 .இதை ஒரு பண்ணை வீட்டில் வைத்து எடுத்தால் ரசிகர்கள் படத்துடன் ஒன்றி. விடுவார்கள் என ஐடியா பண்ணி இந்த குரூப் ஊருக்கு ஒதுக்கு புறமான ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கு சூட்டிங் போகிறார்கள்.  அந்த வீட்டின் ஓனர்ஸ் ஒரு வயதான தம்பதியர். ஓனர் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பதால் பிட்டு படம் எடுக்க வந்தோம் என சொல்லாமல் கமுக்கமாக படத்தே எடுக்கிறார்கள்.  ஆனா ஓனரம்மா இவர்கள் பிட்டு படம் எடுப்பதை பார்த்து விடுகிறது. அன்னிக்கு நைட் ஒவ்வொருத்தவங்களா கொடூர

The Old Man - Season 1 (2022)

The Old Man Tamil Review - Season 1 இது ஒரு Action, Thriller, Drama Series.  1 Season, 7 Episodes (1 Episode Yet to release) Available @hulu இதுல ஹீரோ 70+ ல இருக்குற ஒரு வயசான தாத்தா (Jeff Bridges). திடிரென ஒரு நாள் ஒருத்தன் அவர கொல்ல வர்றான். இவரு யாரு ? எதுக்கு கொல்ல வர்றாங்க ? என்பதை சொல்கிறது தொடர்.  Dan Chase மனைவி இறந்த நிலையில் 2 நாய்களுடன் தனிமையில் வசிக்கிறார். திடீரென ஒருத்தன் இவரை கொல்ல வருகிறான் நடக்கும் சண்டையில் நாய்கள் உதவியுடன் அவனை கொன்று விடுகிறார்.  அதன் பிறகு வீட்டை காலி பண்ணிட்டு கிளம்புகிறார். அங்கிட்டு பார்த்தால் FBI ல ஒரு மிகப்பெரிய கூட்டமே இவர் தேடிட்டு இருக்கு.  யார் இந்த தாத்தா ? கிட்டத்தட்ட 30 வருடங்கள் அமைதியாக வாழ்ந்து வந்த இவரின் வாழ்க்கை திடீரென கலவர பூமியாக மாறுவதற்கு காரணம் என்ன என்பதை தற்போது நடக்கும் சம்பவங்கள் மற்றும் ஃப்ளாஷ்பேக் என மாறி மாறி பயணிக்கிறது படம்.  இவருடைய ஃப்ளாஷ் பேக் நடப்பது ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமிப்பு நடந்த சமயத்தில் நடந்த சம்பவங்கள். CIA ஏஜன்ட் ஆன இவர் அங்கு உள்ள ஒரு போராட்டக்குழுவுடன் சேர்ந்து ரஷ்யாவை எதிர்க்கிறான். அங்கு நடந்