Creep Tamil Review
இது ஒரு 'Found Footage' வகையான படம்.
திரைப்படங்கள் இந்த வகையான Found Footage களை சில இடங்களில் பயன்படுத்துவது உண்டு. உதாரணமாக Sinister திரைப்படத்தில் இந்த மாதிரியான காட்சிகள் செம திகிலாக இருக்கும்.
REC , Cloverfield போன்ற திரைப்படங்கள் இந்த வகையான வீடியோக்களை அடிப்படையில் வந்த மேலும் சில திரைப்படங்கள்.
தன் வாழ்க்கையின் கடைசி நாட்களில் இருக்கும் ஒருவர்(Josef) தன் மனைவி மற்றும் பிறக்கப் போகும் குழந்தைக்கு கடைசியாக வீடியோ மெசேஜ் அனுப்ப ஆசைப்படுகிறார். இதற்காக வீடியோ எடுக்க ஆள் வேண்டும் என கொடுத்த விளம்பரத்தை பார்த்து ஊருக்கு வெளியே தனிமையில் இருக்கும் அவருடைய வீட்டிற்கு வருகிறார் ஃபோட்டோகிராபர்(Aaron) .
Josef - தன்னுடைய வீடியோ மெசேஜ்யை தன்னுடைய குழந்தையை எவ்வாறு குளிப்பாட்டுவேன் என்று நடித்து காட்டி ஆரம்பிக்கிறார்.
இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் மாறி மாறி காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முதலில் சாதரணமாக ஆரம்பிக்கும் நாள் நேரம் ஆக ஆக Josef வின் செயல்பாடுகள் வித்தியாசமாக மாறுகிறது.
படம் எதை நோக்கிச் செல்கிறது என்பதை கணிக்க முடியாத திரைக்கதை சிறப்பு. கடைசியில் ஒரு எதிர்பாராத ட்விஸ்ட் 👌 👌.
இரண்டு பேரை மட்டும் வைத்துக்கொண்டு படத்தை எடுத்துள்ளார் இயக்குனர்.
படம் கொஞ்சம் மெதுவாக நகர்கிறது. வித்தியாசமான படம் பார்க்க வேண்டும் என்றால் பார்க்கலாம்.
IMDb Rating : 6.3/10
Available in Netflix.
Starring: Franka Potente, Sean Harris, Vas Blackwood
Directed By: Christopher Smith
கருத்துகள்
கருத்துரையிடுக