முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Cold Skin - கோல்ட் ஸ்கின் (2017)

Cold Skin Movie Tamil Review - கோல்ட் ஸ்கின் (2017) 

இது 1914 - ஆம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவில் நடக்கும் சம்பவங்களை பற்றிய திகில் திரைப்படம். 

வித்தியாசமான கதை கொண்ட திகில் திரைப்படம். ஒரு முறை பார்க்கலாம் 👍

n review in tamil, கோல்ட் ஸ்கின் திரைப்பட விமர்சனம், cold skin movie, horror movie, Atlantic, 1914, based on the novel cold skin, creatures movie


Friend (அது தான் அவர் பெயர்) ஒரு கப்பலில் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தீவுக்கு வருகிறார். தட்பவெப்பநிலை, காற்றின் வேகம் , திசை ஆகியவற்றை ஆராய்ந்து பதிவு செய்வது தான் அவர் வேலை.  

அந்த தீவில் ஒரு மர வீடு மற்றும் கலங்கரை விளக்கம் மட்டும் உள்ளது. கலங்கரை விளக்கின் பாதுகாவலனாக முரட்டு குணம் கொண்ட Gruner என்பவன் இருக்கிறான். 

முதல் நாள் இரவில் கடலில் இருந்து வரும் உயிரினங்கள் கொடூரமாக தாக்குதல் நடத்துகின்றன. இந்த உயிரினங்கள் மனித உருவில் உள்ளன, கால்கள் மீன்களின் துடுப்பு போலவும், கூர்மையான பற்களுடன் நீல நிறத்தில் உள்ளன. தாக்குதல்களை சமாளித்து உயிர் பிழைக்கிறான் ஆனால் வீடு எரிந்து சாம்பல் ஆகிறது. 

வேறு வழியின்றி Gruner - உடன் கலங்கரை விளக்கத்தில் ஐக்கியம் ஆகிறான். இருவரும் இணைந்து இந்த ஜந்துக்களுடன் இரவில் சண்டை இடுகின்றனர். ஆச்சரியப்படும் விதமாக Gruner இந்த ஜந்துக்களில் ஒன்றை தனது வளர்ப்பு பிராணி/அடிமை போல வைத்து உள்ளான். 

ஒரு கட்டத்தில் இந்த மிருகங்களிடம் மனித தன்மை உள்ளது என்பதை உணர்கிறான் Friend. 

ஏன் இந்த மிருகங்கள் தாக்குகின்றன? இருவரும் உயிர் பிழைத்தார்களா ? இதற்கு முன்னால் வேலையில் இருந்தவனுக்கு என்னாயிற்று என்பதை படத்தில் பாருங்கள். 

ஒளிப்பதிவு சூப்பராக உள்ளது. இரவு நேரத்தில் கலங்கரை விளக்கு ஒளியில் மிருகங்கள் வரும் காட்சிகள் சிறப்பாக உள்ளது. 

இரவு நேரத்தில் மிருகங்களுடனான சண்டை காட்சிகள் சிறப்பாக உள்ளது.  

பிண்ணனி இசை அருமை 👌

மொத்தம் 3 கதாபாத்திரங்கள் தான் படத்தில். Friend கதாபாத்திரத்தில் David Oakes , Gruner கதாபாத்திரத்தில் Ray Stevenson நன்றாக நடித்துள்ளார்கள்.  

Aneris எனும் விசித்திரமான ஜந்து கதாபாத்திரத்தில் Aura Garrido சிறப்பாக நடித்திருக்கிறார். ஹெவியான மிருக மேக்கப் போட்டுக்கொண்டு கொடுக்கும் expressions நன்றாக உள்ளது. 

மொத்தத்தில் பிரெஞ்சு இயக்குநர் Xavier Gens நல்ல திரைப்படத்தை கொடுத்து இருக்கிறார். 

ஹாரர் திரைப்பட பிரியர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.  

IMDb Rating : 6.0

Available in Amazon Prime  

 Cast. Ray Stevenson as Gruner. David Oakes as Friend. Aura Garrido as Aneris.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

எட்ஜ் ஆஃப் டுமாரோ - Edge Of Tomorrow (2014)

எட்ஜ் ஆஃப் டுமாரோ - Edge Of Tomorrow (2014) Tamil Review  இது பிரபல நாயகன் டாம் ஃகுரூஸ் (Tom Cruise) மற்றும் எமிலி (Emily Blunt) இணைந்து நடித்த டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வித்தியாசமான படம். ஏலியன்கள் பூமியை கைப்பற்ற போர் தொடுக்கின்றன. மிகவும் புத்திசாலித்தனமான இருப்பதால் மனித இனத்தால் தாக்கு பிடிக்க முடியாமல் பெருத்த அளவில் உயிர் சேதங்கள் ஏற்படுகின்றது. இந்நிலையில் உள்குத்து அரசியல் காரணங்களால் இது வரை போர்களமே கண்டிராத டாம் க்ரூஸ் நேராக போருக்கு அனுப்பப்படுகிறார். ஐந்து நிமிடங்களில் ஏலியனால் கொல்லப்பட்டு இறந்து விடுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக டைம் லூப்பில் மாட்டிக் கொள்கிறார். எழும் போது போர்களத்தில் எழுகிறார் சண்டை போடுகிறார் மறுபடியும் இறந்து போகிறார். ஒவ்வொரு சுழற்சியின் போதும் புதிதாக சண்டை நுணுக்கங்களை கற்று படத்தில் ராணுவ வீரராக வரும் நாயகியுடன் இணைந்து ஏலியன் தலைவன் ஆன ஆல்ஃபா வை வீழ்த்தி மனித இனத்தை காப்பாற்றினார்களா என்பதே முடிவு. மிகவும் புதிதான கதையம்சம் மற்றும் இயக்கம். போர் காட்சிகள் சிறப்பான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக ‌பார்க்க வேண்டி

My Microsoft Azure - AZ 900 Certification Journey.

இது மாதிரி நெறயா ஆர்ட்டிக்கிள் பார்த்து இருப்பீர்கள். ஆனா என்னோட பயணம் இந்த சர்ட்டிபிகேஷன் முடிச்சே ஆகணும் மற்றும் நேரம் குறைவு என்பதால் பரபரப்பாக  படித்தது. அதுனால ரொம்பவே ப்ராக்டிகலா இருக்கும். எல்லாருக்கும் ஒர்க் ஆகுமானு தெரியாதுங்க. அதனால இத அப்படியே எல்லாம் ஃபாலோ பண்ணாதீங்க.  இது நான் உபயோகித்த வழிமுறைகள் மட்டுமே. Just want to share my experience இந்த செப்டம்பர்க்குள்ள ஏதாவது ஒரு சர்ட்டிபிகேஷன் முடிக்க வேண்டும் என கம்பெனியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.  நான் படிச்சுட்டு இருந்தது GCP Exam க்கு.‌ஆனா திடிரென Azure & GCP எதுனாலும் படிக்கலாம் என்று சொல்லிட்டு நிறைய கட கடவென AZ 900 எழுதி பாஸ் ஆகிவிட்டார்கள்.  நான் எழுதுனா GCP தான் எழுதுவேன் என்று உக்காந்து இருந்தேன். ஆனா எனக்கு தெரிந்த கம்பெனி வட்டத்தில் யாரும் GCP எழுதவில்லை . அதனால் நம்பிக்கை கொஞ்சம் கம்மியாகவே இருந்தது.  இதற்கு நடுவில் ஒரு ஜீனியர் பையன் நான் AZ 900  முடிச்சுட்டேன் என்று கால் பண்ணான். எப்படிடா என்றதும் 2 லிங்கை வாட்ஸ்ஆப்பில் அனுப்பினான். இத மட்டும் படிச்சு தான் நான் பாஸ் ஆனேன் என்றான்.  இதற்கு நடுவில் எங்க