இது கொரியாவில் இருந்து வந்த ஜாம்பி திரைப்படம். ஆனால் மொத்தமாக ஜாம்பியை மற்றும் நம்பாமல் கொஞ்சம் எமோஷனல் விஷயங்களையும் கலந்து கொடுத்து உள்ளனர்.
இது சர்வைவல் பற்றிய திரைப்படம். சுற்றி இருப்பவர்கள் அனைவரும் ஜாம்பியாக மாறி நாம் மட்டும் தனித்து விடப்பட்டால் மனநிலை எவ்வாறு இருக்கும் மற்றும் தனிமை எவ்வளவு கொடுமையானது என்பதையும் சொல்கிறது.
உயிருடன் இருப்பதற்கு உடல் வலிமை மட்டும் போதாது மன உறுதி அதை விட முக்கியம் என்பதை தெளிவாக காட்டுகிறது. ஆனால் ஜாம்பிக்கள் தான் படத்தை நகர்த்தி செல்கிறது.
ஆவரேஜான திரைப்படம் ஒரு முறை பார்க்கலாம். ஜாம்பி திரைப்பட விரும்பிகள் கண்டிப்பாக பாருங்கள்.
படத்தின் நாயகன் Oh Joon Woo தனது வீட்டில் காலையில் தூங்கி எழுகிறான். அம்மா மற்றும் தங்கை வெளியே சென்று விட்ட நிலையில் வெளியே பயங்கரமான அலறல் சத்தங்கள் கேட்கிறது. வெளியே சென்று பார்த்தால் மக்கள் கூச்சல் இடுகின்றனர், மற்றவர்களை தாக்குகின்றனர், கடித்து கொல்கிறார்கள்.
ஒரு வகையான வைரஸ் காரணமாக மக்கள் ஜாம்பியாக மாறி ஒருவரை மற்றொருவர் தின்னும் கொடுரம் நடக்கிறது.
Oh Joon Ho தனிமையில் மாட்டிக் கொள்கிறான்.
ஒரு கட்டத்தில் தனிமையின் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முயல்கிறான். இந்நிலையில் எதிராக உள்ள அபார்ட்மெண்ட் மாடியில் ஒரு பெண்(Yoo-bin) இருப்பதை காண்கிறான்.
அவனுக்கு சிறிது நம்பிக்கை பிறக்கிறது. இருவரும் பேச ஆரம்பிக்கிறார்கள். உணவுப் பொருட்களை பறிமாறிக் கொள்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் Yoo-Bin இருக்கும் அபார்ட்மெண்ட் ஜாம்பிகளால் சூழப்பட்ட நிலையில் தப்பித்து வரும் காட்சிகள் சிறப்பு.
இருவரும் ஒன்று சேர்ந்து தப்பிக்க முடிவு செய்து ஜாம்பிகள் நடமாட்டம் இல்லாத 8 வந்து மாடிக்கு செல்ல திட்டமிடுகின்றனர்.
இருவரும் தப்பித்தார்களா என்பதை படத்தில் பாருங்கள்...
படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் இருவர் மட்டுமே. இருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
Yoo-Bin கதாபாத்திரத்திற்கு இன்னும் கொஞ்சம் character development செய்து இருக்கலாம். ஆனால் அவரது கதாபாத்திரம் சிறப்பான ஒன்று. அவர் வந்த பின்பு தான் Oh Joon Ho விற்கு உயிர் வாழ நம்பிக்கை பிறக்கிறது.
ஒரு முறை பார்க்கலாம் 👍
Directed and written: Il Cho
Cowritten by : Matt Naylor.
Cast: Ah-In Yoo (Oh Joon-woo) and Shin-Hye Park (.Kim Yoo-bin)
IMDb Rating : 6.3/10
Available in Netflix
கருத்துகள்
கருத்துரையிடுக