Se7en (Seven) - செவன் (1995) - Tamil Review இந்த திரைப்படம் Thriller, Crime, Physiological thriller, Serial killer என எந்த வகையான Genre எடுத்துக் கொண்டாலும் டாப் 3 படங்களில் இருக்கும். பிரபல இயக்குனரான David Fincher ( The Girl With Dragon Tattoo ) அவர்களின் மாஸ்டர் பீஸ் திரைப்படம். இத்திரைப்படத்தின் இரசிகர்கள் படம் வெளியாகி 25 ஆண்டுகள் முடிந்ததை கொண்டாடி வருகின்றனர். நானும் இந்த படத்தை பார்த்து 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் இன்னொரு முறை பார்த்தேன். பார்த்து விட்டு இந்த அளவு சிறப்பான திரைப்படம் பற்றி எழுதாமல் விட்டால் எப்படி.... பெரும்பாலான திரைப்பட பிரியர்கள் இந்த திரைப்படத்தை பார்த்து இருப்பீர்கள்... இன்னும் பார்க்கவில்லை என்றால் கண்டிப்பாக பாருங்கள்... படம் கொஞ்சம் சீரியசான கதைக்களம் என்பதால் குடும்பத்துடன் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. படத்தின் ஹீரோக்கள் இரண்டு பெரிய தலைகள்.. ஒரு வாரத்தில் ஓய்வு பெறப்போகும் டிடெக்டிவ் சோமர்செட் கதாபாத்திரத்தில் Morgan Freeman மற்றும் புதிதாக அந்த ஊருக்கு மாறுதல் வாங்கி வந்திருக்கும் இளம் டிடெக்டிவ் மில்ஸ் கதாபாத்திரத்தில் Brad Pitt . ஊரு
ஹாலிவுட் மற்றும் கொரியன் திரைப்பட விமர்சனங்கள் - Hollywood and Korean Movie Reviews in Tamil