சென்டிமென்ட் கலந்த பக்கா Action Entertainment. அப்பாவுக்கும் இரு மகன்களுக்கும் இடையே நடக்கும் ஒரு பாசபோராட்டம் பற்றிய கதை.
தாயை கொடுமைப்படுத்துவது தாங்காமல், சிறு வயதிலேயே தந்தையை பிரிந்து தாயுடன் சென்று விடுகிறான் Tommy (Tom Hardy). அந்த சமயத்தில் அண்ணன் Brenden, தன் காதலி தான் முக்கியம் என்று அவள் பின்னால் சென்று விடுகிறான். எனவே Tommy தன் தந்தையின் மீதும், அண்ணன் மீதும் சிறுவயதில் இருந்தே கடும் கோபத்துடன் இருக்கிறான்.
பல வருடங்கள் கழித்து தன் தாய் இறந்த பின்பு மீண்டும் சொந்த ஊருக்கு வரும் Tommy, குத்துச்சண்டை மீது ஆர்வம் கொண்டு அங்கே இருக்கும் Gym-க்கு செல்கிறான். அங்கே ஒரு பெரிய வீரனுடன் ட்ரைனிங் செய்யும் போது, அனைவரும் வியக்கும் வண்ணம் அவனை ஒரே அடியில் Knock Out செய்கிறான். யார் இவன்? திடீரென எங்கிருந்து வந்தான் என அனைவரும் வியந்து போகிறார்கள். அவன் Knock Out செய்யும் Video மக்கள் மத்தியில் வைரல் ஆகிறது.
அதை ஈராக்கில் US Army-ல் இருக்கும் சில வீரர்கள் பார்த்துவிட்டு, இவன் எங்களில் ஒருவன். எங்களின் உயிரை காப்பாற்றிய ஹீரோ என்று பதிலுக்கு Video அனுப்ப, இரண்டு Video-வும் சேர்ந்து Tommy-யை பெரிய ஹீரோ ஆக்கிவிடுகிறது.
மறுபக்கம், ஸ்கூல் டீச்சராக வேலை பார்க்கும் அண்ணன் Brenden, குடும்பத்தையும் குழந்தைகளையும் சமாளிக்க முடியாமல் பணக்கஷ்டத்தில் இருப்பதால் கூடுதல் வருமனத்திற்காக சின்ன சின்ன குத்துச்சண்டையில் பங்கேற்கிறான். அது ஸ்கூலுக்கு தெரிய வர இருந்த ஒரு நிரந்தர வேலையும் பறிபோகிறது.
அந்த சமயத்தில் 50 லட்சம் பரிசு தொகையுடன் ஒரு பெரிய குத்துச்சண்டை போட்டி நடக்க இருப்பது தெரிந்து அதில் கலந்து கொள்ள முடிவெடுக்கிறான். அதில் ஜெயித்தால் தான் தன் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்பதால் வெறிகொண்டு போராட முடிவெடுக்கிறான். இதில் என்ன சோகம் என்றால், எதிரிகளை அடித்து துவம்சம் செய்யும் அளவிற்கு பலசாலி அல்ல Brenden ஆனால் யுக்திகள் மூலம் எதிரிகளை வீழ்த்துவதில் வல்லவன்.
அதே போட்டியில் தம்பி Tommy-யும் பங்கேற்கிறான், ஆனால் இருவருக்குமே இந்த விஷயம் தெரியாது. ஏற்கனவே நாடெங்கும் அவன் புகழ் பரவிவிட்டதால், பலத்த ஆதரவுகளுக்கு மத்தியில் அனைத்து போட்டிகளையும் அவன் பாணியில் அதிரடியாக வென்று இறுதி போட்டியில் வந்து நிற்கிறான் Tommy.
தன் யுக்திகள் மூலம் ஜாம்பவான்களை எல்லாம் வென்று ஒரு வழியாக அண்ணன் Brenden-னும் இறுதி போட்டியில் வந்து நிற்கிறான்.
இறுதி போட்டியில் எதிர் எதிரே நிற்பது அண்ணன் தம்பிகள் என்று மக்களுக்கு தெரிய வர மேலும் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. பரபரப்பான இறுதிப்போட்டியில் வென்றது யார் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த படத்திற்காகவே உடலை செம்மையாக தயார் செய்துள்ளார் Tom Hardy. அவரை பார்த்ததும் இளைஞர்கள் அனைவருக்கும் குத்துச்சண்டை மீது ஆர்வம் வரும். 😊
IMDB Rating : 8.1
Directed by: Gavin O'Connor
Starring: Joel Edgerton, Tom Hardy, Jennifer Morrison, Frank Grillo, Nick Nolte
கருத்துகள்
கருத்துரையிடுக