முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

War of the arrows - வார் ஆஃப் தி ஆரோஸ் - 2011

War of the arrows - வார் ஆஃப் தி ஆரோஸ் - 2011 Korean Movie Tamil Review 


இது ஒரு அருமையான பரபரப்பான கொரியன் ‌ ஆக்சன் திரைப்படம். கொரியாவில் அரசர்கள் ஆட்சி செய்த போது நடக்கும் கதை. படத்தின் தலைப்பிலிருந்து இது வில்வித்தை சம்பந்தப்பட்ட படம் என்பதை தெரிந்து கொள்ளலாம். 

படத்தின் ஆரம்பத்தில் இரு குழந்தைகளை (அண்ணன் மற்றும் தங்கை) ஒரு அரசபடை துரத்துகின்றது. குழந்தைகளின் தந்தை தன் உயிரை கொடுத்து அக்குழந்தைகள் தப்பிக்க உதவுகிறார். 

War of the arrows Korean movie review in tamil, வார் ஆஃப் தி ஆ ரோஸ் திரைப்பட விமர்சனம்,Han-min Kim, Hae-il Park, Seung-yong Ryoo, Moon Chae-Won


அக்குழந்தைகள் தனது தந்தையின் நண்பர் வீட்டில் அடைக்கலம் புகுகிறார்கள். 

கதை 13 வருடங்கள் முன்னோக்கி நகர்கிறது. அண்ணன் (Nam Yi) தங்கை(Ja-In) இருவரும் வாலிப வயதில் உள்ளனர். தங்களை வளர்த்த அப்பாவை நண்பரின் மகன்(Seo gun) தங்கையை மணமுடிக்க ஆசைப்படுகிறார். 

திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கின்றன. திருமண நாளன்று இன்னொரு அரசரின் படையெடுப்புக்கு ஆளாகிறது இவர்களது கிராமம். கண்ணில் பட்டவர்கள் அனைவரையும்  கொன்று மிச்சம் உள்ளவர்களை அடிமைகளாக அழைத்துச் செல்கிறது இந்த கூட்டம். 

அப்பாவின் நண்பரை கொன்றுவிடுகிறது இந்த கூட்டம். நண்பன் மற்றும் தங்கையே அடிமைகளாக எடுத்துச் செல்கின்றனர். Nam Yi அதிருஷ்டவசமாக அந்த இடத்தில் இல்லாததால் தப்பித்து விடுகிறான். 

வில்வித்தையில் மிகவும் திறமை வாய்ந்தவன் Nam Yi. தனியாளாக தன் தங்கையை மீட்க வில் மற்றும் அம்பு துணையுடன் கிளம்புகிறான். 

மிகப்பெரிய அரச படைகளுடன் வில் மற்றும் அம்பு துணையுடன் போராடி தங்கையை மீட்டான என்பதை படத்தில் பாருங்கள். 

படம் ஆரம்பத்தில் சிறிது மெதுவாக நகர்கிறது. ஆனால் தங்கையை கடத்தி சென்றவுடன் படம் உச்சகட்ட பரபரப்பு அடைகிறது. 

ஆரம்பத்தில் எவ்வாறு வில் மற்றும் அம்பு மட்டும் வைத்துக்கொண்டு படைகளை சமாளிப்பான் என்ற சந்தேகத்துடன் தான் படத்தை பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் சிறப்பான முறையில் நம்பும்படியான விதத்தில் படம் எடுக்கப்பட்டுள்ளது. 

நாயகன் வில்வித்தையில் எவ்வளவு திறமையானவன் என்பதை எதிரிஅரசரின் படைகள் விளக்குவது போன்ற காட்சிகளின் மூலம் தெளிவாக சொல்லப்படுகிறது.

அதுவும் எதிரிப் படையின் தளபதி வில்லிலிருந்து அம்பு புறப்பட தயாராக இருக்கும் வேளையில் நாயகன் விடும் அம்பு தளபதியின் வில்லின் நாணை பிய்த்துக் கொண்டு போகும் காட்சி அருமை.

பல இடங்களில் அம்பு எவ்வாறு சென்று யாரைப் குத்தியது என்பது தெரியாத அளவு மிக வேகமாக படம் பிடித்து உள்ளனர். இரண்டு மூன்று இடங்களில் மீண்டும் மீண்டும் பார்த்த பிறகு தெளிவாக புரிந்தது. 

ஒரு கட்டத்தில் படம் நிறைய இடங்களில் Apocalypto படத்தை ஞாபகப்படுத்தியது. குறிப்பாக புலி வரும் காட்சிகள். 

படம் பிடித்த இடங்கள் அருமையாக இருந்தது. 

அம்புகள் காற்றைக் கிழித்துக்கொண்டு செல்லும் சத்தம் சிறப்பு. 

கிராபிக்ஸில் புலி வரும் காட்சிகளை இன்னும் கொஞ்சம் சிறப்பாக எடுத்திருக்கலாம். 

கிளைமாக்ஸ் காட்சியில் வில்லன் மற்றும் அண்ணன் நடுவே நிற்பது மற்றும் அதன் பின்னர் நடக்கும் காட்சிகள் இருக்கை நுனியில் உட்கார வைக்கும். 

ஆக்ஷன் படங்களில் இது மிகவும் வித்தியாசமான மற்றும் பரபரப்பான திரைப்படம். அண்ணன் தங்கை பாசத்துடன் பரபரப்பான திரைக்கதையுடன் சிறப்பான படத்தை தந்துள்ளார் இயக்குனர். 

கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். 

IMDb Rating : 7.2

Director: Han-min Kim

Writer: Han-min Kim

Cast: Hae-il Park, Seung-yong Ryoo, Moon Chae-Won, Mu-Yeol Kim, Han-wi Lee, Kyeong-yeong Lee, Gi-woong Park, Rye Hei Otani



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

எட்ஜ் ஆஃப் டுமாரோ - Edge Of Tomorrow (2014)

எட்ஜ் ஆஃப் டுமாரோ - Edge Of Tomorrow (2014) Tamil Review  இது பிரபல நாயகன் டாம் ஃகுரூஸ் (Tom Cruise) மற்றும் எமிலி (Emily Blunt) இணைந்து நடித்த டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வித்தியாசமான படம். ஏலியன்கள் பூமியை கைப்பற்ற போர் தொடுக்கின்றன. மிகவும் புத்திசாலித்தனமான இருப்பதால் மனித இனத்தால் தாக்கு பிடிக்க முடியாமல் பெருத்த அளவில் உயிர் சேதங்கள் ஏற்படுகின்றது. இந்நிலையில் உள்குத்து அரசியல் காரணங்களால் இது வரை போர்களமே கண்டிராத டாம் க்ரூஸ் நேராக போருக்கு அனுப்பப்படுகிறார். ஐந்து நிமிடங்களில் ஏலியனால் கொல்லப்பட்டு இறந்து விடுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக டைம் லூப்பில் மாட்டிக் கொள்கிறார். எழும் போது போர்களத்தில் எழுகிறார் சண்டை போடுகிறார் மறுபடியும் இறந்து போகிறார். ஒவ்வொரு சுழற்சியின் போதும் புதிதாக சண்டை நுணுக்கங்களை கற்று படத்தில் ராணுவ வீரராக வரும் நாயகியுடன் இணைந்து ஏலியன் தலைவன் ஆன ஆல்ஃபா வை வீழ்த்தி மனித இனத்தை காப்பாற்றினார்களா என்பதே முடிவு. மிகவும் புதிதான கதையம்சம் மற்றும் இயக்கம். போர் காட்சிகள் சிறப்பான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக ‌பார்க்க வேண்டி

My Microsoft Azure - AZ 900 Certification Journey.

இது மாதிரி நெறயா ஆர்ட்டிக்கிள் பார்த்து இருப்பீர்கள். ஆனா என்னோட பயணம் இந்த சர்ட்டிபிகேஷன் முடிச்சே ஆகணும் மற்றும் நேரம் குறைவு என்பதால் பரபரப்பாக  படித்தது. அதுனால ரொம்பவே ப்ராக்டிகலா இருக்கும். எல்லாருக்கும் ஒர்க் ஆகுமானு தெரியாதுங்க. அதனால இத அப்படியே எல்லாம் ஃபாலோ பண்ணாதீங்க.  இது நான் உபயோகித்த வழிமுறைகள் மட்டுமே. Just want to share my experience இந்த செப்டம்பர்க்குள்ள ஏதாவது ஒரு சர்ட்டிபிகேஷன் முடிக்க வேண்டும் என கம்பெனியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.  நான் படிச்சுட்டு இருந்தது GCP Exam க்கு.‌ஆனா திடிரென Azure & GCP எதுனாலும் படிக்கலாம் என்று சொல்லிட்டு நிறைய கட கடவென AZ 900 எழுதி பாஸ் ஆகிவிட்டார்கள்.  நான் எழுதுனா GCP தான் எழுதுவேன் என்று உக்காந்து இருந்தேன். ஆனா எனக்கு தெரிந்த கம்பெனி வட்டத்தில் யாரும் GCP எழுதவில்லை . அதனால் நம்பிக்கை கொஞ்சம் கம்மியாகவே இருந்தது.  இதற்கு நடுவில் ஒரு ஜீனியர் பையன் நான் AZ 900  முடிச்சுட்டேன் என்று கால் பண்ணான். எப்படிடா என்றதும் 2 லிங்கை வாட்ஸ்ஆப்பில் அனுப்பினான். இத மட்டும் படிச்சு தான் நான் பாஸ் ஆனேன் என்றான்.  இதற்கு நடுவில் எங்க