The Boy Who Harnessed The Wind ( தி‌ பாய் ஹு ஹார்னெஸ்டு தி வின்ட்)

காற்றுக்கு கடிவாளம் போட்ட சிறுவனின் கதை....

2000 வது வருடத்தில் மலாவி என்ற ஆப்ரிக்க நாட்டில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்.  

மலாவி ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும், கிட்டத்தட்ட 50% மக்களுக்கு கீழ் வறுமையின் கோரப்பிடியில் தவிக்கின்றனர். கறுப்பினத்தை சேர்ந்த மக்கள் பெரும்பாலும் வசிக்கின்றனர் மற்றும் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. 

மின்சார வசதியே இல்லாத கிராமத்தில்  மிக ஏழ்மையான  குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது வில்லியம் (Maxwell Simba) 2000 வது வருடத்தில் தலை தூக்கும் மிகக் கொடுரமான பஞ்சத்தில் இருந்து தன் கிராமத்தை எவ்வாறு காப்பாற்றினான் என்பதை சொல்லும் திரைப்படம்.

படத்தின் முதல் காட்சியில் வில்லியம்மின் பெரியப்பா இறந்து விடுகிறார். அவருடைய இறுதிச் சடங்கில் வித்தியாசமான வேடங்களில் ஆப்ரிக்க கலாச்சார நடனத்துடன் தொடங்குகிறது படம். அவருடைய நிலம் அவர் மகனுக்கு செல்கிறது. 

வில்லியம்மின் அப்பா ட்ரைவெல் நேர்மையான உழைப்பாளி . படிப்பின் அருமை தெரிந்து கஷ்டப்பட போதிலும் தனது மகன் மற்றும் மகளை படிக்க வைக்கிறார்.  மகனுக்கு படிப்பதில் ஆர்வம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்களை  பற்றி அறிந்து வைத்திருக்கிறான். 

அப்பா கதாபாத்திரத்தில் Chiwetel Ejiofor நடித்து உள்ளார்.இவர் நடித்த 12 Years a slave  இவரது நடித்தில் சிறந்த திரைப்படம்.  மேலும் The Old Guard,  2012, Children Of Men போன்ற பல திரைப்படங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார். மிகச்சிறந்த நடிகரான இவருக்கு இயக்குனராக முதல் திரைப்படம். 

வில்லியம் பெரியப்பா மகன் அவர் பங்கு நிலத்தை கார்ப்பரேட் கம்பெனியிடம் விற்று விடுகிறார்.  வெள்ளம் வரும் நேரத்தில் அரணாக இருக்கும் மரங்களை வெட்டி விடுகின்றனர் கம்பெனி ஆட்கள்.  இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் பயிர் முழுவதும் பாழாகிறது. இதனால்  பள்ளி கட்டணம் கட்ட முடியாமல் வில்லியம் பள்ளியில் இருந்து துரத்தப்படுகிறான். 

ஆனால் தன் சகோதரியிடம் பழகும் ஆசிரியரை மிரட்டி நூலகத்திற்கு செல்ல வழி செய்கிறான். 

அங்கு Using Energy  என்ற புத்தகத்தை படிக்கிறான். 

படித்ததை உபயோகித்து கிடைத்த ஓட்டை உடைசல் பொருட்களை வைத்து ஒரு இயந்திரத்தை தயார் செய்து கிராமத்தை எப்படி காப்பாற்றுகிறான் என்பதை படத்தில் பாருங்கள். 

வில்லியமாக நடித்த சிம்பாவிற்கு முதல் படமாம். ஆனால் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.  

நாளைக்கு தேர்வு இருக்கிறது படிக்க வேண்டும் கூடுதலாக விளக்கிற்கு எண்ணெய் இருக்கிறதா போன்ற காட்சிகளை பார்க்கும் போது நம்முடைய வாழ்க்கை எவ்வளவு அருமையான ஒன்று என்பது தெரியும். 

கார்ப்பரேட் மற்றும் அரசியல்வாதிகள் எல்லா நாட்டிலும் ஒரே மாதிரி தான் மக்களின் வாழ்வாதாரத்தை  பற்றி கண்டு கொள்ளாமல்‌ சுயநலமாக  இருப்பதை தெளிவாக காட்டியுள்ளார் இயக்குனர். 

படம் பெரும்பாலும் ஆப்ரிக்க மொழியில் உள்ளது.‌ஆங்காங்கு ஆங்கிலம் பேசப்படுகிறது. நடிகர்கள் அனைவரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். 

ஆப்ரிக்காவின் சுட்டெரிக்கும் நிலப்பரப்பு, பருவ மழை என ஒளிப்பதிவு இயற்கையான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. 

படம் ‌மெதுவாக செல்கிறது. கடைசி காட்சிக்கு முன்பாக வில்லியம்மின் அம்மா மற்றும் அப்பா பேசும் காட்சி கண் கலங்க வைக்கும். 

படத்தின் முடிவு எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும் அருமையாக உள்ளது. 

படம் முடிந்த பின்பு உண்மையான வில்லியம் , அவன் குடும்பம் மற்றும் கிராமம் காட்டப்படுகிறது.

வில்லியம்மின் இந்த சாதனை மிகப்பெரிய ஒன்று... ஆனால் மிகவும் தாமதமாகவே வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது. 

குடும்பத்துடன் பார்க்கலாம். 

IMDb Rating : 7.6/ 10

Available in Netflix

Director: Chiwetel Ejiofor

Cast:
Trywell Kamkwamba Chiwetel Ejiofor
William Kamkwamba Maxwell Simba
Annie Lily Banda
Edith Sikelo Noma Dumezweni
Agnes Kamkwamba Aïssa Maïga

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்