முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Project Power - ப்ராஜெக்ட் பவர் - 2020

Project Power Tamil Review ப்ராஜெக்ட் பவர் - 2020


இந்த படம் ரெண்டு நாள் முன்னாடி நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. 

படத்தின் plot நன்றாக இருந்தது அது போக சிறந்த நடிகர்கள் வேறு. Jamie Foxx (Django Unchained,Baby Driver) மற்றும் Joseph Gardon -Levitt (Inception, Lincoln ) குறிப்பிட்டு சொல்லக் கூடியவர்கள். 


Project Power  movie review in Tamil- ப்ராஜெக்ட் பவர் திரைப்பட விமர்சனம் தமிழில்,Jamie Foxx, Joseph Gordon-Levitt, Dominique Fishback,  Henry Joost


ஊருக்குள் தொடர்ச்சியாக பல வித்தியாசமான சம்பவங்கள் நடக்கின்றன. ஒருவன் காரை ஒரே கையால் தூக்குகிறான், இன்னொருவன் போலீஸ் காரை ஓடியே முந்தி செல்கிறான். 

இதற்கு எல்லாம் காரணம் ஊருக்குள் புதிதாக வந்த ஒருவிதமான மாத்திரை.  இந்த மாத்திரையை யார் முழுங்கினாலும் 5 நிமிடங்கள் அபரிமிதமான சக்தி கிடைக்கிறது.  சுருக்கமாக சொன்னால் 5 நிமிடங்கள் யார் வேண்டுமானாலும் சூப்பர் ஹீரோ ஆகலாம். 

ஆனால் எந்த மாத்திரை எந்த மாதிரியான சக்தியை தரும் என்று யாருக்குமே தெரியாது. அது குறித்து முழுங்கிய பின் தான் தெரியும். 

ஆர்வத்தை தூண்டும் கதை ஆனால் எடுத்த விதம் மிகவும் சாதரணமாக உள்ளது. 

ராபின் ( Dominique Fishback)  பள்ளியில் படிக்கும் மாணவி. தன் அம்மாவின் உடல்நிலை காரணமாக பணம் தேவைப்படுவதால் தன் கசின் உதவியுடன் இந்த சூப்பர் பவர் டேப்லெட்டை விற்கிறார். 

ப்ராங் (Joseph Gardon-Levitt) ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. ஊரை நம்மால் முடிந்த அளவு காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பவர். ஆனால் இந்த இன்ஸ்டன்ட் சூப்பர் ஹீரோக்களை சமாளிக்க முடியாமல் திணருகிறார். 

ஒரு கட்டத்தில் முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும் என முடிவு செய்து ராபின்னிடம் இருந்து சூப்பர் பவர் டேப்லெட்டை வாங்கி குற்றவாளிகளை பிடிக்க உபயோகிக்கின்றார். 

ஆர்ட் (Jamie Foxx) ஒரு முன்னாள் ராணுவ வீரர் . இவர் தனியாளாக சூப்பர் டேப்லெட் கூட்டத்தை அழிக்க நினைக்கிறார். இவரது மகளை சில காரணங்கள் காரணமாக  சூப்பர் டேப்லெட் கூட்டம்  கடத்தி வைத்துள்ளனர். 

ஒரு கட்டத்தில் ராபின் மூலம் அவர்கள் எஜமானர்களை பிடிக்க திட்டம் இடுகிறார் ஆர்ட். இந்த திட்டத்தில் ப்ராங்கும் இணைந்து கொள்ள வில்லன்களின் தலைமை இடமாக இருக்கும் ஒரு கப்பலுக்குள் நுழைகிறார்கள்.  

ஆர்ட் தன் மகளை மீட்டாரா ? வில்லன்கள் கூட்டத்தை அழித்தார்களா ? என்பதை படத்தில் பாருங்கள். 

கிராஃபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக உள்ளது ‌. அதுவும் ஒருவன் மாத்திரையை போட்டு விட்டு தீப்பிழம்பாக மாறி வீடுகளுக்குள் ஓடுவது.

பச்சோந்தி போல சூழ்நிலையோடு ஒன்றும் மாத்திரையை போட்டு வங்கியை கொள்ளை அடிக்கும் காட்சிகள். 

அதுவும் அந்த பச்சோந்தி மனிதனை ப்ராங் நகர வீதிகளில் துரத்தும் போது அவன் உருவம் இடத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே வருவது சிறப்பான கிராபிக்ஸ். 

பெரிய தலைகளுக்கு நடிப்பதற்கு பெரிதாக காட்சிகள் இல்லை. ராபின் கதாபாத்திரத்தில் வரும் பெண் சிறப்பாக நடித்திருக்கிறார். 

வில்லன் கூட்டத்திற்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கி இருக்கலாம். அவர்கள் யார் , நோக்கம் என்ன எனபது குழப்பமாக உள்ளது. 

ஒரு முறை பார்க்கலாம்... டைம் பாஸ் திரைப்படம்.. நடிகர்கள் லிஸ்ட்டை பார்த்து ரொம்ப எதிர்பார்ப்புடன் பார்த்தால் ஏமாற்றமே... 

IMDb Rating : 6.1/10

Available in Netflix 

Cast: Jamie Foxx, Joseph Gordon-Levitt, Dominique Fishback, Rodrigo Santoro, Colson Baker, Allen Maldonado, Amy Landecker, Courtney B. Vance

Directed by: Henry Joost, Ariel Schulman

Release Date: August 14, 2020

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

My Microsoft Azure - AZ 900 Certification Journey.

இது மாதிரி நெறயா ஆர்ட்டிக்கிள் பார்த்து இருப்பீர்கள். ஆனா என்னோட பயணம் இந்த சர்ட்டிபிகேஷன் முடிச்சே ஆகணும் மற்றும் நேரம் குறைவு என்பதால் பரபரப்பாக  படித்தது. அதுனால ரொம்பவே ப்ராக்டிகலா இருக்கும். எல்லாருக்கும் ஒர்க் ஆகுமானு தெரியாதுங்க. அதனால இத அப்படியே எல்லாம் ஃபாலோ பண்ணாதீங்க.  இது நான் உபயோகித்த வழிமுறைகள் மட்டுமே. Just want to share my experience இந்த செப்டம்பர்க்குள்ள ஏதாவது ஒரு சர்ட்டிபிகேஷன் முடிக்க வேண்டும் என கம்பெனியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.  நான் படிச்சுட்டு இருந்தது GCP Exam க்கு.‌ஆனா திடிரென Azure & GCP எதுனாலும் படிக்கலாம் என்று சொல்லிட்டு நிறைய கட கடவென AZ 900 எழுதி பாஸ் ஆகிவிட்டார்கள்.  நான் எழுதுனா GCP தான் எழுதுவேன் என்று உக்காந்து இருந்தேன். ஆனா எனக்கு தெரிந்த கம்பெனி வட்டத்தில் யாரும் GCP எழுதவில்லை . அதனால் நம்பிக்கை கொஞ்சம் கம்மியாகவே இருந்தது.  இதற்கு நடுவில் ஒரு ஜீனியர் பையன் நான் AZ 900  முடிச்சுட்டேன் என்று கால் பண்ணான். எப்படிடா என்றதும் 2 லிங்கை வாட்ஸ்ஆப்பில் அனுப்பினான். இத மட்டும் படிச்சு தான் நான் பாஸ் ஆனேன் என்றான்.  இதற்கு நடுவில் எங்க

The Old Man - Season 1 (2022)

The Old Man Tamil Review - Season 1 இது ஒரு Action, Thriller, Drama Series.  1 Season, 7 Episodes (1 Episode Yet to release) Available @hulu இதுல ஹீரோ 70+ ல இருக்குற ஒரு வயசான தாத்தா (Jeff Bridges). திடிரென ஒரு நாள் ஒருத்தன் அவர கொல்ல வர்றான். இவரு யாரு ? எதுக்கு கொல்ல வர்றாங்க ? என்பதை சொல்கிறது தொடர்.  Dan Chase மனைவி இறந்த நிலையில் 2 நாய்களுடன் தனிமையில் வசிக்கிறார். திடீரென ஒருத்தன் இவரை கொல்ல வருகிறான் நடக்கும் சண்டையில் நாய்கள் உதவியுடன் அவனை கொன்று விடுகிறார்.  அதன் பிறகு வீட்டை காலி பண்ணிட்டு கிளம்புகிறார். அங்கிட்டு பார்த்தால் FBI ல ஒரு மிகப்பெரிய கூட்டமே இவர் தேடிட்டு இருக்கு.  யார் இந்த தாத்தா ? கிட்டத்தட்ட 30 வருடங்கள் அமைதியாக வாழ்ந்து வந்த இவரின் வாழ்க்கை திடீரென கலவர பூமியாக மாறுவதற்கு காரணம் என்ன என்பதை தற்போது நடக்கும் சம்பவங்கள் மற்றும் ஃப்ளாஷ்பேக் என மாறி மாறி பயணிக்கிறது படம்.  இவருடைய ஃப்ளாஷ் பேக் நடப்பது ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமிப்பு நடந்த சமயத்தில் நடந்த சம்பவங்கள். CIA ஏஜன்ட் ஆன இவர் அங்கு உள்ள ஒரு போராட்டக்குழுவுடன் சேர்ந்து ரஷ்யாவை எதிர்க்கிறான். அங்கு நடந்