எனக்கு பிடித்த Top 5 கொரியன் திரைப்படங்களை இங்கு பதிவிடுகின்றேன். திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒரு வகையைச் சேர்ந்தது.
கொரிய திரைப்படங்கள் பொதுவாகவே இயல்பான முறையில் படம் பிடிக்கப்பட்டு இருக்கும். ஆனால் வன்முறைக் காட்சிகள் மிகவும் அதிகம். எனவே இந்தப் பதிவு 18+ மற்றும் உறுதியான மனம் படைத்தவர்களுக்கு மட்டுமே.
5. The Gangster, The Cop , The Devil
இது ஒரே சீரியல் கொலைகாரனை ரவுடி கும்பல் தலைவன் மற்றும் போலீஸ் இருவரும் இணைந்து எவ்வாறு பிடிக்கிறார்கள் என்பதை கூறும் திரைப்படம் . நான் பார்த்த கொரியன் படங்களில் கொஞ்சம் கமர்சியல் ஆன படம் இதுதான்.
IMDb Rating : 6.9/10
4. The Wailing
ஒரு அழகான மலை கிராமத்தில் திடீரென சில நபர்கள் வன்முறையில் இறங்குகிறார்கள். அதுமட்டுமல்லாமல் தங்கள் குடும்பத்தை மொத்தமும் கொன்று குவிக்கின்றன. இதற்கு காரணம் ஊருக்குள் புதிதாக வந்த ஒரு ஜப்பானிய மனிதன் என அந்த இந்த ஊர் போலீஸ் அதிகாரி என நினைக்கிறார். அவரது மகனும் பாதிக்கப்பட எவ்வாறு மகளை காப்பாற்றுகிறார் என்பது கதை. ஆனால் பேய் யார் என்பதை கடைசிவரை மர்மமாகவே வைத்திருப்பார் இயக்குனர்.
IMDb Rating : 7.4/10
3. Mother
வறுமையில் வாடும் அம்மா மற்றும் மகன் கொண்டு ஒரு குடும்பம். மகன் மீது ஒரு இளம்பெண்ணை ஒன்றுதல் குற்றம்சாட்டப்பட்டு ஜெயிலுக்கு அனுப்பப்படகிறார். ஆனால் தாய் இதை நம்ப மறுத்து உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார்.
IMDb Rating : 7.8/10
2. Okja
மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஒரு பன்றி போன்ற ஒரு விலங்குக்கும் அதை வளர்த்த இளம் பெண்ணுக்கும் நிறைய நடக்கும் பாசப் போராட்டம்தான் கதை.
IMDb Rating : 7.3/10
1. Oldboy
ஒரு சாதாரண குடும்பஸ்தன் திடீரென கடத்தப்படுகிறார். ஒரு சிறிய அறையில் 15 வருடங்கள் சிறைவைக்கப்படுகிறார். 15 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டு ஏன் சிறை வைக்கப்பட்டார் என கண்டுபிடிப்பதற்கு ஐந்து நாட்கள் கொடுக்கப்படுகிறது.
இந்த படம் முதலிடத்தில் இருப்பதற்கு காரணம் இந்த படத்தின் கடைசியில் வரும் திருப்பம். அதுபோக படம் எதை நோக்கிச் செல்கிறது என்பதை துளிகூட யூகிக்க முடியாது.
IMDb Rating : 8.4/10
கருத்துகள்
கருத்துரையிடுக