முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சினிஸ்டர் (Sinister) - 2012

சினிஸ்டர் (Sinister Tamil Review) - 2012


இது ஒரு அருமையான திகில் திரைப்படம். 
இது போன்று பயமுறுத்தும் திகில் படங்களை பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது. 

படத்தின் நாயகன் எல்லிசன் ஒரு க்ரைம் நாவல் எழுத்தாளர். உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு கதை எழுதுவதில் கில்லாடி. கடந்த சில புத்தகங்கள் பிரபலமாகவில்லை அதனால் ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.  கதை எழுதும் போது சம்பவங்கள் நடந்த இடத்திற்கு அருகில் வீடு வாங்கி அங்கேயே தங்கி கதை எழுதுகிறார். 

Sinister horror movie review in tamil, சினிஸ்டர் திகில் திரைப்பட விமர்சனம், Scott Derrickson, Ethan Hawke, Juliet Rylance, Michael Hall D'Addario



படத்தின் ஆரம்பத்தில் ஒரு பழைய காலத்து வீடியோ டேப் காட்டப்படுகிறது.‌ வீட்டின் பின்புறம் ஒரு குடும்பமே தூக்கில் தொங்க விடப்படுகிறது. 
ஆனால் அந்த குடும்பத்தில் உள்ள ஒரு பெண் குழந்தை மட்டும் இந்த சம்பவத்திற்கு அப்புறம் காணாமல் போய்விடுகிறது. 

எல்லிசன் அதே வீட்டிற்கு தான் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளோடு குடி வருகிறான்  தூக்கில் இடப்பட்ட குடும்பம் மற்றும் காணாமல் போன குழந்தையை வைத்து கதை எழுதுவது அவனுடைய குறிக்கோள். 

வீட்டில் பொருட்களை எடுத்து வைக்கும் பொழுது ஒரு பெட்டியில் பழைய காலத்து வீடியோ டேப்கள் இருப்பதை கண்டுபிடிக்கிறான். ஒவ்வொரு டேப்பிலும் எதை பற்றிய வீடியோ மற்றும் எந்த வருடம் எடுக்கப்பட்டது போன்ற விபரங்கள் எழுதப்பட்டுள்ளது. அதோடு அந்த டேப்பை பார்க்க உதவும் இயந்திரமும் உள்ளது. 

அந்த டேப்களை பார்க்க ஆரம்பிக்கிறான்.

முதல் டேப் படத்தின் முதல் காட்சியில் வருவது மொத்த குடும்பத்தையும் தூக்கில் தொங்க விடுவது. 

இரண்டாவது டேப் ஒரு குடும்பத்தை காரில் வைத்து உயிரோடு கொளுத்துவது. 

இதே போன்று கொடுமையான டேப்கள் அந்த பெட்டியில் உள்ளது. 

ஆனால் அனைத்து வீடியோக்களிலும் ஒரு தருணத்தில் அகோரமான முகம் கொண்ட ஒரு உருவம் மற்றும் ஒரு குறியீடு  தெரிவதை கண்டுபிடிக்கிறான். 

இதற்கு நடுவில் வீட்டில் அசாதாரணமான விஷயங்கள் நடக்கின்றன. மகனுக்கு கொடுரமாக கனவுகள் வருகின்றன, காணாமல் போன குழந்தையின் படத்தை அவனுடைய சின்ன மகள் சுவற்றில் வரைகிறாள். 

இதற்கு நடுவில் லோக்கல் போலீஸ் அதிகாரி மற்றும் அமானுஷ்ய ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர் உதவியுடன் வீடியோக்கள் எங்கு எடுக்கப்பட்டது இறந்து போனவர்களின் விபரங்கள் மற்றும் குறியீடுகள் பற்றிய  விபரங்களை சேகரிக்க முயல்கிறான். 


அமானுஷ்ய சம்பவங்கள் எல்லை மீறி போக டேப் மற்றும் இயந்திரத்தை கொழுத்தி விட்டு வேறு வீட்டிற்கு சென்று விடுகின்றனர். 

அதன் பின் போலீஸ் அதிகாரி ஃபோன் செய்து இந்த கொலைகள் அனைத்தும் தொடர்பு உடையது என்றும் எல்லா கொலைகளின் முடிவிலும் குழந்தை ஒன்று காணாமல் போய்விடுகிறது என்கிறார். 

முந்தைய வீட்டில் இருந்து பேக்கிங் சர்வீஸ் நபர்கள் கொண்டு வந்து வைத்த அட்டை பெட்டியில் மறுபடியும் வீடியோ டேப்கள் உள்ளது. அதில் எக்ஸ்டென்ட் கட் ( Extended Cut) என எழுதப்பட்டுள்ளது. 

அந்த வீடியோக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்து பின் மயக்கம் அடைகிறான். அதன் பின் நடந்ததை படத்தில் பாருங்கள். 

பட திகிலூட்டும் காட்சிகள் பல உள்ளன. உதாரணமாக அட்டிக்கில் சத்தம் கேட்டு என்ன என்று பார்க்க செல்லும் காட்சிகள், தூக்கில் தொங்கிய இடத்தில் இரவில் நடக்கும் காட்சிகள் என சொல்லிக் கொண்டே போகலாம் ‌ 

குறிப்பாக டேப்பில் காட்டப்படும் காட்சிகள் பீதியடைய வைக்கின்றன. அதுவும் அந்த புல் சமப்படுத்தும் இயந்திரம் வரும் காட்சி இதய துடிப்பை எகிற வைக்கும். 

பழைய காலத்து வீடியோ கேமராவில் எடுக்கப்பட்ட வீடியோக்களில் வரும் ஒருவிதமான அசைவு திகில் காட்சிகளுக்கு நன்றாக உதவியுள்ளது. 

திகில் பட பிரியர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். 





Director: Scott Derrickson
Cast: Ethan Hawke, Juliet Rylance, Michael Hall D'Addario, Clare Foley, James Ransone
Screenplay: Scott Derrickson, C. Robert Cargill
Cinematography: Chris Norr
Music: Christopher Young


Watch Trailer: 





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

எட்ஜ் ஆஃப் டுமாரோ - Edge Of Tomorrow (2014)

எட்ஜ் ஆஃப் டுமாரோ - Edge Of Tomorrow (2014) Tamil Review  இது பிரபல நாயகன் டாம் ஃகுரூஸ் (Tom Cruise) மற்றும் எமிலி (Emily Blunt) இணைந்து நடித்த டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வித்தியாசமான படம். ஏலியன்கள் பூமியை கைப்பற்ற போர் தொடுக்கின்றன. மிகவும் புத்திசாலித்தனமான இருப்பதால் மனித இனத்தால் தாக்கு பிடிக்க முடியாமல் பெருத்த அளவில் உயிர் சேதங்கள் ஏற்படுகின்றது. இந்நிலையில் உள்குத்து அரசியல் காரணங்களால் இது வரை போர்களமே கண்டிராத டாம் க்ரூஸ் நேராக போருக்கு அனுப்பப்படுகிறார். ஐந்து நிமிடங்களில் ஏலியனால் கொல்லப்பட்டு இறந்து விடுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக டைம் லூப்பில் மாட்டிக் கொள்கிறார். எழும் போது போர்களத்தில் எழுகிறார் சண்டை போடுகிறார் மறுபடியும் இறந்து போகிறார். ஒவ்வொரு சுழற்சியின் போதும் புதிதாக சண்டை நுணுக்கங்களை கற்று படத்தில் ராணுவ வீரராக வரும் நாயகியுடன் இணைந்து ஏலியன் தலைவன் ஆன ஆல்ஃபா வை வீழ்த்தி மனித இனத்தை காப்பாற்றினார்களா என்பதே முடிவு. மிகவும் புதிதான கதையம்சம் மற்றும் இயக்கம். போர் காட்சிகள் சிறப்பான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக ‌பார்க்க வேண்டி

My Microsoft Azure - AZ 900 Certification Journey.

இது மாதிரி நெறயா ஆர்ட்டிக்கிள் பார்த்து இருப்பீர்கள். ஆனா என்னோட பயணம் இந்த சர்ட்டிபிகேஷன் முடிச்சே ஆகணும் மற்றும் நேரம் குறைவு என்பதால் பரபரப்பாக  படித்தது. அதுனால ரொம்பவே ப்ராக்டிகலா இருக்கும். எல்லாருக்கும் ஒர்க் ஆகுமானு தெரியாதுங்க. அதனால இத அப்படியே எல்லாம் ஃபாலோ பண்ணாதீங்க.  இது நான் உபயோகித்த வழிமுறைகள் மட்டுமே. Just want to share my experience இந்த செப்டம்பர்க்குள்ள ஏதாவது ஒரு சர்ட்டிபிகேஷன் முடிக்க வேண்டும் என கம்பெனியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.  நான் படிச்சுட்டு இருந்தது GCP Exam க்கு.‌ஆனா திடிரென Azure & GCP எதுனாலும் படிக்கலாம் என்று சொல்லிட்டு நிறைய கட கடவென AZ 900 எழுதி பாஸ் ஆகிவிட்டார்கள்.  நான் எழுதுனா GCP தான் எழுதுவேன் என்று உக்காந்து இருந்தேன். ஆனா எனக்கு தெரிந்த கம்பெனி வட்டத்தில் யாரும் GCP எழுதவில்லை . அதனால் நம்பிக்கை கொஞ்சம் கம்மியாகவே இருந்தது.  இதற்கு நடுவில் ஒரு ஜீனியர் பையன் நான் AZ 900  முடிச்சுட்டேன் என்று கால் பண்ணான். எப்படிடா என்றதும் 2 லிங்கை வாட்ஸ்ஆப்பில் அனுப்பினான். இத மட்டும் படிச்சு தான் நான் பாஸ் ஆனேன் என்றான்.  இதற்கு நடுவில் எங்க