இது எதிர்காலத்தில் நடப்பது போன்ற Sci Fi திரைப்படம் . எதிர்காலத்தில் கார், வீட்டில் உள்ள பொருட்கள் என எல்லாமே குரலின் மூலம் இயங்கும் AI மூலம் கட்டுப்படுத்தப் படுகின்றன. படத்தின் நாயகன் க்ரே ( Logan Marshall - Green ) தன் மனைவி ஆஷா (Melanie Vallejo) என இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு நாள் இருவரும் க்ரேவின் நண்பனும் கம்யூட்டர் தொழில்நுட்ப வல்லுநனரான எரோன் ( Harrison Gilbertson) ஐ சந்தித்து விட்டு வரும் வழியில் தானாகவே ஓடும் காரில் (Self driving car) ஏதோ பிழை ஏற்பட்டது விபத்தில் சிக்குகின்றனர். அப்போது அங்கு வரும் ஒரு ரவுடி கும்பல் க்ரேவை படுகாயம் அடைய செய்து விட்டு அவரது மனைவியை கொன்று விடுகிறார்கள். உயிர் பிழைத்த க்ரே முதுகெலும்பில் அடி பட்டதன் காரணமாக கை , கால்கள் செயல் இழந்து நடை பிணமாக சக்கர நாற்காலியில் விழுகிறார். க்ரேவை பார்க்க வரும் நண்பன் எரோன் தான் கண்டுபிடித்த ஒரு அதிநவீன சிப்பான ஸ்டெம் ஐ பற்றி கூறுகிறான். ஸ்டம்யை உடலில் பொருத்தி கொண்டால் அவன் முன்பு போல் நடக்கலாம் என்கிறான். ஒரு கட்டத்தில் சிப்பை பொருத்த ஒத்துக் கொள்ள , க்ரேவின் முதுகுத்தண்டில் அறு
ஹாலிவுட் மற்றும் கொரியன் திரைப்பட விமர்சனங்கள் - Hollywood and Korean Movie Reviews in Tamil