முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தி ஓல்ட் கார்ட் - The Old Guard


தி ஓல்ட் கார்ட் - The Old Guard - 2020


 இது ஒரு‌‌ ஃபேண்டஸி கலந்த ஆக்ஷன் திரைப்படம். 

நாங்க நாலுபேர் எங்களுக்கு சாவே கிடையாது என்று நல்லவங்களுக்கு உதவி செய்யும் ஹீரோயின் மற்றும் அவளுடைய குழு.

இவனுங்க மட்டும் எப்படி சாகாம இருக்காங்க. அவங்கள புடிச்சு ரத்தம், டிஎன்ஏ எல்லாம் எடுத்து ஆராய்ச்சி பண்ணலாம். அது மூலமா மருந்து கண்டுபிடிச்சா நமக்கும் பணம் கிடைக்கும் அதுபோக மத்த மனுஷங்களுக்கு சாவே இல்லாம சந்தோசமா இருக்கலாம் என்று திட்டமிட்டு அவர்களை பிடிக்க நினைக்கும் வில்லன் விஞ்ஞானி மற்றும் அவனுடைய பாதுகாப்பு படைக்கு நடுவே நடக்கும் சண்டைதான் படத்தின் கதை. 

நெட்பிளிக்ஸ் தயாரித்து வெளியிட்ட திரைப்படம். திரைப்படம் ஜூலை 10 2020 அன்று வெளிவந்துள்ளது. 


படத்தின் கரு என்னமோ நன்றாக தான் இருக்கிறது  ஆனால் எடுத்த விதம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். 

இந்த நான்கு பேர் குழுவில் உள்ள அனைவருக்கும் வயது நூற்றாண்டுகளில் உள்ளது. ஒருவர் நெப்போலியன் படையில் சண்டையிட்டேன் என்கிறார். ஹீரோயின் வயது சொல்லப்படவே இல்லை கிட்டத்தட்ட 4000 வருடங்கள் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.  

குழுவின் தலைவியின் பெயர் ஆண்டி( Charlize Theron - Mad Max படத்தில் நாயகியாக வருபவர் தான்) . இவருடைய கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நடிப்பதற்கான காட்சிகள் எதுவும் அவ்வளவாக இல்லை. அக்ஷன் காட்சிகளில் கலக்கி இருக்கிறார்.  குழுவில் உள்ள மற்ற மூன்று பேர் கதாபாத்திரங்கள் அவ்வளவாக எடுபடவில்லை. நடிகர்களும் அவ்வளவாக தெரிந்த முகமாக இல்லை. 

காஃப்ளி ( Chiwetel Ejiofor - 12 Years a slave , 2012   போன்ற படங்களில் நடித்துள்ளார்) என்பவன்  இந்த சாகாவரம் பெற்ற குழுவை விஞ்ஞானியிடம் (Harry Melling)  கோர்த்து விடும் வேலையை செய்கிறான். அவன் ஏன் இவர்களை அந்த சைக்கோ விஞ்ஞானி இடம் கோர்த்து விடுகிறான் என்பதற்கு சொல்லப்படும் காரணம் அவ்வளவாக பொருந்தவில்லை. 


திடீரென்று நான்கு பேர் கனவிலும் நைல் (Kiki Layne) என்ற ஒரு இளம் அமெரிக்கா ராணுவ வீராங்கனை வருகிறார். இவ்வாறு கனவில் வந்தால் அந்த பெண்ணும் சாகாவரம் பெற்றவர் எனப்பொருள். அவரை தேடி கண்டுபிடித்து தங்களுடைய குழுவில் சேர்த்துக்கொள்கின்றனர். 

நைல் குழுவில் சேர்ந்து கொஞ்ச நாளில் குழுவின் தலைவி ஆண்டி சாகவரம் பெற்ற தன்மையை இழக்க ஆரம்பிக்கிறார். குழுவில் அனைவரும் என்னாச்சு என்னாச்சு என்று அதிர்ச்சி அடைகின்றனர். ஆனால் நமக்கு தெளிவாக நைல் வந்ததன் காரணமாகத்தான் இவ்வாறு நடக்கிறது அவர்தான் படத்தை முடித்து வைக்கப் போகிறார் என்பதும் தெரிகிறது. 

இதுபோன்று நாமே யூகிக்கக்கூடிய காட்சிகள் படத்தின் பலவீனம். 

படத்தை Gina Prince - Bythewood  என்ற பெண் இயக்குனர் இயக்கியுள்ளார். இதற்கு முன்னர் love and basketball என்று ஒரு படத்தை இயக்கியுள்ளார். கொஞ்சம் தேடிப் பார்த்தால் இந்தப் படம் நன்றாக இருக்கும் போல் தெரிகிறது. பார்க்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

மற்றபடி கொஞ்சம் வித்தியாசமான கதை அருமையான ஆக்சன் காட்சிகள் மற்றும் நாயகி இப்படத்தின் பாசிடிவ் விஷயங்கள். 

கொஞ்சம் மெதுவான திரைக்கதை மற்றும் கதாபாத்திரங்கள் மற்றும் யூகிக்கக்கூடிய காட்சி அமைப்பு படத்தின் நெகட்டிவ் விஷயங்கள். 
யார் இந்த நால்வரும்  மற்றும் எவ்வாறு சாகாவரம் பெற்றனர் என்பதை கூறியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். 

படத்தின் முடிவை வைத்து பார்க்கும் பொழுது இன்னொரு பாகம் வரும் என தெரிகிறது.

என்னை பொருத்தவரை ஒரு முறை பார்க்க வேண்டிய படம். 


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

My Microsoft Azure - AZ 900 Certification Journey.

இது மாதிரி நெறயா ஆர்ட்டிக்கிள் பார்த்து இருப்பீர்கள். ஆனா என்னோட பயணம் இந்த சர்ட்டிபிகேஷன் முடிச்சே ஆகணும் மற்றும் நேரம் குறைவு என்பதால் பரபரப்பாக  படித்தது. அதுனால ரொம்பவே ப்ராக்டிகலா இருக்கும். எல்லாருக்கும் ஒர்க் ஆகுமானு தெரியாதுங்க. அதனால இத அப்படியே எல்லாம் ஃபாலோ பண்ணாதீங்க.  இது நான் உபயோகித்த வழிமுறைகள் மட்டுமே. Just want to share my experience இந்த செப்டம்பர்க்குள்ள ஏதாவது ஒரு சர்ட்டிபிகேஷன் முடிக்க வேண்டும் என கம்பெனியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.  நான் படிச்சுட்டு இருந்தது GCP Exam க்கு.‌ஆனா திடிரென Azure & GCP எதுனாலும் படிக்கலாம் என்று சொல்லிட்டு நிறைய கட கடவென AZ 900 எழுதி பாஸ் ஆகிவிட்டார்கள்.  நான் எழுதுனா GCP தான் எழுதுவேன் என்று உக்காந்து இருந்தேன். ஆனா எனக்கு தெரிந்த கம்பெனி வட்டத்தில் யாரும் GCP எழுதவில்லை . அதனால் நம்பிக்கை கொஞ்சம் கம்மியாகவே இருந்தது.  இதற்கு நடுவில் ஒரு ஜீனியர் பையன் நான் AZ 900  முடிச்சுட்டேன் என்று கால் பண்ணான். எப்படிடா என்றதும் 2 லிங்கை வாட்ஸ்ஆப்பில் அனுப்பினான். இத மட்டும் படிச்சு தான் நான் பாஸ் ஆனேன் என்றான்.  இதற்கு நடுவில் எங்க

The Old Man - Season 1 (2022)

The Old Man Tamil Review - Season 1 இது ஒரு Action, Thriller, Drama Series.  1 Season, 7 Episodes (1 Episode Yet to release) Available @hulu இதுல ஹீரோ 70+ ல இருக்குற ஒரு வயசான தாத்தா (Jeff Bridges). திடிரென ஒரு நாள் ஒருத்தன் அவர கொல்ல வர்றான். இவரு யாரு ? எதுக்கு கொல்ல வர்றாங்க ? என்பதை சொல்கிறது தொடர்.  Dan Chase மனைவி இறந்த நிலையில் 2 நாய்களுடன் தனிமையில் வசிக்கிறார். திடீரென ஒருத்தன் இவரை கொல்ல வருகிறான் நடக்கும் சண்டையில் நாய்கள் உதவியுடன் அவனை கொன்று விடுகிறார்.  அதன் பிறகு வீட்டை காலி பண்ணிட்டு கிளம்புகிறார். அங்கிட்டு பார்த்தால் FBI ல ஒரு மிகப்பெரிய கூட்டமே இவர் தேடிட்டு இருக்கு.  யார் இந்த தாத்தா ? கிட்டத்தட்ட 30 வருடங்கள் அமைதியாக வாழ்ந்து வந்த இவரின் வாழ்க்கை திடீரென கலவர பூமியாக மாறுவதற்கு காரணம் என்ன என்பதை தற்போது நடக்கும் சம்பவங்கள் மற்றும் ஃப்ளாஷ்பேக் என மாறி மாறி பயணிக்கிறது படம்.  இவருடைய ஃப்ளாஷ் பேக் நடப்பது ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமிப்பு நடந்த சமயத்தில் நடந்த சம்பவங்கள். CIA ஏஜன்ட் ஆன இவர் அங்கு உள்ள ஒரு போராட்டக்குழுவுடன் சேர்ந்து ரஷ்யாவை எதிர்க்கிறான். அங்கு நடந்