முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மான்டேஜ் (Montage) - 2013


மான்டேஜ் (Montage) - 2013


கொரிய சட்டத்தின்படி 15 வருடங்களுக்குள் ஒரு வழக்கில் குற்றவாளியை கண்டுபிடித்து தண்டனை வழங்க முடியாமல் போனால், அந்த வழக்கு இழுத்து மூடப்படும். குழந்தை கடத்தப்பட்ட வழக்கு ஒன்று இதே போல்  குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால் இன்னும் 5 நாட்களில் இழுத்து மூடப்பட இருக்கிறது.

வழக்கை கையாண்ட அதிகாரி காணாமல் போன குழந்தையின் தாயிடம் சென்று இன்னும் 5 நாட்களில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்ற தகவலை கனத்த மனதுடன் சொல்கிறார். குழந்தையின் தாய் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த, அதிகாரியோ 15 வருடங்கள் ஆகியும் தன்னால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போனதே என்ற விரக்தியிலும் குற்ற உணர்ச்சியிலும் தவிக்கிறார்.

இந்த 5 நாட்களில் அவனை கண்டுபிடிக்க ஒரு இறுதி முயற்சி எடுக்கிறார். அதிர்ஷ்டவசமாக இது சம்பந்தமாக ஒரு துப்பு கிடைக்கிறது. அதை நூல் பிடித்துக்கொண்டு பின் தொடர்கிறார். ஆனால் கண்முன்னே மாட்டிய அந்த குற்றவாளி மயிரிழையில் தப்பித்து விடுகிறான். 5 நாட்கள் முடிகிறது, வழக்கும் இழுத்து மூடப்படுகிறது.

இந்த சமயத்தில், தன் தாத்தாவுடன் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை திடிரென்று காணாமல் போகிறது. 15 வருடங்களுக்கு முன் அந்த குழந்தை எப்படி காணாமல் போனதோ அதே போல சம்பவங்கள் மீண்டும் அரங்கேறுவதால் ஒரு வேளை தப்பித்த குற்றவாளி தான் மீண்டும் தன் கைவரிசையை காட்ட ஆரம்பித்துவிட்டானோ என்று போலீஸின் முழுக்கவனம் அந்தப்பக்கம் திரும்புகிறது.

மறுபுறம், குற்றவாளியின் கார் மற்றும் தவறவிட்ட குடை இந்த இரண்டை மட்டும் வைத்துக்கொண்டு அவனை கண்டுபிடிக்கும் முயற்சியில் தனியாக இறங்குகிறாள் குழந்தையின் தாய். ஒரு பக்கம் போலீஸ், மறுபக்கம் தாய் என ஒரே குற்றவாளியை நோக்கி பயணம் செய்கிறார்கள்.

குழந்தையை கடத்தியவன் போன் செய்து பணம் கேட்டு மிரட்டுகிறான். தாத்தாவை மட்டும் தனியாக வந்து பேசும் படி அழைக்கிறான். திடீரென குழந்தையின் தாத்தாவும் காணாமல் போகிறார். என்ன ஆனார் என்பது தெரியாது. அனைவரும் குழந்தையை மீட்பதில் குறியாக இருக்கிறார்கள். 15 ஆண்டுகளுக்கு முன் நடந்து போலவே, ஒரு கூட்டம் மிகுந்த ரயில்வே ஸ்டேஷனில் வைத்து பணத்தை பரிமாற்ற சொல்லி கேட்கிறான். சுற்றி போலீஸ் கண்காணிப்பு இருந்தும், அவர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு பணத்தை லாவகமாக எடுத்துக்கொண்டு ஓடுகிறான் ஒருவன். துரத்திச்சென்று பிடித்து யாரென்று பார்த்தால் குழந்தையின் தாத்தா.

கடத்தியவன் தான் தன்னை பணத்தை எடுத்து வந்து கொடுக்க சொல்லி சூழ்ச்சி செய்ததாக சொல்கிறார் தாத்தா. முதலில் அவர் கூறுவது உண்மையாக தெரிந்தாலும், டெலிபோன் குரல் மற்றும் சில சம்பவங்கள் சாட்சியங்களின் அடிப்படையில், குழந்தையின் தாத்தா தான் குற்றவாளி என முடிவு செய்கிறார்கள்.

ஆனால் பழைய வழக்கை விசாரித்த அந்த போலீஸ் அதிகாரிக்கு திருப்தி இல்லை. தாத்தா தான் கடத்தினார் என்றால் குழந்தை எங்கே என்று சக அதிகாரிகளுக்கு சவால் விடுகிறார். குழந்தையை எங்கோ கொன்று புதைந்திருக்கலாம், அதை விசாரணையில் வெளி கொண்டு வர வேண்டும் என்று சமாளித்து மழுப்பி தாத்தா தான் குற்றவாளி என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

இதில் உடன்பாடு இல்லாத அதிகாரி, உண்மையான குற்றவாளி இன்னும் வெளியே தான் இருக்கிறான் என்ற சந்தேகத்தில் தொடர்ந்து துப்பறிகிறான்.

மறுபக்கம், தனியாக துப்பறிந்து வந்த தாய், உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து அவன் வீட்டுக்கே சென்று விடுகிறாள். அங்கே யாரும் இல்லாததால், வீட்டினுள் நுழைந்து அங்கே இருக்கும் சில ஆதாரங்கள் மூலம் அவன் தான் உண்மையான குற்றவாளி என்பதை உறுதிப்படுத்துகிறாள்.

யார் அந்த உண்மையான குற்றவாளி? குழந்தையை காப்பாற்றினார்களா? என்பதை கடைசி சில நிமிடங்களில் பரபரப்பான திருப்பங்களுடன் சொல்கிறது இந்தப்படம்.

மைனஸ் (-)
15 வருட வித்தியாசம் நடிகர்களின் முகங்களில் தெரியவில்லை.
சில காட்சிகள்  கொஞ்சம் சினிமாத்தானமாக இருக்கிறது, மற்றபடி படம் அருமை.

பிளஸ் (+)
இறுதி காட்சிகளில் தான் மேஜிக்கை காண்பிக்கும் திரைக்கதை.
நடிகர்களின் நடிப்பு. முக்கியமாக தாயாக வரும் Uhm Junghwa-ன் நடிப்பு அருமை.
பின்னணி இசை கட்டிப்போடுகிறது.


 MONGTAJOO. SOUTH KOREA 2013. DIRECTED BY JUNG GEUN-SUB. STARRING UHM JUNG-HWA, KIM SANG-KYUNG, SONG YOUNG-CHANG, JO HEE-BONG, YOO SEUNG-MOK, LEE JOON-HYUK, PARK CHUL-MIN


By,
வேல்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

X - 2022

Horror, Porn  கலந்து இது போதாது என Slasher வகையும் சேர்த்து வந்துள்ள படம் இது.   IMDb 7.3 Tamil Dub ❌ OTT ❌ , 18+  Porn Film எடுக்க ஒரு பண்ணை வீட்டுக்கு போகும் குழுவிற்கு நேரம் கொடூரங்கள் தான் படம்.  Slasher படத்துக்கே எழுதி வைச்ச டெம்ப்ளேட்.  படம் நடப்பது 1979 ஆம் வருடத்தில்.. 3 ஜோடிகள் (Producer, Director, Actors)  அப்ப பிரபலமாகி வரும் வீடியோ கேசட் மார்க்கெட்டை மையமாக வைத்து மேட்டர் படம் எடுதது கேசட்டா‌ ரிலீஸ் பண்ணா நல்ல காசு பாக்கலாம் என ப்ளான் பண்ணுகிறார்கள்.  படத்தின் டைரக்டர Farmers Daughter's என ஒரு அருமையான மேட்டர் பட ஸ்கிரிப்டை ரெடி பண்ணுகிறார் 😜 .இதை ஒரு பண்ணை வீட்டில் வைத்து எடுத்தால் ரசிகர்கள் படத்துடன் ஒன்றி. விடுவார்கள் என ஐடியா பண்ணி இந்த குரூப் ஊருக்கு ஒதுக்கு புறமான ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கு சூட்டிங் போகிறார்கள்.  அந்த வீட்டின் ஓனர்ஸ் ஒரு வயதான தம்பதியர். ஓனர் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பதால் பிட்டு படம் எடுக்க வந்தோம் என சொல்லாமல் கமுக்கமாக படத்தே எடுக்கிறார்கள்.  ஆனா ஓனரம்மா இவர்கள் பிட்டு படம் எடுப்பதை பார்த்து விடுகிறது. அன்னிக்கு நைட் ஒவ்வொருத்தவங்களா கொடூர

The Old Man - Season 1 (2022)

The Old Man Tamil Review - Season 1 இது ஒரு Action, Thriller, Drama Series.  1 Season, 7 Episodes (1 Episode Yet to release) Available @hulu இதுல ஹீரோ 70+ ல இருக்குற ஒரு வயசான தாத்தா (Jeff Bridges). திடிரென ஒரு நாள் ஒருத்தன் அவர கொல்ல வர்றான். இவரு யாரு ? எதுக்கு கொல்ல வர்றாங்க ? என்பதை சொல்கிறது தொடர்.  Dan Chase மனைவி இறந்த நிலையில் 2 நாய்களுடன் தனிமையில் வசிக்கிறார். திடீரென ஒருத்தன் இவரை கொல்ல வருகிறான் நடக்கும் சண்டையில் நாய்கள் உதவியுடன் அவனை கொன்று விடுகிறார்.  அதன் பிறகு வீட்டை காலி பண்ணிட்டு கிளம்புகிறார். அங்கிட்டு பார்த்தால் FBI ல ஒரு மிகப்பெரிய கூட்டமே இவர் தேடிட்டு இருக்கு.  யார் இந்த தாத்தா ? கிட்டத்தட்ட 30 வருடங்கள் அமைதியாக வாழ்ந்து வந்த இவரின் வாழ்க்கை திடீரென கலவர பூமியாக மாறுவதற்கு காரணம் என்ன என்பதை தற்போது நடக்கும் சம்பவங்கள் மற்றும் ஃப்ளாஷ்பேக் என மாறி மாறி பயணிக்கிறது படம்.  இவருடைய ஃப்ளாஷ் பேக் நடப்பது ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமிப்பு நடந்த சமயத்தில் நடந்த சம்பவங்கள். CIA ஏஜன்ட் ஆன இவர் அங்கு உள்ள ஒரு போராட்டக்குழுவுடன் சேர்ந்து ரஷ்யாவை எதிர்க்கிறான். அங்கு நடந்