இயக்குனர்: விசென்சோ நடாலி
திரைக்கதை: விசென்சோ நடாலி
ஆண்டு: 2019
எழுத்தாளர் ஸ்டீபன் கிங்கின் படைப்புகளை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்கள் கடந்த சில ஆண்டுகளாக வந்த வண்ணம் உள்ளன.. சமீபத்தில் மட்டும் “பெட் செமட்டரி”, “இட் அத்தியாயம் 2” வெளியிடப்பட்டுள்ளன.
இந்த வரிசையில் பிரபல ஸ்டிரீமிங் சேவையை வழங்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தினால் ஸ்டீபன் கிங்கின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் இது.
ஸ்டீபன் கிங்கின் நாவல்கள் என்றாலே கொஞ்சம் அமானுஷ்யம் கலந்து பலவிதமான திருப்பங்களை கொண்டிருக்கும். இப்பொழுது இந்த திரைப்படத்தை பற்றி பார்க்கலாம்.
பெக்கி, ஒரு இளம் கர்ப்பிணி பெண் மற்றும் அவரது சகோதரர் கால் ஆகியோர் புல் வயல்களுக்கு இணையாக ஒரு நீண்ட சாலையில் பயணிக்கிறார்கள்.
பெக்கி உடல்நிலை காரணமாக வாந்தி எடுப்பதற்காக காரை ஓரமாக நிறுத்துகின்றனர்.
பெக்கிக்கு ஒரு சிறுவன் புல்லுக்குள் இருந்து உதவி கேட்கும் குரல் கேட்கிறது.
அவர்கள் அச்சிறுவனுக்கு உதவும் பொருட்டு அவனைத் தேட புல் வெளிக்குள் நுழைகின்றனர் தேடச் செல்கிறார்கள்.
உள்ளே நுழைந்த பின் பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்கின்றன. சிறிது நேரத்தில் இந்த புல்வெளியில் இயற்கைக்கு அப்பாற்பட்ட மற்றும் ஆபத்தான விஷயங்கள் அங்கு நடைபெறுவதையும் அவர்கள் உணர்கிறார்கள்.
உதாரணமாக ஒருவர் பேசுவது மற்றவருக்கு கேட்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் வேறு வேறு திசையில் கேட்கிறது. அண்ணன் தங்கை இருவரும் பிரிந்த நிலையில் எவ்வளவு தூரத்தில் இருக்கிறோம் என்பது தெரிந்து கொள்வதற்காக ஒரே சமயத்தில் குதிப்போம் என்று முடிவுசெய்து குதிக்கின்றனர். முதல் முறை இருவருக்குமிடையில் 10 மீட்டர் இடைவேளை உள்ளதுபோல் தெரிகிறது. அதை உறுதி செய்வதற்காக மற்றொரு முறை குதிக்கின்றனர் இம்முறை 100 மீட்டர் இடைவெளி காட்டுகிறது. இருவரும் பீதியடைய ஆரம்பிக்கிறார்கள்.
புல்வெளி உள்ளே இதற்கு முன்னர் காணாமல் போன குடும்பத்தையும் சந்திக்கின்றனர். புல்வெளியில் நடுவில் அமானுஷ்ய சக்தி கொண்ட ஒரு குன்று உள்ளது. பல நிகழ்வுகள் அந்த குன்றைச் சுற்றி நடக்கின்றது.
இந்த குழு தப்பித்தார்களா? எவ்வாறு இந்த நகரும் புல்வெளியில் இருந்து பாதையை கண்டுபிடித்து வெளியே வந்தார்கள் என்பதுதான் கதை.
ஒளிப்பதிவு மற்றும் இசை அருமை. ஒரே புல்வெளிக்குள் 90 நிமிடங்கள் ஓடும் படத்தை எடுப்பது சாதாரணமான விஷயம் இல்லை. குறைந்த கதாபாத்திரங்களை கொண்டு ஒரே புல்வெளிக்குள் மிக அருமையான திகில் படத்தை எடுத்துள்ளார் இயக்குனர்.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஹாரர் திரைப்படம்.
Cast:
Patrick Wilson (Ross Humboldt), Harrison Gilbertson (Travis McKean), Laysla De Oliveira (Becky DeMuth), Avery Whitted (Cal DeMuth), Will Buie Jr. (Tobin Humboldt), Rachel Wilson (Natalie Humboldt)
கருத்துகள்
கருத்துரையிடுக