முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹெர் (Her) - 2013

ஹெர் (Her) - 2013

எதிர்காலத்தில் நடக்கும் கதை.
தனிமையில் இருக்கும் ஒரு எழுத்தாளன் அவன் வீட்டு கணினியில் உள்ள செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கொண்ட OS (Operating System) மீது காதலில் விழுகிறார். இந்த வினோதமான காதல் நீடிக்குமா?

தியோடர் (ஜாக்யுன் பீனிக்ஸ் - Joaquin Phoenix) விவாகரத்திற்காக காத்திருக்கும் ஒரு எழுத்தாளர். அவர் handwrittenletters.com என்ற நிறுவனத்தில் பிறருக்காக  பாசம் சொட்ட சொட்ட கடிதம் எழுதும் பணி.  பக்கத்து வீட்டு பெண் மற்றும் நண்பியான ஏமி (ஏமி ஆடம்ஸ் - Amy Adams) தவிர வேறு யாருடனும் பேசுவது கிடையாது. வேலை செய்யும் நேரம் போக மற்ற நேரங்களில் சோசியல் நெட்வொர்க் மற்றும் வீடியோ கேம்ஸ் விளையாடி பொழுதைக் கழிக்கிறார்.

புதிதாக OS1 என்ற OS விளம்பரத்தைப் பார்த்த உடன் வாங்கி விடுகிறார். ஆனால் மற்ற OS போல இல்லாமல் இது மனித உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு. ஏற்றவாறு மாற்றி கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டது. அது தனக்கு தானே சமந்தா (ஸ்கார்லெட் ஜான்சன்) என பெயர் சூட்டி கொள்கிறது.  கொஞ்சம் நேரத்தில் அதை பிடித்து விடுகிறது.

கொஞ்சம் நாளில் அதனுடன் அதிக நேரம் செலவிட ஆரம்பிக்கிறார். சமந்தாவுடன் டேட்டிங் செல்கிறார் , அலுவலகத்தில் உள்ளவர்களுடன் பிக்னிக் அழைத்து செல்கிறார் (ஆம் OS ஐ தான் !)
இருவரும் காதலில் விழுகின்றனர்.

இந்த வினோதமான சாத்தியம் இல்லாத காதலின் முடிவு என்ன என்பதை படத்தில் காணுங்கள் ‌

தியோடர் கதாபாத்திரத்தில் ஜாக்யுன் பீனிக்ஸ் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சோகம் கலந்த தனிமையில் இருக்கும் ஒரு எழுத்தாளன் கதாபாத்திரம் கன கச்சிதமாக இவருக்கு பொருந்துகிறது.

சமந்தாவுக்கு குரல் கொடுத்தவர் ஸ்கார்லெட் ஜான்சன். திரையில் வராத குறை தெரியாமல் குரலிலேயே சமந்தாவாக வாழ்ந்து இருக்கிறார். என்ன ஒரு குரல் அவருக்கு !!! தியோடர் காதலில் விழுந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

ஒளிப்பதிவு மற்றும் இசை படத்திற்கு உயிர் கொடுத்து உள்ளது. 

பளீர் வண்ணங்கள் மற்றும் எதிர் காலத்தில் நகரம் எவ்வாறு இருக்கும் என்பதை  காட்சிப்படுத்திய விதம் அருமை.

பிண்ணனி இசை படத்திற்கு உயிர் கொடுத்து இருக்கிறது. உதாரணமாக மனைவியை நேரில் சந்தித்து விவாகரத்து பத்திரத்தில் கையொப்பம் இடுவார்கள். அப்போது பேனா பேப்பரில் எழுதும் போது வரும் சத்தத்துடன் மனைவியுடன் பகிர்ந்த சந்தோஷமாக இருந்த தருணங்களை அசை போடுவார். பல இடங்களில் மென்மையான இசை மனதை வருடி செல்லும்.

ஷபைக் ஜொன்ஸ் எழுதி இயக்கியுள்ளார். மிகச்சிறந்த ஒரு திரைப்படத்தை உருவாக்கியதற்கு பாராட்டுக்கள். 

இப்பொழுது‌ உள்ள கால கட்டத்தில் சிரி, கூகுள் அசிஸ்டன்ட் என பல AI நமது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதே போல சென்றால் AI உடன் டேட்டிங் செய்யத் தொடங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை சொல்வதை போல தெரிகிறது..

நெட்ஃபிளிக்ஸ்ஸில் உள்ளது : https://www.netflix.com/title/70278933?s=a&trkid=13747225&t=cp

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kadaisi Nodigal - 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  ஊருக்குள் வரிசையாக சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். Forensic Expert ஆன ஹீரோ அந்த கொலை கேஸ்களை விசாரிக்கும் பெண் போலீஸ் உடன் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது தான் படம்.  படம் ஆரம்பத்தில் நன்றாக போகிறது..அதுக்கு அப்புறம் சில ட்விஸ்ட்கள் நன்றாக இருக்கிறது . பிற்பகுதியில் கொஞ்சம் ஸ்லோவா போய் க்ளைமாக்ஸ்ஸில் எல்லா மர்ம முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகிறது.  கொரியன் படங்கள் தான் இந்த மாதிரி கதைக்களங்களை அசால்ட்டாக டீல் பண்ணுவார்கள். சில இடங்களை யூகித்து விடலாம் மற்றபடி நல்ல முயற்சி.  கண்டிப்பா பார்க்கலாம் 👍 Trailer: 

எட்ஜ் ஆஃப் டுமாரோ - Edge Of Tomorrow (2014)

எட்ஜ் ஆஃப் டுமாரோ - Edge Of Tomorrow (2014) Tamil Review  இது பிரபல நாயகன் டாம் ஃகுரூஸ் (Tom Cruise) மற்றும் எமிலி (Emily Blunt) இணைந்து நடித்த டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வித்தியாசமான படம். ஏலியன்கள் பூமியை கைப்பற்ற போர் தொடுக்கின்றன. மிகவும் புத்திசாலித்தனமான இருப்பதால் மனித இனத்தால் தாக்கு பிடிக்க முடியாமல் பெருத்த அளவில் உயிர் சேதங்கள் ஏற்படுகின்றது. இந்நிலையில் உள்குத்து அரசியல் காரணங்களால் இது வரை போர்களமே கண்டிராத டாம் க்ரூஸ் நேராக போருக்கு அனுப்பப்படுகிறார். ஐந்து நிமிடங்களில் ஏலியனால் கொல்லப்பட்டு இறந்து விடுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக டைம் லூப்பில் மாட்டிக் கொள்கிறார். எழும் போது போர்களத்தில் எழுகிறார் சண்டை போடுகிறார் மறுபடியும் இறந்து போகிறார். ஒவ்வொரு சுழற்சியின் போதும் புதிதாக சண்டை நுணுக்கங்களை கற்று படத்தில் ராணுவ வீரராக வரும் நாயகியுடன் இணைந்து ஏலியன் தலைவன் ஆன ஆல்ஃபா வை வீழ்த்தி மனித இனத்தை காப்பாற்றினார்களா என்பதே முடிவு. மிகவும் புதிதான கதையம்சம் மற்றும் இயக்கம். போர் காட்சிகள் சிறப்பான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக ‌பார்க்க வேண்டி

My Microsoft Azure - AZ 900 Certification Journey.

இது மாதிரி நெறயா ஆர்ட்டிக்கிள் பார்த்து இருப்பீர்கள். ஆனா என்னோட பயணம் இந்த சர்ட்டிபிகேஷன் முடிச்சே ஆகணும் மற்றும் நேரம் குறைவு என்பதால் பரபரப்பாக  படித்தது. அதுனால ரொம்பவே ப்ராக்டிகலா இருக்கும். எல்லாருக்கும் ஒர்க் ஆகுமானு தெரியாதுங்க. அதனால இத அப்படியே எல்லாம் ஃபாலோ பண்ணாதீங்க.  இது நான் உபயோகித்த வழிமுறைகள் மட்டுமே. Just want to share my experience இந்த செப்டம்பர்க்குள்ள ஏதாவது ஒரு சர்ட்டிபிகேஷன் முடிக்க வேண்டும் என கம்பெனியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.  நான் படிச்சுட்டு இருந்தது GCP Exam க்கு.‌ஆனா திடிரென Azure & GCP எதுனாலும் படிக்கலாம் என்று சொல்லிட்டு நிறைய கட கடவென AZ 900 எழுதி பாஸ் ஆகிவிட்டார்கள்.  நான் எழுதுனா GCP தான் எழுதுவேன் என்று உக்காந்து இருந்தேன். ஆனா எனக்கு தெரிந்த கம்பெனி வட்டத்தில் யாரும் GCP எழுதவில்லை . அதனால் நம்பிக்கை கொஞ்சம் கம்மியாகவே இருந்தது.  இதற்கு நடுவில் ஒரு ஜீனியர் பையன் நான் AZ 900  முடிச்சுட்டேன் என்று கால் பண்ணான். எப்படிடா என்றதும் 2 லிங்கை வாட்ஸ்ஆப்பில் அனுப்பினான். இத மட்டும் படிச்சு தான் நான் பாஸ் ஆனேன் என்றான்.  இதற்கு நடுவில் எங்க