புல்ஃப்புல்(Bulbbul) - 2020
இது ஒரு அமானுஷ்யம் கலந்த திகில் திரைப்படம். சமூகத்தில் நடக்கும் பெண் கொடுமைகள் பற்றி சொல்லும் திரைப்படம்.
படத்தில் வரும் சம்பவங்கள் சுதந்திரத்திற்கு முந்தைய பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் (1881 - 1901) நடக்கிறது.
1881 ல் ஆரம்பிக்கிறது கதை. ஒரு திருமண வீடு காட்டப்படுகிறது. சிறிது நேரத்தில் அது ஒரு குழந்தை திருமணம் என்றும் மணமகன் (இந்தரனில்) ஜமீன் என்றும் தெரியவருகிறது.
குழந்தை பெயர் புல்ஃபுல் ஆனால் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் முன் திருமணம் முடித்து ஜமீன் குடும்பத்தினருடன் அனுப்பப்படுகிறாள் . போகும் வழியில் மணமகனின் கடைசி தம்பி சத்யா அவளுக்கு கதை சொல்கிறான். சத்யாவை புல்ஃப்புல்க்கு மிகவும் பிடிக்கிறது.
படம் 20 வருடங்கள் முன்னோக்கி நகர்கிறது. சத்யா 5 வருடங்கள் கழித்து படித்து முடித்து மீண்டும் ஜமீனுக்குள் வருகிறான்.
புல்ஃபுல் நேர்த்தியான உடை மற்றும் நகைகள் அணிந்து உலா வருகிறார்.
ஊருக்குள் தொடர்ச்சியாக மர்மமான மரணங்கள் நிகழ்கின்றன. சத்யாவின் இன்னொரு மனநலம் பாதிக்கப்பட்ட அண்ணன் கொடுரமாக கொல்லப்படுகிறார். இதற்கு காரணம் கால் ஊனமுற்ற ஒரு பெண் பேய் என்று ஊருக்குள் சொல்கிறார்கள்.
புல்ஃபுல்லின் கணவராகிய இன்னொரு அண்ணண் போன இடம் தெரியவில்லை.
இந்நிலையில் சத்யா குற்றவாளிகளை கண்டறிய களத்தில் இறங்குகிறான். அவனுக்கு சுதீப் எனும் மருத்துவர் மீது சந்தேகம் வருகிறது.
சத்யா கொலை செய்தவர்களை கணடுபிடித்தானா? புல்ஃபுல் கணவன் என்ன ஆனான் என்பதை சொல்கிறது படம்.
படத்தின் திரைக்கதை மிகவும் மெதுவாக செல்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தேவைப்படும் நேரத்தை ஒதுக்கி உள்ளார் இயக்குனர்.
பேய் வரும் காட்சிகளில் சிவப்பு வண்ணம் மிகையாக பயன்படுத்த பட்டுள்ளது. அக்காட்சிகள் பனி படர்ந்த ஃபேண்டஸி உலகத்தில் நடப்பது போல உள்ளது. பழைய காலத்தில் நடப்பது போன்ற படம் ஆனால் மிகுதியான வண்ணங்கள் காரணமாக அந்த உணர்வு படம் பார்ப்பவர்களுக்கு வருவது கொஞ்சம் கஷ்டம் தான். மற்றபடி படம் முழுவதும் திகில் படத்திற்கு ஏற்ற ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது.
படத்தின் கதையை பெரும்பாலானோர் எளிதாக யூகிக்க முடியும். படத்தில் பேய் யார் என்று யூகிக்க வேறு கதாபாத்திரங்கள் இல்லாதது மிகப்பெரிய குறை.
ஒரு முறை பார்க்கலாம்.
நெட்ஃபிளிக்ஸ்ஸில் உள்ளது: https://www.netflix.com/title/81029150?s=a&trkid=13747225&t=cp
கருத்துகள்
கருத்துரையிடுக