அமெலி (Amélie)
இது 2001 ல் வெளியான ஃப்ரெஞ்ச் திரைப்படம்.
அமெலி எனும் இளம்பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு பகுதியை சொல்லும் திரைப்படம்.
அமெலி ஒரு உணவகத்தில் சர்வராக வேலை செய்கிறார்.
ஒரு தருணத்தில் மற்றவர்களை மகிழ்ச்சி அடையச் செய்வது அவளுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இதனால் சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க திட்டம் போடுகிறார்.
உதாரணமாக கண் பார்வை தெரியாதவர் ஒருவருக்கு வழி காட்டும் போது சுற்றி நடக்கும் சம்பவங்களை சுவாரஸ்யமாக கூறி கொண்டே வருகிறார்.அது கண் பார்வை தெரியாதவருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
அமெலி கண்பார்வை தெரியாதவருக்கு உதவும் காட்சி: https://youtu.be/MOD11gnTKyA
நன்றி : YouTube
(கஜினி படத்தில் அசின் வழி காட்டும் காட்சி ஞாபகம் வந்தால் நான் பொறுப்பு அல்ல)
இது போன்ற சின்ன சின்ன அழகான தருணங்கள் நிறைய படம் முழுவதும் உண்டு.
இவ்வாறு மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்து எவ்வாறு தனக்கு ஏற்ற துணையை கண்டுபிடிக்கிறார் என்பது தான் முடிவு.
மிக அருமையான மற்றும் ஜாலியான படம் கண்டிப்பாக பாருங்கள்.
Watch Trailer:
கருத்துகள்
கருத்துரையிடுக