6 அண்டர்கிரவுண்ட் (6 Underground)

 6 அண்டர்கிரவுண்ட் (6 Underground)


இது ஒரு ஆக்ஷ்ன் மசாலா திரைப்படம். ஒரு வார இறுதியில் பார்க்க ‌சிறந்த படம் நம்ம ஊரு ரஜினி , விஜய் படங்கள் வரிசையில்  சேர்க்க கூடிய நல்ல பொழுதுபோக்கு திரைப்படம். 
அதனால் லாஜிக் பார்ப்பவர்கள் இந்த படத்தை தவிர்க்கவும். 

மிகப்பெரிய கோடீஸ்வரராக உள்ள One ( ரேயான் ரெனால்ட்ஸ்  - Ryan Reynolds ) . ஆமாம் படத்தில் யாருக்கும் பெயர் கிடையாது நம்பர் மட்டுமே. 
மக்களுக்கு நல்லது செய்ய முடிவு செய்கிறார். ஆனால் எந்த இடையூறும் இல்லாமல் நினைத்தபடி செயல்பட ஏதுவாக தான் இறந்து விட்டதாக உலகை நம்ப வைக்கிறார். 


இதேபோல் போலியான இறப்பை ஏற்றுக் கொள்ள கூடிய இன்னும் 5 நபர்களை தயார் செய்து ஒரு குழுவை அமைக்கிறார்.

இவர்கள் அனைவரும் இணைந்து உலக நாடுகளின் அரசாங்கம் கூட செய்ய தயங்கும் விஷயங்களை‌ செய்கின்றனர். 

டர்கிஸ்தான்( Turgistan) எனும் நாட்டில் ‌கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது. அந்த கொடுர அதிபரை பதவியில் இருந்து தூக்கிவிட்டு அவரின் தம்பியை அதிபராக்குவதை குறிக்கோளாக கொண்டு களமிறங்குகிறது இந்த ஆறு பேர் கொண்ட படை. 

படத்தின் ஆரம்பமே அதிரடியான கார் சேசிங்கில் இருந்து தொடங்குகிறது. இத்தாலியின் சந்து பொந்துக்களில் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் நீள்கிறது. 


டிரான்ஸ்பார்மர் ( Transformor), ஃபேட் பாய்ஸ் (Bad Boys) போன்ற படங்களை இயக்கிய மைக்கேல் பே இயக்கி உள்ளார். 

ஆக்ஷ்ன் படம் மற்றும் மசாலா பட ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கலாம். 

நெட்ஃபிளிக்ஸ்ஸில் உள்ளது : https://www.netflix.com/title/81001887?s=a&trkid=13747225&t=cp
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்