கார்கோ (Cargo) - 2017 இது ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த ஜாம்பி (Zombie) திரைப்படம். ஜாம்பி திரைப்படங்களுக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் உண்டு(நானும் அதில் ஒருவன்) . பல பரிமாணங்களில் ஜாம்பி படங்கள் வந்து விட்டது. உதாரணமாக சீரியசான ஜாம்பி படங்கள் ( REC, 28 Days Later, Resident Evil etc., ), காமெடி கலந்த ஜாம்பி படங்கள் ( Shaun of the dead,. Zombieland 1 & 2 ), ஜாம்பியை காதல் செய்வது (Warm bodies) என இன்னும் பல வகையான ஜாம்பி படங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இதிலிருந்து கொஞ்சம் மாறுபட்ட படம் தான் கார்கோ. ஜாம்பி படங்களில் பொதுவாக சில எழுதப்படாத விதிமுறைகள் உள்ளன. உதாரணமாக ஜாம்பி கடித்தாலோ இல்லை அதன் ரத்தம் பட்டாலோ பாதிக்கப்பட்ட நபர் சிறிது நேரத்தில் ஜாம்பியாக மாறிவிடுவார், மூளையில் சுட்டாலும் அல்லது குத்தினாலும் ஜாம்பி செயல் இழந்து விடும். ஆனால் இந்த படத்தில் கடி வாங்கிய பின் 48 மணிநேரம் கழித்து தான் முழு ஜாம்பியாக மாறுவார்கள். இது தான் இந்த படத்தை நகர்த்தி செல்கிறது. பொதுவாக ஜாம்பி படங்கள் பற்றியும் மற்றும் இந்த திரைப்படத்துக்கு உண்டான விதிமுறைகளை தெரிந்து கொண்டோம் 😀. இப்பொழுத
ஹாலிவுட் மற்றும் கொரியன் திரைப்பட விமர்சனங்கள் - Hollywood and Korean Movie Reviews in Tamil