அப் (Up) Movie Review In Tamil
இது ஒரு அருமையான உணர்வுப்பூர்வமான திரைப்படம். அனிமேஷன் முறையில் படமாக்கப்பட்டுள்ளது. கண்கலங்க வைக்கும் தருணங்கள் நிறைய உண்டு அதற்காக அழுகை படம் என்று நினைக்க வேண்டாம். படம் முழுக்க நகைச்சுவை இழைந்து ஓடும்.
76 வயது முதியவர் கார்ல் தனியாக வசித்து வருகிறார். மனைவியின் ஆசை பேரடைஸ் ஃபால்ஸ் இடத்தில் மலை உச்சியில் வீடு கட்டி வாழ்வது. ஆனால் பல காரணங்களினால் முடியாமல் போகிறது. ஆசை நிறைவேறாமலே இறந்து போகிறார்.
பல நெருக்கடி காரணமாக வீட்டை காலி செய்யும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார். மனைவியுடன் பல வருடங்கள் வாழ்ந்த வீட்டை பிரிய மனமில்லை.
ஒரு நன்னாளில் ஆயிரக்கணக்கான பலூன்களை வீட்டின் மீது கட்டி வீட்டோடு பெயர்த்து கொண்டு பாரடைஸ் ஃபால்ஸ் நோக்கி கிளம்புகிறார்.
எதிர்பாராத விதமாக ஒரு சிறுவன் பறக்கும் வீட்டில் மாட்டிக் கொள்கிறான். இன்னும் ஒரு தருணத்தில் ராட்சத பறவையுடன் நண்பர்கள் ஆகிறார்கள்.
பாரடைஸ் ஃபால்ஸ் ல் வில்லன் பல வருடங்களாக இவர்களின் நண்பனான அந்த அபூர்வமான இராட்சத பறவையை பிடிப்பதற்கு காத்திருக்கிறான்.
கார்ல் , சிறுவன் இணைந்து அந்த பறவையை காப்பாற்றினார்களா? யார் அந்த வில்லன் ? போன்ற கேள்விகளோடு படம் சுவாரஸ்யமாக செல்கிறது.
நானும் என் மகனும் இணைந்து பார்த்த திரைப்படம். அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தது. எனக்கும் ரொம்ப பிடித்த படம்.
கண்டிப்பாக குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய படம்.
கருத்துகள்
கருத்துரையிடுக